(Reading time: 16 - 32 minutes)

தொடர்கதை - என் காதலே – 09 - ரம்யா

En kathale

ன் அப்பா வரும் வரை காத்திருந்து என்னை அவரிடம் ஒப்படைக்கும் அளவிற்கு என் மீது அவன் காட்டும் அக்கறை இன்னமும் அவனை நேசிக்க செய்தது. பிரிவு என்பது உடலளவே.அவனை நானே என்றும் தொடர்பு கொள்ள மாட்டேன் என்று ஏன் சொன்னேன்.எனக்கென்ன அத்தனை கோபம்.அத்தனை அகங்காரம். ஆனால் நான அவனோடு தொடர்பில் இருப்பது அவனுக்கு பாரமாகும தான்.அவன் நிம்மதியாக அவன் கடமைகளை நிறைவேற்றட்டும்.நாட்கள் ஓடின்.என் நிலை மட்டும் தேங்கியது தொலைத்த அவனை எங்கு தேடுவது என்றே தெரியாமலேயே தேடித்தேடி தேய்ந்து போனேன்.எந்த சூழ்நிலையிலும் உனக்காக நான் இருப்பேன் அப்பாவின்இந்த வார்த்த்தைகள் மட்டுமே ஆறுதலாய் இருந்தது. இன்னொருவருககு நான் என்ற நிலமை வாராமல் காத்தது.

"கயல் காதல் கடந்து வாழ்க்கை இருக்கு மா.இந்த உலகத்தில் நீ அறிய வேண்டிய தெளியவேண்டிய விஷயங்கள் பல இருககு மா.அதுக்கும் நேரம் ஒதுக்கு மா.காதல ஒரு அத்தியாயம் அது உன்ககு தரும் வலிக்காக இந்த வாழ்க்கையே வேண்டாம்னு தூககி எறிய கூடாது.

இரணங்களோடும் சோகங்களோடும் பயணப்பட பழகு கயல்.உன் மனசின் திசையை மாற்று. புதுசா ஒரு அத்தியாயம் ஆரம்பித்து காட்டு.வாழ்க்கையில் என்ன நடந்தாலும் இதுவும் கடந்து போகும் மறக்காதே.எந்த சோகமுப் மாறக்கூடியது.நீ உன் வட்டத்தை விட்டு வெளியே வாகண்ணம்மா.அறிவு ஆசைப்படுவதும் அது தான்."

எத்தனையோ ஆறுதல் வார்த்தைகள் எத்தனையோ உற்சாக வார்த்தைகள்.பாதாளம் நோக்கி பயணப்பட்ட என்னை கைத்தூக்கிஎதையும் சாதிக்கும் வல்லமை தந்த வார்ததைகள்.மெல்ல சுவாசிக்க தொடங்கினேன்.புது சுவாசம் புது காற்று.அழுகை ஓய்ந்தது.ஆனால் அவனை எங்கோ தேடிக்கொண்டிருநதேன்.இன்றோ நாளையோ என் அறிவு என்னை தேடிவருவான என கனவுகள் கண்டேன்.சிலமாதங்களே பழகியவனுக்காக இத்தனை ஏக்கமா.வெளியாட்கள் அறிய முடியாத ஒரு உணர்வு. காதல் எத்தனை மென்மையோ அத்தனை வலிமையானது.அதனால் மலர் கொடுக்கவும் முடியும் வெட்டி இரணப்படுத்தவும் முடியும். உடனிருந்து பார்க்கும் உடன்பிறந்தவனுக்கே புரிவதில்லையே.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"எவ்வளவு நாள் இப்படி விட்டத்த பாரத்து கிட்டிருக்க போற டீ"அம்மாவின் அர்ச்சனை.

"கயல் உனக்கொரு வாழக்கை வேண்டும்.இப்படி இடிஞ்சி போய் உட்காரநதா எப்படி.பிரிஞ்ச அவனுக்கு கொடுக்கும் அன்பு மரியாதை எல்லாம் எங்களுக்கு கிடையாதா....அடுத்து என்ன யோசி.வயசு கூடுது.உனக்கேத்தவனுக்கு கல்யாணம் பண்ணி வைககிறோம்.எல்லாம் சரியாயிடும்"அண்ணணின் பாச போராட்டம்.

