(Reading time: 6 - 11 minutes)

தொடர்கதை - என் காதலே – 01 - ரம்யா

En kathale

ன் பெயர் கயல்விழி.என் கைக்கோர்த்து என் வாழ்க்கையின் சில பக்கங்கள் பயணிக்க வாங்க.

அழகான அமைதியான கிராமம்....இருங்க அப்படி இல்ல என்கதை.சற்று இரைச்சலான ஆனால் எதிலும் ஒரு உயிரோட்டமுள்ள டவுன் தான் என் ஊர்.ஆற்றங்கரையில் சிவனும் விஷ்ணுவும் தனக்கென வீடுகட்டிக்கொண்டு ஒன்றாக வசிக்கும் ஊர்.பல இன மக்கள் ஒற்றுமையா அன்பா பழகும் சின்ன பாரதம் எங்க ஊர்.நடந்தே முழு ஊரையும்சுற்றி வரலாம்.அவ்வளவு அழகு.பெரிய வீதிகள்,பொட்டிகடைகள்,விளையாட்டு திடல்,சினிமா தியேட்டர்,துணிககடைகள்,டீ கடைகள் எல்லாமே அழகு.இன்னும் அழகு சேர்ப்பது கோபுரங்கள்.கோபுரம் உள்ளநுழைந்தாலே ஆளைத்தூக்கும் காற்று, கோபுரத்த தாங்கி புடிச்ச மாதிரி பொம்மைகள்.உட்புறமா சின்ன திண்ணைகள்,அதுல உட்கார்ந்து மழைஇரசிக்கிறது தனி சுகம்.சொட்ட சொட்ட நனைஞ்ச கோபுரத்த பார்க்கிறதுல தனி ஆனந்தம்.

எங்க ஊர் அழகா தெர்ய காரணம் அவை தந்த இனிக்கும் நினைவுகள்.அதுக்கு காரணமான என் குடும்பம். அப்பா!இந்த உலகத்துல எங்க இந்த வார்த்தை கேட்டாலும் என் கண்ணில் கருத்தில் தெரியும் ஒரே முகம் என் அப்பா இராமசந்திரன். அன்பான ஆசிரியர்.அவருக்கு ஏற்ற அம்மா ஜானகி.இவர்களோட அன்பான வாரிசுகளான அண்ணன் ரகு தம்பி கண்ணண் நடுவில் நான். என்னை சுற்றி அன்பு மயம்.அமைதியான குடும்பமோ ன்னு கற்பனை பண்ணாதீங்க.எப்பவும் ஓயாத சத்தம் தான் வீட்டில். அம்மா அப்பா சண்டையில்லாத வீடா.என்னன்னு தெரியாம சண்டை வரும்.உடனே சட்டைய மாட்டிக்கொண்டு வெளியே செல்லும் அப்பா அவர் திரும்பும் போது சூடான காபி தரும் அம்மா.அது தான் காதல்ன்னு அப்போ புரியல.

இவங்க சண்டைக்கு சலைச்சதில்லை எங்க ரகளை.ரகு ஒரு சுத்தக்காரன்.கண்ணண் சேட்டைக்காரன்.நடுவில் நான் பலிஆடு.ரகு என் ஆசான் மரியாதை அதிகம் அவனிடம்.மூத்தவன் என்ற பொறுப்பு மிக்கவன்.எல்லா நேரங்களிலும் எனக்கு பக்கபலமானவன்.பொடியன் என் குழந்தை ,தோழன்,சண்டைக்கான சரி ஜோடி.ரொம்ப சுவாரஸ்யமான எளிமையான வாழ்க்கை. கவலைகள் அண்டாத பருவம்.அப்பா உழைப்பில் மட்டும் இயங்கிய குடும்பம்.அதனால வரவு செலவு அறிஞ்ச வளர்ப்பு.அளவுக்கு அதிகமா பொருள் வாங்கவோ சேர்க்கவோ கூடாதுங்கற வைராக்கியம் இயல்பா அமைந்தது.சிறந்த சில விஷயங்கள் பார்த்து பார்த்து தான் பழக்கத்தில் வரும்.கற்றுக்கொடுக்கனங்கறது இல்லை. இயலாமை இல்லாதபோதும் ஆடம்பரம் மீது பற்று இல்லாமல் போச்சு.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

தரையில் பாய் போட்டு ஒரே போர்வைக்குள்ள நானும் அம்மாவும். கீழே உட்கார்ந்து எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டு சிரித்து மகிழ்ந்த தருணங்கள்.பக்கத்துல விளைஞ்ச காய்கனிகள் அன்றாடம் வாங்கி வந்து சமையல்.அக்கம்பக்கம் வீட்டோடு இருந்த குடுக்கல்வாங்கல்.அன்யோன்யமான அன்பு நெஞ்சங்கள்.தண்ணீர் ஆரம்பித்து எல்லாமே சிக்கனமாக செலவு. அம்மா மனசரிஞ்ச அப்பா,அப்பா பாக்கெட் அறிஞ்ச அம்மா.எளிமை எளிமைன்னு எந்த குறையும் வச்சதில்லை.குழந்தை பருவம் என்னவெல்லாம் கேட்குமோ அது எல்லாம் கிடைத்தது. பொருளைவிட மனிதனை நேசிக்கும் வாழ்க்கை. உண்மையிலேயே எளிமையான வாழ்க்கை தான் நிம்மதியான வாழ்க்கை. கால ஓட்டத்தில் இதை தொலைத்துவிட்டு இன்றைக்கு மினிமலிஸம் ன்னு வெளிநாட்டாள் சொல்லும் பாடம் நாம் இப்போ வாய்மூடி தலையாட்டி கேட்டகிறோம்.கொடுமை.நம்ம முன்னவன் சொன்ன வழி நடந்தாலே பல அற்புதங்கள் புரியும்.அப்பா இன்று வரைக்கும் அப்படி தான் இருக்கார்.

