(Reading time: 7 - 13 minutes)

தொடர்கதை - தாரிகை - 27 - மதி நிலா

series1/thaarigai

வார்த்தைகளும்.. அதன் வீரியங்களும்..!! சிலது கொல்லும்.. சிலது வெல்லும்..!! வெற்றியின் வார்த்தைகள் தாரிகையின் முன்னேற்றத்திற்கென்றால் நிதினின் வார்த்தைகள் அவளின் பின்னேற்றத்திற்கு..!!

அர்ஜுனனின் அம்பு பறவையின் கண்ணை தவறாது தாக்கியதுபோல் நிதினின் வார்த்தைகள் தாரிகையின் நெஞ்சினைத் தாக்கி அப்படியே நிலைக்குலைத்துவிட்டது..!!

தன்னாலும் முடியும் என்று மனதில் வெற்றியால் பதியவைத்திருந்த வார்த்தைகள் யாவும் கடலுக்குள் கலக்கப்படும் இனிப்புப்போல் மறந்துபோக.. நிதினின் வார்த்தைகள் மட்டுமே பிரதானமாக..!!

இவன் இப்படித்தான்.. இப்படித்தான் பேசுவான் என்று முன்பே அறிந்திருந்த ஒன்றுதான்..!! ஆனால் லாவண்யா..?? தாரிகையின் லாவி அல்லவா அவள்.. எப்படி முடிந்ததாம் அவளால்..?? அதுவும் எப்பொழுதும் எனது நலனையே எண்ணுபவள் அல்லவா..?? அவள் என்னை எடுத்தெறிந்து தூற்றினாளா..??

எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை அனைவரும் பார்த்திடும் விதம்..!! அருங்காட்சியாத்தில் வைத்திருக்கும் காட்சிப்பொருள் போல்..!!

மண்ணில் புதைந்துவிடலாம்..!!

“தரண்யா.. வா வெளியில் போகலாம்..”, கதிருக்கு என்ன தோன்றியதோ தாரிகையை வெளியே போகலாம் என்று அழைத்திருந்தான்..

தாரிகைக்கும் மூச்சுமுட்டும் உணர்வு..!! தன்னைச் சுற்றி இன்னும் அனைவரும் நின்றுகொண்டிருக்க தயக்கமாய் கண்களில் நீருடன் எழுந்திருந்தாள் அவள்..!!

“கிளம்பு கிளம்பு.. காத்து வரட்டும்..”, அவளது ஒவ்வொரு செயலையும் கண்டு மனதை நோகடித்துக்கொண்டிருந்தான் நிதின்..!!

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஒருபுறம் கோபம் ஒருபுறம் இயலாமை..!! ஒன்றுமே செய்யமுடியவில்லை பெண்ணால்..!! எதிர்த்தால் அதற்கும் நிதின் ஏதாவது பேசி தனது மனதை நோகடிப்பான் என்று..!!

முதல் பெல் அடிக்க இன்னும் ஒரு ஐந்து நிமிடம் இருந்ததால் வசதியாகிப்போனது இருவருக்கும்..!! அடுத்து யாரும் தாரிகையை கேலி செய்வதற்குள் அவளைப் பிடித்தி இழுத்தபடி வெளியேறியேயிருந்தாள்..!!

நேராக சைக்கிள் நிறுத்தியிருக்கும் இடத்திற்கு சென்றவர்கள் அதன் அருகே இருந்த மரத்தடியில் அமர.. அவளையே பார்த்தபடி கதிர்..!!

“கதிர் நான் வீட்டுக்கு போகனும்..”, அதற்குமேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை அவளால்..!!

அதுதான் அவனது மனதிற்கும் தோன்றியதால் சரியென்றிருந்தான் அவன்..!!

இருவரும் யாருக்கும் தெரியாமல் வெளியேறிட முயல.. இதற்காகத்தான் நான் காத்திருந்தேன் என்பதாய் தோன்றிய வெற்றி தாரிகையை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்திருந்தான்..!!

என்னவோ இவளால் இன்று சமாளித்த முடியாது என்று தோன்றிட தனது அலுவகத்திலிருந்து வந்திருந்தான் வெற்றி..!!

ன்று இரவு பதினொன்று இருக்கும்.. தாரிகையின் அறையிலிருந்து அவ்வளவு சத்தம்..!! என்னவோ இடியே அதன்மீது வீழ்ந்துவிட்டதுபோல்..!! தடபுடவென பரத்வாஜுடன் என்னவோ ஏதோ என்று வெற்றியும் கீதாஞ்சலியும் எழுந்து வர.. தாரிகையின் அறைக்கதவை தட்டிக்கொண்டிருந்தாள் நிஷா..!!

“அக்கா.. என்னாச்சு.. திறங்க.. அப்பா.. மாமா.. அம்மா.. வாங்க.. அக்கா.. திறக்கமாட்டேங்கறாங்க..”, நிஷாவின் குரலில் நடுக்கமும் பதற்றமும்..!!

தாரிகையின் அறைக்கதவை வேகமாய் தட்டிய வெற்றி, “தாருமா.. கதவைத் திற..”, விடாமல் தொடர்ந்த தட்ட.. உள்ளிருந்து மீண்டும் கீழே விழுந்து எந்தப்போருளோ உடையும் சத்தம்..

“தாரிகா.. என்ன பண்ற..?? கதவைத் திறந்துவிடு..”, பரத்வாஜ் தனது பங்கிற்கு அவளை அழைத்திட.. அவருக்கும் பதிலில்லை அவளிடம்..!!

மூவரும் தங்களால் முடிந்தமட்டும் அவளை அழைத்துப்பார்த்திட.. இன்னும் இன்னும் சத்தம் கூடிக்கொண்டே போனது..!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "நெஞ்சோடு கலந்திடு உறவாலே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“மாமா.. கதவை உடைத்துவிடலாம்..”, இறுதியாய் வெற்றி சொல்ல..

“வேண்டா.. வேண்டாம்.. ஏதாவது பண்ணிக்கப் போறா அவ..”, அவசரகதியில் பதில் வந்தது கீதாஞ்சலியிடமிருந்து..!!

ஆம்.. வார்த்தைகள் வந்து விழுந்தது அவரிடமிருந்துதான்..!!

அங்கு நடந்துகொண்டிருந்தவைகளை மௌனமாய் அதுவரைப் பார்த்துக்கொண்டிருந்த கீதாஜலிக்கு ஒருவித படபடப்பை ஏற்பட்டு பயத்தை மனதிற்குள் விதைத்திருந்தது..!! எங்கே தாரிகை ஏதாவது செய்துகொள்வாலோ என்று..!! கையைப்பிசைந்தபடி கண்களில் நீருடன் நின்றுகொண்டிருந்தார் அவர்..!! என்ன இருந்தாலும் தனது உதிரம் அல்லவா..?? அவருக்கு அவளது மாற்றங்கள் பிடிக்கவில்லை.. அதை மட்டுமே மொத்தமும் மொத்தமாக வெறுப்பவர்..!!

தரண்யன்.. கீதாஞ்சலியின் தரண்யன்..!! மிகவும் பிடிக்கும் அவருக்கு..!! தரணியை ஆளப்பிறந்ததால் தரண்யன் என ஆசையாசையாய் பெயர் சூட்டியவர் அவர்தான்..!! என்னவோ தனக்கே தனக்கென்று இறைவன் கொடுத்த ஒரே வரம் தன் மகன் என்ற நினைப்பு அவருக்கு..!! அப்படிப்பட்டவனை எப்படி வெறுத்திட முடியுமாம்..??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.