"அக்கா யாரவன் அறிவா....அவரை சுத்தமா எனக்கு புடிக்கலை.விட்டுடு கா.உன்னை இப்படி மாததிட்டு அவரு மட்டும் யு.எஸ் போய சந்தோஷமா இருககாரு"

தம்பியின் அங்கலாய்ப்பு.

"கயல் என் கிட்ட சொல்லியிருக்கலாம் இல்லையா.அவரை பார்த்து பேசி சம்மதம் வாங்கியிருபபேன்.இப்போ பேசறேன் னா நீ அவரை தொல்லை பண்ணகூடாதுங்கற...என்ன கயல்..."கண்கள் பனிக்க யாதவ்.

"கயல் கண்ணா எல்லாரும் உன் மீதான அன்புல தான சொல்றாங்க கண்ணா.அவங்களுக்கு நீ சந்தோஷமா இருக்கனும் அவ்வளவு தான்.நீ அழுவது நிறுத்தியிருக்க ஆனால் அந்த பழைய சிரிப்பு காணோமே மா...மனம் விட்டு வாழ தொடங்கு கயல்"

"அப்பா நான் யாரையும் தொல்லை பண்ணலையே.அழுவது கூட இல்லை. இப்படி இருக்க எனக்கு பிடிசசிருககு பா விட்டுடுங்களேன்"

"தப்பு மா உனக்கு இப்படி  சோம்பியிருக்க என்றைககுமே பிடிக்காது. வேறு எதுலையாவது எண்ணம் மாற்றினா நீ அறிவழகனை மறந்து போயிரடுவன்னு பயப்படற"

"அப்பா...."

"ஆமாம்மா அது தான் எதார்த்தம். உனக்கான இடைவெளி விட்டு உன் மணவாழ்க்கை உன் கையில் என்று விட்டாச்சு.ஆனால் நீ அவரை தொலைக்கல உன்னை தொலைச்சிட்டு தேடவும் மாட்டேங்கற.தேங்கிய நீர் யாருக்கும் பிடிக்காத மாதிரி ஆகிடும்.நீயும் தேங்காத.ஆறு போல ஓடு.பட்டாம்பூச்சியாய் சிறகடி வானம் வரை பறந்து போ...உனக்கு நீ மட்டுமே தடை ஆக முடியும்.எழுந்து நட,சிறகு விரி,பறந்து போ."

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சந்யோகிதாவின் "வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

"அப்பா எல்லாம் முடிஞ்சுபோச்சுதப்பா அப்படி தான் என் மனநிலை இருக்கு.என்றைக்காவது என் அறிவு என்னை தேடி வரும் வரை நான் காத்திருக்கேன் அவ்வளவு தான் பா.எங்க தொடங்க முடியும் தெரியவில்லை.எண்ணம் செயல் எல்லாம் அவர் தான் பா.அவரோட நினைவுகளை தூக்கி போடமுடியலை பா"

"கயல் நான் அவரை மறந்து விடுன்னு சொல்லவரலை.நினைவுகள் மட்டும் வாழ்க்கை இல்லை. அவரோட அன்பை நீ மதிச்சா இப்படி சிலையா இருகக மாட்டே..சரி உனக்கு சிறுபிள்ளையில் அ ஆ சொல்லி கொடுத்தேன் இப்போ இன்னொரு முறை ஒரு தொடக்கம் தரேன். இதிலயும் முதன்மையா வருவியா கயல்.எனக்காக"

"உங்களுக்குகாக எதுவும் பா.கல்யாணம் தவிர"

சிறுமுறுவல் பூத்த முக்ததோடு

"என் கூட வா கண்ணா...என்னன்னு சொல்லறேன்.முதல அடி எடுத்து வை கண்ணம்மா"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.