(Reading time: 10 - 19 minutes)

என்னவென்று அனுமானிக்கும் முன்பே பரத்வாஜரின் கைகளில் ஒரு பையைத் திணித்தவர், “இதெல்லாம் நிஷாவுக்கானது.. இவளை எப்படியாவது நல்லா கரைசேர்த்திடுங்கண்ணா..”, என்று தனது கரங்களை ஒன்று சேர்த்து கும்பிட.. அத்தனை சங்கடம் பரத்வாஜிற்குள்..!!

காரணம் அந்தப் பை நிறைய நகைகள்.. கூடவே நிஷாவின் சில சான்றிதழ்கள்..!!

நிஷாவின் சான்றிதழ்களை மட்டும் தன்னிடம் வைத்துக்கொண்டவர் நகைப் பையை அவரிடம் நீட்டி, “நிஷாவும் தாரிகை மாதிரிதான்.. இவளை நாங்க பார்த்துக்கறோம்.. இதெல்லாம் வேண்டாம்மா..”, என்றிட..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

மறுப்பாய் அசைந்தது அவரது தலை..!!

“ஏதோ காசுக்காக இவளை நாங்க பார்த்துக்கற மாதிரி இருக்கும்மா.. வேண்டாமே..”, என எவ்வளவு எடுத்துச் சொல்லியும் என்னவோ வாங்கவே மறுத்துவிட்டார் நிஷாவின் தாயார்..!!

“அண்ணா.. தப்பா எடுத்துக்காதீங்க.. உங்க எண்ணம் புரியாமல் இல்லை எனக்கு.. ஆனா இதை மறுக்காதீங்க.. இது நிஷாவுக்காக நான் கொடுக்கறது.. இனி இவளை பார்க்கமுடியுமோ முடியாதோ தெரியாது எனக்கு.. ஏதாவது இவளுக்குன்னு நான் கொடுக்கனும்னு நினைக்க்றேன்.. வாங்கிக்கோங்க ப்ளீஸ்..”

இன்னுமே அதைத் தன் கையில் வாங்கிக்கொள்ள விருப்பமில்லை பரத்வாஜுக்கு..!! அப்படியொரு யோசனை அவருக்குள்..!!

பையைப் பிடித்திருந்த கை இன்னும் நிஷாவின் தாயாருக்கு முன்னால் நீண்டிருக்க.. அந்தப் பையை சட்டென்று எடுத்துக்கொண்டாள் நிஷா..!!

“நிஷா என்னடா பண்ற நீ..??”, பரத்வாஜரிடமிருந்து அதட்டல் பிறந்திருக்க.. நிஷாவின் தாயாரின் முகத்தில் ஆசுவாசம்..

“ப்பா.. இது அம்மா கொடுத்தது.. வேண்டாம்ன்னு சொல்லக்கூடாது..”, என்றவள் தனது தாயை பார்த்து கண்கலங்கி நிற்க..

அறைகுறையாய் சம்மதித்திருந்தார் பரத்வாஜ்..!!

“ரொம்ப சந்தோஷம் அண்ணா..”, முந்தானையில் தனது கண்களைத் துடைத்துக்கொண்டவர், “வீடு தேடி வந்தவங்களை இப்படியே வாசலோட அனுப்பக்கூடாதுதான்.. அதுவும் நீங்க என் பொண்ணை வேற இவ்ளோ பத்திரமா பாத்துக்கும்போது.. கண்டிப்பா இது தப்புதான்.. ஆனா வேற வழியில்லை எங்கிட்ட.. நீங்க இங்க வந்தது தெரிஞ்சாலே பூகம்பம் வெடிக்கும் இங்க.. அதுவும் நிஷாவை அவிங்க என்ன வேணும்னாலும் பண்ணிடுவாங்க..”, என்றவர் மீண்டும் அழத்துவங்க.. தாரிகையின் கண்களில் கண்ணீர்..!!

“அழாதீங்கம்மா.. நான் நிஷாவை நல்லாப் பார்த்துப்பேன்.. கண்டிப்பா..”, வேடிக்கை மட்டுமே அதுவரை பார்த்தபடி இருந்தவள் சொல்லிட.. அவ்வளவு நிம்மதியாய் உணர்ந்தார் நிஷாவின் தாயார்..!!

வணக்கம் தோழமைகளே..

அனைவருக்கும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!!

இந்த வாரப்பதிவை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும்..!!

நன்றி..!! 

உருவெடுப்பாள்..

Episode # 23

Episode # 25

{kunena_discuss:1168}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.