(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - காதல் இளவரசி – 20 - லதா சரவணன்

kadhal ilavarasi

பாம்பிடம் இருந்து தப்பி முதலையின் வாயில் சிக்குவதைப் போல ப்ரியனின் சதி வலையில் இருந்து தப்பியது இந்த கொடுமையான சுறாவிற்கு இரையாகத்தானோ என்று பத்மினியின் இதயம் தாறுமாறாய் எகிறியது, இன்னும் சில விநாடிக்குள் அந்த சுறாமீனின் வயிற்றுக்குள் செல்லப்போகிறோம் என்று நினைக்கும் போதே, பத்மினியின் இருந்த இடத்திற்கு அருகில் ஒரு சிறு சுவர் போல் முளைத்தது அதனுள் சில வயர்கள் ஒன்றோடோன்று பிண்ணிப் பிணைந்து இருக்க அந்த சிக்கலுக்குள் சுறாமீன் உட்புகுந்து கொண்டது அதன்பின் மீண்டும் அந்த சுவர்கள் உள் அமுங்கிக்கொண்டன.

நடந்த எதையும் தன் கண்களாலேயே நம்ப முடியவில்லை ஒரே நாளில் இத்தனை வியப்புமிகு விஷயங்களா ? சற்றே நிதானித்துவிட்டு அந்த இடத்தை மேலும் ஆராய்ந்தாள் ஒரு சிறு ஆய்வுக்கூடம் போல் தோன்றமளித்தளது அவ்விடம் கடலுக்குள் இப்படியொரு சுரங்கப்பாதை தானாக அமைய வாய்ப்பில்லை இங்கே ஏதோ ஒரு தவறான நடவடிக்கைகள் நடத்தப்படுகிறது அதிலும் அந்த சுறாமீன் உண்மையானதும் அல்ல, அன்று உத்ராவும் தானும் கண்டது இந்த சுறாவாகத்தான் இருக்குமோ ? அப்படியானால் அன்று எங்களைப் பயமுறுத்த வேண்டும் என்றே யாராலோ ? யாராலோ என்ன அந்த பரத்தானே இந்த ஏற்பாட்டிற்கெல்லாம் காரணம் அவனாகத்தான் இருக்கமுடியும், கடலுக்குள் தேவையில்லாமல் போக வேண்டும் என்று சொன்னது அக்கறையா இல்லை தன் கயமைத்தனம் வெளியே தெரியக் கூடாது என்ற எண்ணத்தினாலா ? ஆனால் பரத்தின் முகத்தில் அவ்வளவு கொடூரம் இல்லையே ?

அப்படியானால் பால் வடியும் பிள்ளையைப் போல இருந்து கொண்டு இந்த ப்ரியன் செய்த காரியம். அப்பாவி பெண்ணை சூறையாடி அவளை கொன்றிருக்கிறான் இதோ எனக்கு அத்தனை விவரமும் தெரிந்து விட்டது என்றுதானே பிளாஸ்டிக் கவரில் கட்டி பரலோகம் அனுப்பப் பார்த்திரக்கிறான். 

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

என் அதிர்ஷ்டம் இந்த சுரங்கபாதைக்குள் வந்து சிக்கிக்கொண்டது எதனாலோ பட்டு அந்த பாலீதீன் கவர் கிழியாவிட்டால் இன்னேரம் நான் இறந்து இதோ இதைப் போன்ற ஏதாவது ஒரு விலங்கிற்கு இரையாகி இருப்பேன். யோசித்து யோசித்து தலை வலித்தது உத்ராவிற்கு மீண்டும் சிறிது நேரத்தில் சுறாமீன் அந்த வயர் கட்டுக்குள் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு பத்மினியை லட்சியம் செய்யாமல் மேல் நோக்கி மிதந்தது, எப்போதும் தயாராக தன் உடைக்குள் மறைத்து வைத்திருந்த பேனாக் கத்தியின் மூலம் அந்த சுவற்றின் மெல்லிய விலகலை தடுத்தாள் வயர் குமிழ்கள் வர தைரியம் வரப்பெற்றவளாய் அதனுள் நுழைந்தாள் பத்மினி அது ஒரு மின்சாரக் கூடம் போல் இருந்தது. கடலுக்கு அடியில் இத்தனை வெப்பம் சேர்ந்த இடம் எப்படி இருக்க முடியும். 

