(Reading time: 17 - 33 minutes)

தொடர்கதை - என் காதலே – 10 - ரம்யா

En kathale

"யல் சீக்கிரம் கிளம்பு.அப்புறம் கல்யாணம் முடிஞ்சி சாப்பிட போன மாதிரி ஆகிடும்."ரகு

"அண்ணா அதுக்கு தானே போறோம்"சுட்டி கண்ணண்

"நீ வேற ஏன்டா..அப்பாவும் பொண்ணும் என்ன தான் பேசுவாங்களோ"அம்மா

"ஏன் மா அவசரம் உன் பொண்ணுக்கு புதுசா மாப்பிள்ளை தேட தானே கல்யாணத்துக்கு வர..."கண்ணண்

"நான் ஏன் டா தேடனும்.சிவா தம்பி விடவா நல்ல பையன் கிடைப்பாங்க...அது விடு கயல் கிளம்ப சொல்லு"

"அது சரி."ரகு

"இருங்க அத்தை நான் போய் கூட்டிட்டு வரேன்"பாரதி அண்ணி.

உள்ளே வழக்கம் போல் என் அருகில் அப்பா ஆறுதல் சொல்லி கொண்டிருந்தார்

"என்ன கயல் இது நேற்று கூட இந்த கல்யாணத்துக்கு போக தயாரா இருந்த இனறைக்கு என்ன ஆச்சு"

"அப்பா ஏதோ பயம் பா"

"என்னன்னு சொல்லுமா"

"அது வந்து பா....போகனும்னு இருக்கு"

"கயல் கண்ணா நீ ரொம்ப யோசிக்கிற.பூஜா நம்ம வீட்டு பொண்ணு மாதிரி, நம்ம பட்டாம்பூசசி மையத்தோட பெரும் அங்கம்.உனக்கும் நல்ல தோழி...அவளே நேரில வந்து நம்மை அழைத்து போயிருக்கா...போகனும் மா"

"அப்பா பொண்ணு பூஜா சரி..மாப்பிள்ளை?"

"கதிர்..அதனால"

"என்னப்பா என்னை இப்படி கேட்கறீங்க நான என்ன நினைககிறேன் தெரியலையா"

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"புரியுது மா.கல்யாணத்துக்கு அறிவழகன் வருவார்னு நினைக்கற.அவரை எப்படி எதிர்கொள்வது தயங்கற"

"எல்லாம் தெரியுது அப்புறம் என்ன மா கேள்வியா கேட்கறீங்க"

"கயல் கண்ணா இந்த உலகம் மிக சின்னது.இன்றைக்கு இல்லைனா வேறு ஒரு நாள் நீ அவரை சந்திக்க போற...அது இன்னைக்கே இருக்கட்டுமே... நீயே எதையாவது யோசித்து குழம்பாதே...வா"

"அப்பா ஒரு வேளை அவர் மாறி இருந்தா?"

"கண்ணம்மா நீ ரொம்ப யோசிக்கற......பாலம் கிட்ட நாம் போகும் போது அதை கடப்பது பற்றி யோசிக்கலாம்"

"மாமா கயல் கிளம்பலாமா  எல்லாரும் ரெடி"

எல்லாரும் கிளம்பினோம்.அண்ணி என் காது கடிததாள்."இன்னைக்கு என்ன கூடுதல் அழகா இருக்க....அறிவு பார்க்கவா...நடத்து நடத்து"

வெட்கம் என்னை தின்றது.

கல்யாண சத்திரம் திருவிழாக்கோலம் பூண்டது.இத்தனை வருடத்தில் நான் பல கல்யாணம் சென்றிருக்கிறேன்.தோழிகள்..எங்கள் மையத்தின் அங்கத்தினர்..ஏன் யாதவ் கல்யாணம்..... அதெல்லாம் ஏதோ கனவு போல் தோன்றியது. இன்று இந்த திருமணம் ஏதோ உற்சாகம் பதட்டம், சிலிர்ப்பு,பயம் எல்லாம் அளித்தது. மணமேடை நெருங்க என் மனதில் பயம் ஏறிக்கொண்டது. அருகில் இருந்த சிவா கையை பற்றினேன்.

"என்னாச்சு கயல்!ஏன் பதட்டம்"

"தெரியலை சிவா...ஒரு மாதிரி இருக்கு"

"ரொம்ப குழம்பாதே அறிவழகன் இங்க வருவார்...அவரை பார்க்கிறது உனக்கு சந்தோஷம் தானே... ஏன் பயம்"

"சந்தோஷம் தான சிவா.ஆனால் இத்தனை வருஷமா ஒரு தகவலும் இல்லை. ஒரு வேளை அவர் மாறியிருப்பாரோ...?வேற யாராவது பெண் அவர் வாழ்க்கையில் இருபபாளோ?...அதான் பயமாயிருக்கு.நெஞ்சே அடைக்குது"

"கயல் !எனக்கு ஒன்று தோனுது.....அவர் அப்படி மாறியிருந்தா எனக்கு சந்தோஷம் தான்..."

"என்ன சிவா இப்படி சொல்லற"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சந்யோகிதாவின் "வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

"ஏய் மனசில் தோன்றினது சொன்னேன்.நானும் ஆவலா எதிர்பார்த்துகிட்டிருக்கேன்.அன்னைக்கே கதிர கிட்ட எல்லாம கேட்டிருக்கலாம்.இல்லை பூஜா மூலமாவது கேட்டிருக்கலாம்..இப்படி இரண்டு மாதமா எங்களை இம்சை பண்ணற"

"என்ன சிவா ..என் நிலைமை புரியாம நீ பேசற"கண் கலங்கியது.

"எம்மா நிப்பாட்டு....அவன் வேற ஒளிஞ்சிருநது பார்த்திட்டு ஏன்டா என் கயலை அழ வைக்கிறன்னு அடிக்கபோறான்.உன்ன லவ் பண்றதுக்கு அடி எல்லாம் வாங்க முடியாது என்னால்..."

வேடிக்கையாக அவன் பேசினாலும் அவன் என்னிடம் காதல சொல்வது புரிந்தது.மௌனமானேன்.இது ஏன் நான் எல்லாரையும் காயப்படுத்துகிறேன்.

"கயல் நீ அதிகமா யோசிப்பது தான ப்ரச்சனை. உன் காதல் வலிமையானது.கவலை படாதே.இப்போஉன் தோழி கல்யாணம் அதை மட்டும் யோசி.போய் வாழத்து சொல்லிட்டு வா போ"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.