(Reading time: 19 - 38 minutes)

தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 02 - நந்தினிஸ்ரீ

Hello my boduguard

சாமில்………………

 ராட்சஷ வேகத்தில் செல்லும் பேருந்தில் இருந்து போலீஸ் இருவரையும் தானாகவே முன் வந்து குதிக்க சொன்னான் ட்ரக் டீலர் இல்லையென்றால் டிரைவரை குத்தடுவேன் அப்புறம் நம்ம எல்லாரும் காலி என்று வெறி பிடித்தவன் போல் சிரித்தான். அவன் தன்னை காப்பாற்றிக்கொள்வதற்ககாக எதுவும் செய்வான் என்று தெரிந்த போலீஸ் இருவரும் பயணிகளின் உயிரை மனதில் கொண்டு பேருந்திலிருந்து குதித்தனர். சாலையின் ஓரத்தில் இருக்கும் கருங்கற்கள் முட்செடிகளிள் விழுந்த இருவரும் பம்பரம் போல சுழன்று உருண்டனர்.

 திடீரென்று ஒரு சத்தம் பேருந்தில் ஏறும் படியின் அருகே உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு நபர் தன் உடலை 360 டிகிரியில் சுழற்றி தன் இடது காலால் அங்கு நின்று கொண்டிருந்த ட்ரக் டீலரை சடாலென்று ஒரு கிக் அடித்தான். அவன் அடித்த கிக்கில் தலைசுத்தி சுருண்டு விழுந்தான் ட்ரக் டீலர் ,பின்பு அந்த நபர் அவன் வயிற்றின் மீது அமர்ந்து அவன் இருக்கைகளையும் பிடித்து அவன் பேண்ட்யில் இருந்த பெல்ட்டை உருவினான் அப்போது அவன் சட்டைக்குள் பதுக்கி வைத்திருந்த ட்ரக் பாக்கெட்ஸ் அனைத்தும் வெளியே சிதறியது. பரபரப்பாக போய் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் எதிர்பாராத விதமாக பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்த ஒருவன் ஓடி வந்து அந்த தனி நபரின் இடுப்பை அழுத்திப் பிடித்து பின் வாரியாக இழுத்து சென்றான் அப்போதுதான் தெரிந்தது ட்ரக் டீலர் ஒருவர் மட்டுமல்ல இருவரறென்று. தன்னை இழுத்து செல்கின்ற அவனை அந்த தனி நபர் தன் இருக்கைகளால் அவனுடைய தோலை பிடித்து பின் வழியாக தூக்கி போட்டான் தொப்பென்று விழுந்த அவனுடைய எலும்பு முறிந்த சத்தம் கேட்டது இந்த வேளையில் பெல்ட்டோடு கட்டப்பட்டு இருந்தவன் தன் உடலை திருப்பி தன் ஜீன்ஸின் பின் பாக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து டிரைவரின் இடது கையை சுட்டுவிட்டான்.

 அம்மா……… என்று டிரைவர் வலியால் துடிக்க அங்கிருந்து ஓடி வந்த அந்த நபர் தன் காலால் அவன் கையை எட்டி உதைக்க துப்பாக்கி பயணி ஒருவரின் இருக்கையின் கீழ் சென்று அடங்கியது. உடனே அந்த நபர் டிரைவரை தள்ளி கீழே அமர செய்து விட்டு ஸ்டீரிங்கை கையில் பிடித்து ஓட்ட ஆரம்பித்தான். யோவ்…..அங்க என்ன பண்ற? இங்க இவ்வளவு வேலை இருக்கு நீ பாட்டுக்கு அங்க வெட்டியா கதை அடிச்சிட்டு இருந்தன எவனாவது வந்து பாலத்தை இடிச்சுட்டோ இல்ல ஒடச்சிட்டோ போய்டுவான் என்று சேஃப்டி இன்ஜினியரை திட்டி கொண்டு இருந்தார் பாலத்தை ஆய்வு செய்ய வந்த எக்ஸிகியூட்டிவ் இன்ஜினியர். அதிக வேகத்தில் பேருந்து ஒன்று பாலத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தது அதை பார்த்த சைடில் இருந்த வேலைக்காரர்கள், இன்ஜினியர்கள், தொழிலாளர்கள் அனைவரும் “துண்டை காணும் துணியை காணும்” என கண் இமைக்கும் நேரத்தில் அந்த சைட்டை விட்டு ஓட தொடங்கினர்.