சந்தேகப்பட்டதைப் போலவே அது செயற்கையாய் உருவாக்கப்பட்ட சுறாமீன் என்று தெரிந்து போனது ஆனா அதை இயக்கும் வல்லமை யாரிடம் உள்ளது என்பதுதான் அப்போதைய சந்தேகமாய் இருந்தது அவளிற்கு ! அந்த சிறிய இடத்தை ஆராய்ந்தாள் நடக்கும் நிகழ்வுகளை உள்வாங்கும் கேமிராவின் இணைப்பைத் துண்டித்தாள். ஆனால் இதுவும் ஆபத்துதான் ஒருவேளை இதை தொடர்ந்து யாரேனும் கண்காணித்துக் கொண்டு இருக்கலாம் இணைப்புத் துண்டிக்கப்பட்டு விட்டதால் அந்த கயவர்கள் மூலம் எந்நேரமும் தனக்கு ஆபத்து வரும் அதற்குள் இங்கிருந்து தப்பியாக வேண்டும் இத்தனை ரகசிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறதென்றால் நிச்சயம் இங்கே ஏதோ ஒன்று அரசாகத்திற்கு எதிராக நடந்து வருகிறது என்பதை அவளால் உணர முடிந்தது ஆனால் அதை கண்டுபிடிப்பது எப்படி ? 

சில ரேடார் பதிவுகள் அலைவரிசைகளால் அங்கே ஒடிக்கொண்டு இருக்க, அங்கிருந்த கணிப்பொறியைத் தட்டினாள், விவரங்கள் வழுக்கிக் கொண்டு வந்தது. கடலில் பவளப்பாறைகள் பாதுகாப்பிற்காக ஒரு குழு அமைத்து கனிமவளமான யுரேனியத்தை யாருடைய சந்தேகமும் இல்லாமல் அந்நிய நாட்டிற்கு விற்பதே இவர்களின் நோக்கம் என்பதும் புரிந்து போனது சில பல தகவல்கள், கடிதங்கள், ஒப்பந்தங்கள் என அனைத்தையும் அந்த கொடூரமான கும்பலைப் பிடிக்க ஏதுவாய் சிக்கியது ஆனால் இதற்கெல்லாம் மூலக் காரணம் யார் ?

பவளப்பாறைகளை மீண்டும் செயற்கைத்தனமாய் உருவாக்குவதே கடல் வெப்பமயமாவதை தடுக்கத்தான் ஆனால் கனிமவளங்கள் உருகுவதன் மூலம் மேலும் அல்லவா வெப்பசலனம் ஏற்படும் இது இன்னமும் ஆபத்தை உருவாக்குமே ? மனம் நிறைய பயத்தோடு மீண்டும் கண்களை ஓடவிட்டாள்.

சில கடிதங்களில் சத்யா நிக்கோலஸ், ப்ரியன் என்று பெயர்கள் அடிபட்டு இருந்தது, அப்போது இந்த கும்பலில் பிரியனும் ஒருவன் என்று தெரிந்தது பத்மினிக்கு ஆனால் இந்த பவளப்பாறைகள் பாதுகாப்பு ஏற்பாட்டை அரசாங்கத்திடம் இருந்து பெற்றவன் பரத், சத்யா என்ற நண்பன் ஒருவனும் அதற்கு கூட்டு என்று ஒருமுறை பரத் சொல்லியிருக்கிறான். அப்படியென்றால் பரத்தை பயன்படுத்தி இந்த சதி வேலை நடக்கிறதா இதை அவன் அறிந்திருக்கவில்லையா, நாட்டின் கனிம வளங்கள் எப்படியெல்லாம் சூறையாடப்படுகிறது. இதனால் எத்தனை ஆபத்துகள் விளையும் வெறும் பணத்திற்காக நடைபெறும் இத்துரோகக்கள் நாட்டையே சீர்குலைக்குமே, இதையெப்படி மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவது முதலில் நான் இந்த இடத்தில் இருந்து தப்பித்தால் அல்லவா இத்துரோகத்தை மற்றவர்களிடம் சொல்லமுடியும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.