(Reading time: 14 - 27 minutes)

தொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 07 - மகி

valentines

ச்சோ.. மணி இப்பவே 5.00 ஆச்சே.. நான் எப்போ கிளம்பரது.. இன்னும் வேளை எல்லாம் முடியலையே.. இன்னும் எவ்வளவு வேளையிருக்கே.. தன் போக்கில் புலம்பிக்கொண்டிருந்த மனைவியை கண்ணில் காதலும் உதட்டில் நமட்டுபுன்னகையுமாக பார்த்துக்கொண்டு இருந்தார்.. சிவஞானம்,

அவர் சிரிப்பதை பார்த்த பார்வதி..

உங்களுக்கு என்ன கவலை.. என்ன பாத்து நல்லா சிரிங்க.. உங்களால எனக்கு வேற என்ன பிரோயோசனம் இருக்கு.. கோவத்தில் கத்திய மனைவிய புன்னகையுடன் வந்து அணைத்து கொண்டவர்...

எதுக்குடி இப்படி பறக்கர.. கொஞ்சம் பொறுமையா இரும்மா.. பாசமாக கூறினார்..

போங்க எனக்கு எவ்வளவு வேளையிருக்கு தெரியுமா.. உங்களுக்கு என்ன..

எதுக்குடி இவ்வளவு வேகம்.. இப்போ தான் மணி 5.00 இன்னும் ரொம்ப நேரம் இருக்குமா.. நீ பொறுமையாவே செய்யலாம்டா.. நீ யாருக்காக இப்படி எல்லாம் பன்னரீயோ அவளே இதை பாத்தா சிரிக்க போரா..

அது எல்லாம் ஒன்னும் சிரிக்கமாட்டா என்னோட மனுகுட்டி.. அவ ரொம்ப சமத்து..

பார்ரா.... இப்போவே என்னா சப்போட்டு..

ஆமா என்னோட பொண்ணுக்கு நான் சப்போர்ட் பன்னாம வேர யார் பன்னுவாங்க..

நீங்க போங்க.. நான் கொஞ்சம் வேளைய முடிச்சிட்டு வரேன்..

ஏய்... நீ எல்லா வேளையும் முடிச்சிட்ட.. இனி கிளம்ப வேண்டியது தான் பாக்கி..

அது சரி.. அவளுக்கு சாக்லெட் ரொம்ப பிடிக்கும்.. போங்க போயி வாங்கிட்டு வாங்க.. சாக்லெட்,கல்லபரிப்பி,இன்னும் எதாவதுன்னு வாங்கிட்டு வாங்க..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

உத்தரவு மகாராணி.. நீங்க சொல்லீ நான் எதை செய்யலைன்னு சொல்ல முடியுமா.. தங்கள் ஆணையை நான் சிரமேற்கொண்டு செய்து முடிப்பேன்.. தூயதமிழில் இடைவரை குனிந்து பணியாள் போல் அவர் சொல்லவும்..

உங்களுக்கு வர வர ரொம்ப குறும்பு அதிகமாயிருச்சுங்க.. போங்க போய் எல்லாத்தையும் வாங்கிட்டு வாங்க..

அவர் வெளியே சென்றவுடன்.. அனைத்தையும் சரி பார்த்துக்கொண்டார்.. தன்னாலே அவருக்கு மனுவை சந்தித்த முதல்நாள் ஞாபகம் வந்தது..

வழக்கம் போல தன் வேளைகளை எல்லாம் முடித்துவிட்டு அமர்ந்திருந்தார்... எதையோ நினைத்துக்கொண்டிருந்தவரின் கண்களை இரு கரம் வந்து மூடியது.. திடீர்யென்று நடந்தால் சற்று பதற்றம் அடைந்தவர்.. யாரு..

யாருன்னு கண்டுபிடிங்க பாப்போம்.. அப்படி கண்டுபிடிச்சா ஒரு சாக்லெட் கிடைக்கும்..

எல்லையில்ல இன்பத்தில் மனுகுட்டி என அவர் அழைத்தார்..

ஏ.... சூப்பர்.. கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க.. என அவர் கழுத்தை கட்டிக்கொண்டு கன்னத்தோடு கன்னம்வைத்தாள்..

அதில் தெரிந்த உண்மயான பாசத்தில் நெகிழ்தவர் கண்ணில் தன்னையும் அறியாமல் கண்ணீர் துளி எட்டி பார்த்தது..

அச்சோ... ஸ்வீட்டி.. நான் ரொம்ப கெட்டிய பிடிச்சிட்டனா.. கழுத்து வழிக்குதா ஸ்வீட்டி.. அவள் கொஞ்சவே..

இல்லடாம்மா.. நீ இப்படி இருக்கரது தான் எனக்கு ரொம்ப பிடிச்சுயிருக்கு.. என அவளுக்கு ஒருமுத்ததையும் கொடுத்தார்..

அடடா.. எனக்கு போட்டியா நீ வந்திருவ போல.. என்னோட பாரு எனக்கு மட்டும் கொடுக்கரதுல பங்குக்கு ஆள் வந்திருச்சு போல.. கூறிவிட்டு மனைவியை பார்த்து கண்ணடித்தார் சிவஞானம்..

போங்க.. மனுகுட்டி கூட எல்லாம் போட்டி போடுவீங்கலா நீங்க.. முறைத்தார்..

அதானே எனக்கு இல்லாத உரிமையா.. என பார்வதியின் கழுத்தை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தம் வைத்தாள் மனு..  அதில் இருந்த அன்பிலும்.. அவள் கொடுத்த முத்தத்தின் தித்திப்பிலும் சிலித்தார்..

என்னம்மா நீ வீட்டுக்கு வந்த பொண்ணை உட்கார வச்சு எதாவது சாப்பிட கொடு..

நான் மறந்தே போயிட்டேன்ங்க.. இதோ அவர் திரும்பவே டைனிங் டேபிலில் அமர்ந்து ஒரு பிடி பிடித்துக்கொண்டு இருந்தாள் மனு..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சாகம்பரியின் "மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம்" - மர்மமும் காதலும் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

சிறு புன்னகையுடன் அருகில் சென்ற இருவரையும்.. வாங்க சாப்பிடலாம்.. ஸ்வீட்டி குருக்கு சாப்பாடு வைங்க.. ரசம் அருமையா இருக்கு ஸ்வீட்டி.. நீங்களும் சாப்பிடுங்க..

ஏய் ஓட்டவாய் கொஞ்சமாவது டீசன்ட் இருக்கா.. அவங்க வீட்டுக்கு வந்து அவங்களையே வாங்க சாப்பிடலாம்ன்னு யாரும் கேக்கமாட்டாங்க உன்னைதவிர.. என கேட்டுக்கொண்டே ஆகாஷ் உள்ளே வந்தான்..

டீஜடன்டு எங்க விக்கிகுதுன்னு கேட்டுவச்சுக்கோ.. போகும் போது நல்லா நெரையாவே வாங்கிட்டு போகலாம்.. சாப்பிட்டுக்கொண்டே அவள் கூறினாள்.. அவளின் ஒவ்வொறு செய்யலையும் அன்பாக ரசித்துக்கொண்டிருந்தார்.. பார்வதி..

பாரும்மா.. இவன் ஆகாஷ்.. என சிவஞானம் அறிமுபடுத்தும் முன்னரே..

என்னோட பையன்.. என்று அவர் கூறும் முன்பே மனு கூறியிருந்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.