(Reading time: 10 - 20 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

அருகிலிருந்த இலைகளை அசைக்க… அது தென்றலை உருவாக்கி அடுத்தடுத்த இலைகளை அசைக்க… அங்கு கடுங்காற்று உருவாகி அந்த கிளையே அசைக்க… மரத்தின் மற்ற கிளைகளும்  அசைந்து காற்றை வலுவாக்க… அங்கிருந்த மற்ற மரங்களும் அந்த காற்றினால் அசைந்து அந்த காட்டில் சூறாவளி உருவாகி மொத்த காடே அழிந்து போனதாம்.. இத்தனைக்கும் அந்த பட்டாம்பூச்சி சிறகடித்ததுதான் என்றால் நம்ப முடிகிறதா?  அதுபோல்தான் நான் செய்த ஒரு சிறு தவறு பெரிய புயலையே உருவாக்கி விட்டது.” அவர் சொன்னபோது அடுப்பின் இருளில் மெல்லிய அசைவு தெரிந்தது. 

“கொலை செய்தவனுக்கு கிடைக்கும் மரண தண்டனையைவிட கொடுமையை அனுபவிக்கிறேன். ஆனாலும் எனக்கு அமைதியில்லை. ஏனெனில் எனக்கு நீதான் நீதிபதி. நீதான் தண்டனைதர வேண்டும். அதற்கு முன் என்னுடைய கதையை கேட்க வேண்டும். இத்தனை வருடங்களாக காத்திருக்கும் எனக்கு ஒரு வாய்ப்பு தர மாட்டாயா? அதன் பின் என்னை கொன்றுகூட போட்டுவிடு…. நன் எந்த தவறும் செய்யவில்லையே…. ஆண்டவா? நான் என்ன பாவம் செய்தேன்… ” அவர் அழ ஆரம்பித்தார். அந்த அழுகையில் இருந்த துயரம்… குற்ற உணர்வு… கதறல் அத்தனையும் கேட்பவர் மனதை கூறு போட்டுவிடும்போல இருந்தது.

உள்ளிருந்த ‘அவளை’யும் அது பாதித்துபோல… இருளில் இருந்து மெல்லிய கரம் நீண்டு அங்கிருந்த பழசர க்ளாஸை எடுத்துக் கொண்டது. அதற்கு அர்த்தம்…. அவள் ஒரு வாய்ப்பு தந்திருக்கிறாள்….

“நன்றி குட்டிம்மா.” அவருடைய கதையை சொல்ல ஆர,ம்பித்தார்.

ஜெர்மனிலிருந்து வந்த அந்த விமானத்திலிருந்து கிருபாகரன் இறங்கினான். அவனுடைய கட்டிடகலை படிப்பை ஜெர்மனியில் முடித்து அங்கேயே வேலை பார்க்கிறான். ஐந்து வருடங்களுக்கு பின்  இன்றுதான் தாயகம் திரும்புகிறான். அம்மா… அப்பா… தங்கை கற்பகம் என்று மிகச்சிறிய குடும்பம் அவனுடைய வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறது. அவர்களுடன் அந்த ஊரையும் பார்க்க ஆவலாக வந்தான்.

அவனுக்கு கோவை முற்றிலும் புதிய ஊர். ஏனெனில் அவனுடைய குடும்பம் வட இந்தியாவில்  வைர வியாபாரம் செய்தவர்கள்.  அப்போது  நடந்த தொடர் குண்டு வெடிப்பினால் பாதிக்கப்பட்டு மும்பையில் இருந்து குடி பெயர்ந்து கோவைக்கு வந்தனர். இங்கே வந்து நகை   வியாபாரத்தை தொடர்ந்தனர். அந்த நகரத்தில் குறிப்பிடத்தக்க பெரிய கடை என்று சொல்லுமளவிற்கு வியாபாரம் நன்றாக  நடந்தது.

அது சரி  க்ருபாவிற்கு அந்த ஊரை பார்க்கும் ஆவல் ஏன் வந்தது?. கோவைபற்றிய தங்கை கற்பகத்தின் வர்ணனைகள்தான் அவனுக்குள் ஆவலை கிளப்பி இருந்தது. குளுகுளுவென்ற

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.