(Reading time: 15 - 30 minutes)

தொடர்கதை - தாரிகை - 20 - மதி நிலா

series1/thaarigai

வருடம் : 2004..

ன்று பதினொன்றாம் வகுப்பிற்கு கடைசி பரிட்சை..!!

முதல்நாள் லாவண்யாவுடன் பேசியதால் மிகவும் உற்சாகமாகவே காணப்பட்டான் தரண்யன்..!!

அதில் தனது மனக்குழப்பங்கள் கவலைகள் என அனைத்துமே பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்தது தரணுக்கு..!!

வழக்கம்போல் தனக்குப்பிடித்த பாடலை முணுமுணுத்தபடி பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்தவன் தனது சைக்கிளை அதன் இடத்தில் நிறுத்த.. அவனைக் கடந்து சென்ற அவனது கிளாஸ் பிள்ளைகள் எல்லாம் தங்களுக்குள் எதையோ பேசி இவனைக் கேலியாகப் பார்த்துவிட்டுச் சென்றுகொண்டிருந்தனர்..!!

மற்றவர்களின் செயல்கள் எல்லாம் அவன் கருத்திலும் கவனத்திலும் சுத்தமாக பதிந்திருக்கவே இல்லை..!!

தனது புத்தகைப் பையை எடுத்துத் தோளில் மாற்றிக்கொண்டவன்.. தனது கிளாசிற்குள் நுழைய கொல்லென்ற சிரிப்பு சத்தம்..!!

“என்னடா என்ன விஷயம் எல்லாரும் சிரிச்சுட்டே இருக்கீங்க..??”, அவனுக்கும் அவர்களின் சிரிப்பில் சிரிப்பே..!!

அவன் கேட்டதற்கு பதில் இல்லமால் மீண்டும் ஒரு சிரிப்பு.. அதுவும் இன்னும் சத்தமாக..!!

“என்னடா இதுங்க..?? நான் கேக்கறது பதில் சொல்லாம லூசு மாதிரி சிரிக்கறங்க..??”, அப்பொழுதும் அவர்கள் தன்னை கிண்டல் செய்து சிரிக்கிறார்கள் என்று புரியவில்லை அவனுக்கு..!!

“லூசுங்களா.. சொல்லிட்டு சிரிங்க..”, தனது சிரிப்பை அடக்க முயன்ற அவன் சொல்ல..

சிலரின் கைகள் பிளாக் போர்டின் புறம் நீட்டப்பட.. அதை நோக்கி திரும்பியது தரணின் கண்கள்..!!

சுனாமிப்பேரலைகளின் தாக்குதலுக்கு முன்னால் கடலுக்கு நடுவில் ஏற்படும் அதிர்வுகளைப்போல் அதிர்ந்துபோனது தரணின் மனது..!!

சொட்டு சொட்டாக வேர்வைத்துளிகள் வேறு அவன் நெற்றியில்..!!

போர்டில் பதியப்பட்டிருந்த அவனது கண்கள் இன்னும் அதைவிட்டு அகலாததாக..!!

தனது இதயத்துடுப்பு தனக்கே கேட்பதுபோல் ஒரு பிரம்மை..!!

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

எல்லாருக்கும் முன் நிர்வானமாக நிற்பதுபோல்..!!

கூனிக்குறுகிப்போனது அவனது உடல்..!!

கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது அவனுக்கு..!!

தன்னை மற்றவர்கள் கேலி செய்வதை சுத்தமாக அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை..!!

அப்படியே இன்விஸிபிள்ளாகிப்போனால் என்ன என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை அவனுக்கு..!!

ஆனால் அவன் நினைப்புகள் எல்லாம் வெறும் கற்பனைகளின் உச்சம்தானே..!!

அந்த இடத்தைவிட்டு ஓடிச்செல்ல மனது கட்டளைகள் பிறப்பித்தபொழுதும்.. அவன் கால்கள் அங்கிருந்து ஓட மறுப்பதாக..!!

வேறூன்றிப்போய் நின்றுவிட்டது அவனது கால்கள்..!!

இருந்தும் ஒன்றை மட்டும் உணர்ந்துகொள்ளவில்லை அவனது மனது..!!

அந்த பிளாக் போர்டில் வரையப்பட்டிருப்பதை மற்ற மாணவர்கள் எல்லாம் ஜஸ்ட் ஒரு ஃபன்னாக எடுத்து கேலி செய்கிறார்கள் என்று..!!

சுத்தமாக புரிந்திருக்கவில்லை அவனுக்கு..!!

புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு மழுங்கடிக்கப்பட்டிருந்தது அவனது மூளை..!!

“டேய்.. பெல் அடிச்சாச்சுடா.. சார் இப்ப வந்திடுவார்.. சத்தம் போடாதீங்கடா..”, கத்திக்கொண்டே நுழைந்தான் கதிர்..

அன்று அவன் ஸ்கூலிற்கு கொஞ்சம் லேட்..!!

கதிரின் சத்தத்தில், “வந்துட்டான்டா கதிரு.. இனி சத்தம் போட்டா கொன்னுடுவான்..”, என்று தங்களுக்குள் முணுமுணுத்தவர்கள் தங்களது இறுக்கையில் போய் அமர்ந்துகொள்ள..

தரண் மட்டும் தான் நின்றிருந்த இடத்தைவிட்டு கொஞ்சமும் அசைந்திடவில்லை..!!

பிடித்துவைத்த பிள்ளையார் என்பார்களே.. அதுபோல் அசையாமல் கொஞ்சமும் அசையும் எண்ணமில்லாமல் அதே இடத்தில் போர்டையே வெறித்துப்பார்த்தபடி..!!

“தரண்.. உனக்கு மட்டும் தனியா சொல்லனுமாடா.. போய் உட்காரு போ..”, தரணைப் பார்த்தும் அவன் சத்தம்போட..

அசைவில்லை அவனிடம்..!! அசைந்திருக்கவில்லை அவன்..!!

இன்னும் அவனது கண்கள் போர்டின் மீதே..!!

“டேய்.. எரும.. உன்னைத்தான்டா சொல்றேன்.. போய் உட்கார்ந்துதொலை..”, அவனது முதுகில் கைவைத்துத் தள்ளிட..

“க..தி..ர்..”, பிசிறியது தரணின் குரல்..

“என்னாச்சுடா..??”, என்ற கதிரின் கண்களிலும் பட்டுத்தொலைத்தது அது..!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.