 அப்பா மகள் உறவு ஒரு அற்புதம் தான் அதிசயம் தான்.தன்னோடபெண் உருவா மகளை பார்க்கிறார்.தன் அன்னையையும் பார்க்கிறார்.என் அப்பா இன்று வரை என் உற்ற தோழன் தான். குழந்தையா இருந்தபோது என் கூட தவழ்ந்தார்.என் கூட கூட்டாஞ்சோறு சாப்பட்டார்.வளர்ந்த பின் எனக்கு நிறைய புத்தகங்கள் அறிமுகப்படுத்தினார்.பருவம் வந்த போது மற்றவர் முன்னிலையில் எப்படி கௌரவமாக தெரிய வேண்டுமென தெளிவு படுத்தினார்.பல சமயங்களில் தாயுமானார்.ரகு கண்ணண் விட அதிக அன்பு என்னிடம் தான். அவர் அதை மறுத்தாலும் உண்மை அதுவே.ரகுவிற்கு பாடம் சொல்லிததரும் போதும் சரி கண்ணணுடன் விளையாடும்போதும் சரி வயதிற்கு ஏற்றாற்போல் மாறிப்போவார்.அப்பா தான் என் ஹீரோ.

அம்மா எல்லா அம்மா போல கண்டிப்ப பேர்வழி தான். ஆனால்அன்பு சுரக்கும் அமுதசுரபி.நல்லா பாடுவா.சாஸ்திரியம் படிச்சிருக்கா.ஆனா அதை கொண்டு சம்பாதிக்க நினைச்சதில்லை.எங்க குடும்பம் தான் அவ உலகம்.மன அமைதிக்காகவும் தன் உற்சாகத்துக்காகவும் பாடுவா.வாய் மட்டுமல்ல அவ கையும் பாடும்.சமையல் ராணி.ஆனால் கற்றது கையளவங்கற அடக்கம்.ஆசிரியர் ஆகனும்னு ஆசை அவளுக்கு ஆனால் குடும்ப பொறுப்புகள் சுமக்க ஆரம்பிச்சதும் அதுவே தன் முதல்கடமைன்னு முடிவு பண்ணிட்டா.அதுக்காக என்றைக்குமே புலம்பினதோ கிடையாது.வாழ்க்கை போற திசையில் தன்னை செலுக்கிட்டா.ஒவ்வொரு நாளும் திருவிழா என்பது தான் அவ தாரகமந்திரம்.ஆனால் எங்கள பற்றின கவலை படும்போது சராசரி அம்மா.

பாட்டு அவ தந்த வரம் எனக்கு.நான் ஆசிரியர் ஆகனும்னு தான் அம்மா அப்பா ஆசை ஆனால் என் மேல அந்த எண்ணங்கள் திணிச்சது இல்லை.தன் பிள்ளைகள் மீது கதன் கனவுகளை திணிக்காத பெற்றோர் கிடைப்பது வரம் தானே.ரகு கண்ணண் இருவரையும் வெளியூர் அனுப்பி படிக்க வைத்தார் அப்பா நான் மட்டும் கூட்டுக்குறுவியா அம்மா அப்பா அரவணைப்பில பக்கத்து ஊர் கல்லூரியில் படிச்சேன.சாதாரண ஆசிரியர் சம்பளத்தில எங்க மூன்று பேரையும் எப்படி படிக்க வைத்தார் என்பது இன்று வரை புதிர் தான். அண்ணன் தம்பி விட உலக அறவு எனக்கு குறைச்சல் தான். அதனாவலேயே வேலை தேடி சென்னை அனுப்ப்பட்டேன். ரகு தான் முக்கிய காரணம். அவன் எனக்கு இனனொறு தந்தை. பெண்கள் சமூக அறிவோட தன் சொந்த கால்களை நம்பி இருக்கனுங்கறது தான் அவன் எண்ணம்.என்னுடைய மிகப்பெரிய உந்துதல் அவன் தான். குடும்பம தாண்டி என் நட்பு வட்டம்.சிறிய வட்டம் தான் ஆனாலும் உண்மையான நட்புகள்.அதிலும் யாதவ் என் உயிர் தோழன்.இந்ந அழகிய உலகம் தவிர வேறேதும் அறியாத நான் இப்போது சிங்கார சென்னையில்.விடுதியில். சென்னை எனக்கு நிறைய புது அனுபவங்கள் தந்தது.சில இனிப்பு சில கசப்பு.எல்லா அனுபவங்களுமே பாடங்கள் தானே.சென்னை தந்த இனிமையான பரிசு காதல்.என்னை மாற்றி என் உலகை மாற்றிய காதல்.

சிற்பம் செதுக்கப்படும்

Episode # 02

Go to En Kathale story main page

{kunena_discuss:1244}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.