(Reading time: 7 - 13 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

சவாலான ப்ராஜெக்டில் இருந்தேன் "

"புரியவில்லை"

"அது ஒரு முக்கியமான ரிசர்ச்வைரஸ் பாதிப்பினால் ஏற்பட்ட மரபணு மாற்றங்களை ரிவர்ஸ் செய்யும் முயற்சியில் இருந்தேன். ரிவர்ஸ் ஜெனிடிக்ஸ்.."

"அதனால் என்ன பயன்?"

"மரபணு ரிப்பேரை சரி செய்யும் முயற்சி…"

"அபிக்கு…"

"இருங்க அவசரப்படாதீங்கஅபியோட பிராப்ளம் பற்றி டீடெய்லா பிறகு பேசலாம். "

"கரெக்ட்…  நீ ஜெனிட்டா பற்றி சொல்லி முடி."

"ஜெனிடிக்ஸ் ரிவர்ஸில் பல டெக்னிக்ஸ் கையாளப்படுகிறதுஉண்மையில் மரபணு பாதிப்பு என்பது அதன் உள் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள்தான். தேவையான டிஎன்ஏ இல்லாமல் போவதுஅதிகமாவது.. ப்ரோட்டீன் உருவாக்கத்தில் குளறுபடி நடப்பது போன்றவை.. "

"நீ என்ன செய்ய முயற்சி செய்தாய்"

"ஜெனிட்டா ஒரு தாவரவியல் முனைவர்மலை காடுகளில் ஆராய்ச்சி செய்தவள். அவளிடம் அரிய வகை மூலிகைகள் பற்றிய விவரங்கள் இருந்தன. சில மூலிகைகள் மரபணு மாற்றங்களை சரி செய்யும் என்று ஆராய்ந்து கொண்டு இருந்தோம். இருவருமே இளம் விஞ்ஞானிகள்தான். அறிவியல் அறிவு இருந்தாலும்பிஸினஸ் அரசியல் அறிவு இல்லை."

"அதனால் என்ன ஆச்சு?"

"மூலிகைகளுக்கு முக்கியத்துவம் தரும் ஆராய்ச்சியை நிறுத்த சொல்லி மறைமுக ப்ரஷர் நிறைய வந்தன. "

"பிஸினஸ் மாஃபியாக்களிடம் இருந்தா?"

"கரெக்ட்..  தீரா வியாதிகள் பட்டியல் என்று ஒன்று உள்ளது. வியாதி தீராதுகட்டுப்பாட்டில் வைத்திருக்க வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்அவைதான் மெடிக்கல் பிஸினஸில் பொன் முட்டையிடும் வாத்துக்கள். எங்களுடைய ஆராய்ச்சி வெற்றி பெற்றால்சில வியாதிகள் க்யூர் ஆகி விடும்…"

"அவர்களுடைய பிஸினஸ் பாதிக்கப்பட்டு விடும்…."

"ஜெனிட்டாவிற்கு நிறைய ப்ரஷர் தரப்பட்டது. அவளிடம் ரிசர்ச் பற்றிய விளக்கம் கேட்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அவளால் என்னுடைய ஆராய்ச்சி பற்றிய ரகசியத்தை காக்க முடியாது என்று தோன்றி விட்டது. அதை சொல்லவும் செய்தாள்."

அவன் மௌனமானான்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.