(Reading time: 14 - 27 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

இப்படியே விடக் கூடாது என்று  நினைத்தான். அவருடைய முகவரியை கம்புயூட்டரிலிருந்து எடுத்தவன். அன்று மாலையே அவரை தேடி சென்று விட்டான்.

வாங்க தம்பி. வீடு தேடி வந்திருக்கீங்க?” அவனை ஆச்சரியமாக வரவேற்றவர்என்ன விசயம் தம்பிஎன்றார்.

அலுவலக வேலையாக வரவில்லை. ஆனால் ஒரு விசயத்தை தெரிஞ்சுக்கணும். அதுக்காக வந்தேன். உங்களுக்கு சிக்கல் எதுவும் இல்லைனா சொல்லலாம்

எதைபத்தி தம்பி….”

விஞ்ஞானி ஜேக்வில்பத்தி நான் சொன்னபோது நீங்க ஏன் அப்படி ரியாக்ட் பண்ணீங்க.. எதுவோ ரகசியம்னு எனக்கு தோணுச்சு. அதைபத்தி தெரிஞ்சுக்க நினைக்கிறேன். முடிந்தால் சொல்லுங்க

அதுவேண்டாம் தம்பி. அதைபத்தி தெரிஞ்சுகிட்டா உங்களுடைய வேலை மேலேயே உங்களுக்கு நம்பிக்கை போயிடும்

இந்த வேலைல என்ன பாதகங்கள் இருக்கு…  சிக்கல்கள் இருக்கு அப்படின்னு எனக்கு தெரியும். ஆனால்நீங்க ரொம்பவும் தயங்கறீங்க. சொல்ல விருப்பம் இல்லைனா சொல்ல வேண்டாம்அவன் எழுந்தான்.

இருங்க தம்பி. வீட்டில யாரும் இல்லை. நான் காபி போட்டுட்டு வந்திடறேன்என்று அவரும் எழுந்தார்.

பரவாயில்லை. நான் கிளம்பறேன்

இருங்க தம்பி. காபி குடிச்சிட்டே பேசுவோம்அவர் வீட்டிற்குள் சென்றார். ஒருவேளை அவர் மறைக்கும் அந்த விசயத்தைபற்றி சொல்லப் போகிறாரோ என்று வினய் காத்திருந்தான். சற்று பொறுத்து கையில் காபி கோப்பைகளுடன் வந்த மாணிக்கம் பேச ஆரம்பித்தார்.

ஹெச் சர்மா தலைவராக பணியாற்றிய காலத்தில் முன்மாதிரியான ஆராய்ச்சிகள்  நடந்தப்பட்டன. உலக அளவில் அவை பேசப்படவும் செய்தன. அவருடைய ஆராய்ச்சி மாணவராக அங்கு வந்து சேர்ந்தவர்தான் ஜேக்வில்.

ஹெச் சர்மாவிற்கு தனிபட்ட பரிசோதனை கூடமும் உண்டு. அதை சுத்தம் செய்யும் வேலையையும் மாணிக்கம்தான் பார்த்து வந்தார். அங்கு வெள்ளை எலிகள், தவளைகள், சில வகையான மீன்களை வைத்து ஆராய்ச்சிகளும்  நடத்தப்பட்டிருந்தன.

சுத்தம் செய்யும் வேலையென்றால், குப்பையை கூட்டி பெருக்கும் வேலை மட்டுமல்ல, இவர்கள் பரிசோதனை செய்து தோல்வியடைந்த எலிகள், கோழிகள் இவற்றை அப்புறப்படுத்தும் வேலையும்  நான்தான் செய்தாக வேண்டும். தவறான முடிவுகளினால் அந்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.