 யோவ்.. மணி இந்த இன்ஜினியருக்கு கருநாக்குயா வாய வெச்சான் ஏழரை வண்டி ரூபத்துல நாலு கால் வேகத்துல வந்துருச்சு பார்யா என்று அந்த பதட்டத்திலும் நக்கல் அடித்து கொண்டு சென்றான் ஒரு கூலி தொழிலாளி. பேருந்தில் இருந்த பயணிகள் அலறி கொண்டு இருந்தனர் அந்த தனி நபருக்கு தெரிந்துவிட்டது பேருந்தை சடன் பிரேக் போட்டு நிறுத்த முடியாது என்று அதனால் அவன் பயணிகள் அனைவரையும் பின்னால் சென்று பேருந்தின் கம்பிகளை இறுக்கமாக பிடித்து கொள்ள சொன்னான் பேருந்தை தன்னால் முடிந்தவரை கன்ட்ரோல் செய்து பாலத்தை தாங்கி கொண்டிருந்த ஒரு பெரிய தூணின் மேல் சென்று மோதினான்.

 படார்….. என்று பாலத்தின் தூணில் மோதிய கண்ணாடிகள் தூள்தூளாக சிதறின பேருந்தின் முன்பக்கம் முற்றிலும் நொருங்கியது மோதிய வேகத்தில் பின்னால் இருந்த சில பயணிகள் முன்னே வந்து விழுந்தன. முகத்தில் ரத்தம் சொட்ட சொட்ட அந்த நபர் ஸ்டேரிங்யின் மேல் படுத்திருந்தான். பயணிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்த வேகத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது முகம்,கைகள், கால்களென உடம்பில் பல பகுதிகளில் இரும்பு கம்பிகள் குற்றியும் கண்ணாடி தூள்களால் குத்தியும் உடலெங்கும் கீறல்களோடும் அடியோடும் வலியால் மயங்கி விழுந்தனர். புயலுக்கு பின் அமைதி என்பது போல அந்த இடம் சில நிமிடங்கள் அமைதியாக காணப்பட்டது.

 தற்போது சென்னையில்..............

 ஹலோ சாரா, எங்க இருக்க பங்ஷனுக்கு டைம் ஆச்சு என்று சாரவின் மேனேஜர் விக்கி கைபேசியில் அவளை ட்ராக் செய்து கொண்டிருக்க இதோ வந்துட்டேன் என்று சொல்லி காலை கட் செய்தால் சாரா.ஒரு வெள்ளை காரின் கதவு மெதுவாக திறந்தது ஹயி ஹீல்ஸ் போட்டிருந்த தன் காலை வெளியே நீட்டினாள் சாரா.சாரவை பார்த்ததும் அவளது ரசிகர்கள் சாரா ”ஐ லவ் யூ” சாரா “மேரி மீ” என்று அங்கிருந்த அவள் ரசிகர்கள் கூச்சலிட்டனர். சாரா பார்பதற்கு பௌர்ணமயில் வரும் முழு நிலவு போல இருப்பாள் அளவான உயரம், நீண்ட ஸ்டரையிட்டேன் முடி, பழுப்பு நிற கண்கள், பட்டர் ரோஸ் போன்ற உதடுகள், கூர்மையான மூக்கு அனைத்தும் கண் படாமல் இருக்க திருஷ்டி பொட்டு வைத்தது போல முகத்தின் கீழ் நாடியில் சின்ன மச்சம்,ஸ்லிம் பிட்டான உடல் என்று மிஸ் இந்தியாகானா அனைத்து தகுதிகளும் உடையவள் என்று சொல்லலாம்.

 சாரா தனது சார்மிங் ஸ்மைலால் தனது ரசிகர்களை பார்த்து கை அசைத்தால் அதோடு மட்டுமில்லாமல் தனது இருக்கைகளையும் சேர்த்து சின்ன ஹார்டின் போன்ற சிம்பலால் "ஐ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.