(Reading time: 9 - 18 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

"என்ன சொல்றீங்கஅபியை யாரோ தூக்கிட்டு போயிட்டானா.. இது யாருக்கும் தெரியாதே.. நீங்க யார்கிட்டயாவது சொல்லியிருக்கலாமே.."

" செத்து போனவன் எந்த ஊருன்னு தெரியாது. நான் யார்ட்ட சொல்ல முடியும்?"

"காட்டிலாக்கா அதிகாரிகள்ட்ட சொல்லி இருக்கலாமே.."

"தம்பி நானே இங்க மூலிகை பறிக்க திருட்டுத்தனமா வருவேன். வெளியாட்களை காட்டாபிசருங்க அனுமதிக்க மாட்டாங்க. இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதின்னு சொல்லுவாங்க."

"ஓகே.. ஓகேஎனக்கு புரியுதுகுழந்தைய தூக்கிட்டு போனவனை தெரியுமா?"

"அவன் யார்னு தெரியாதுஆனா பார்த்தா அடையாளம் சொல்லிடுவேன்."

"ஓகே.. எனக்கு ஒரு உதவி பண்ணுஙக. அவனை தேடிப் பாருங்க. அவனை பார்த்தால் எனக்கு தெரிவிங்க" என்றவன் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து அவரிடம் நீட்டினான்.

"பதட்டமா தெரியறீங்க தம்பிஇவ்வளவு பணம் வேண்டாம். "

"நீங்க வச்சுக்கோங்க. இந்த போன் நம்பருக்கு கால் பண்ணி சொல்லுங்க. இது என்னோட நம்பர்…. என்னோட உயிரை காப்பத்துறதா நினைச்சு இதை செய்ங்க.. ப்ளீஸ்"

"கண்டிப்பா செய்றேன் தம்பி."

"நீங்க எங்கே இருக்கீங்க?"

அவர் முகவரியை சொன்னார்…

"ஐயாநான் உங்களை வந்து அடிக்கடி பார்க்கறேன். "

"நான் ஒண்டிகட்டைதான் தம்பி. நீங்க வாங்க.. மாடன் என் பெயர்"

அவர் விடைபெற்றார். அபிதாவை தேடி கண்டுபிடித்தாக வேண்டும் என்பதே க்ருபா வாழ்வதன் நோக்கமாகியது.

அதன் பிறகு அவன்  அடிக்கடி மாடனை தேடிப் போனான். அவரும் அபிதாவை தூக்கி சென்றவனை தேடிக் கொண்டிருந்தார். நாற்பது நாட்களாகி நம்பிக்கையை க்ருபா  இழந்த சமயத்தில் மாடன் அவனை அழைத்தார். விரைந்து அவரை காண சென்றான்.

"தம்பி அந்த பய துரை இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சிட்டேன். அவன் ரௌடிப்பய போல.. சாராய கடையிலதான் இருக்கான். அவன்ட்ட விஷயத்தை தெரிஞ்சுக்கறது உங்க பொறுப்பு." என்றவர் முகவரியை தந்தார்.

அவர் தந்த அட்ரஸில் துரையை போய் பார்த்தான்.  முதலில் அவன் அபிதா விஷயத்தை மறுத்தாலும் பிறகு உண்மையை ஒப்புக் கொண்டான். அபிதாவை சர்மாவிடம் ஒப்படைத்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.