(Reading time: 11 - 22 minutes)
Priyamaanavale
Priyamaanavale

தொடர்கதை - பிரியமானவளே - 12 - அமுதினி

னக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி

நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி

"எல்லாருக்கும் வணக்கம். இந்த கம்பெனி தொடங்கி கிட்டத்தட்ட முப்பது வருஷம் ஆகுது. இது வரைக்கும் இந்த கம்பெனியுடைய வளர்ச்சிக்காக எல்லாரும் கஷ்டப்படிருக்கிங்க. மூணு தலைமுறையா வெற்றிகரமா இந்த கம்பெனியை நடத்த உங்களுடைய உழைப்பும் நீங்க எங்களுக்கு கொடுத்த ஒத்துழைப்பும் தான் காரணம். இன்னைக்கு நான் இங்க ரெண்டு முக்கியமான அறிவிப்புகளோட வந்துருக்கேன். உங்க எல்லாருக்குமே தெரியும். நானும் இந்த கம்பெனியுடைய ஒரு டைரக்டர். ஆனா என்னுடைய வயசு மூப்பு காரணமா என்னால இப்போ ரொம்ப ஆக்ட்டிவ்வா முன்னை மாதிரி செயல்பட முடியறது இல்லை. அதனால என்னுடைய பொறுப்புகளை பார்த்துக்கறதுக்கு என்னுடைய ரெஃப்ரெசென்டடிவ்வா என்னுடைய பேத்தி தமிழ்செல்விய பொறுப்பெடுத்துக்க சொல்லியிருக்கேன். அதேபோல என் பேரன் பரத் நம்ம மேனுபேக்சரிங் டிப்பார்ட்மெண்டுடைய புது ஜிஎம்மா ஜாயின் பன்றாரு. எனக்கும் என் குடும்பத்துக்கும் இதுவரைக்கும் கொடுத்த சப்போர்ட்டை இனியும் கொடுப்பீங்கனு நம்பறேன்" விசாலம் பாட்டி பேசி முடிக்கவும், எல்லோரும் தமிழ்செல்வியையும் பரத்தையும் வரவேற்கும் விதமாக கைதட்டினர்.

"ராம், பரத்துக்கு இந்த இடம் புதுசு இல்லை. ஆனா செல்விக்கு இந்த இடம் புதுசு. சோ நீ தான் அவளை பார்த்துக்கணும்" ராமின் அறையில் அமர்ந்திருந்த விசாலம் அவருக்கு எதிரே நின்றிருந்த தமிழ்செல்வி மற்றும் ராம் இருவரையும் பார்த்தபடி சொன்னார். ராம் சரி என தலையசைக்க, "செல்வி, உன் திறமைக்கு இதெல்லாம் ஈஸியான வேலைனு எனக்கு தெரியும். ஆல் தி பெஸ்ட்" என அவளின் அருகே வந்து அவளின் முன்னேற்றியில் முத்தமிட்டவர் அங்கிருந்து கிளம்ப, இருக்கையில் சென்று அமர்ந்தான் ராம்.

அங்கிருந்த தொலைபேசியை எடுத்து யாரையோ அழைத்தான்.

சிறிது நேரத்தில் எல்லாம் அந்த அறைக்கதவை தட்டியபடி உள்ளே வந்தார் ஒரு பெண்.

"ஹலோ சார் குட் மார்னிங்." என்ற அந்த பெண்ணை பார்த்த ராம், "கீர்த்தி ஷி இஸ் தமிழ்செல்வி. என் வைப் அண்ட் நியூ டைரக்டர். இனிமேல் இவங்க தான் அட்மினிஸ்ட்ரடிவ் டிபார்ட்மென்ட்டை ஹாண்டில் பண்ண போறாங்க. அவங்களை கூட்டிட்டு போயி கம்பெனியை விசிட் பண்ணிட்டு அப்படியே அவங்க ரூமை காட்டுங்க. அப்பறம் இங்க என்னென்ன ப்ராசஸ் பாலோவ் பண்றோம்னு எக்ஸ்ப்ளெய்ன் பண்ணிடுங்க. ஷி இஸ் எ குயிக் லேனர்" ராம் சொல்ல அவன் அவளை பாராட்டியதை நம்ப முடியாமல் பார்த்தாள் தமிழ்செல்வி.

"கண்டிப்பா சார். ஹலோ மேம் ஐ யாம் கீர்த்தி. அட்மினிஸ்ட்ரேட்டிவ் டிபார்ட்மெண்ட்ல எக்சிகியூடிவ் ஆஃபீஸர்" தன்னை அறிமுக படுத்தி கொண்ட கீர்த்தியின் கையை பிடித்து குலுக்கினாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.