தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 20 - பிந்து வினோத்
அகிலாவும் ஆனந்தும் ஜோடியாக சென்ற அறை பால் ரூம் (ball room) போல நீண்டதாகவும், விசாலமானதாகவும் இருந்தது. பளிச்சிட்ட சாண்டிலியர் விளக்குகளும், ஆங்காங்கே வைக்கப் பட்டிருந்த அலங்காரப் பொருட்களும் அதீத ஆடம்பரத்தை எடுத்துக் காட்டியது.
முதல் முறையாக அரண்மனையில் இருக்கிறோம் என்ற உணர்வு அகிலாவிற்கு ஏற்பட்டது. கூடவே மெல்லிய பதற்றமும் தொற்றிக் கொண்டது...
அறையின் நடுவே இருந்த பச்சை நிற ‘ப’ வடிவ சோபாவில் அரசக் குடும்ப பெண்கள் அனைவரும் அமர்ந்திருந்தார்கள். தியா, அறிவரசி இருவரும் சின்ன இடைவெளி விட்டு தள்ளி நின்றிருந்தார்கள்.
பிறைநிலாவும், அதித்தியும் குழந்தையுடன் ஷோபாவின் ஒரு
...
This story is now available on Chillzee KiMo.
...
றாள் போலியான மரியாதையுடன்!
பிறைநிலாவின் பக்கத்தில் இருந்த அதித்தியின் முகத்தில் புன்னகை வருவது தெரிந்தாலும் அதைப் பற்றி ஆராய்ந்துக் கொண்டிருக்காமல் அறிவரசி பக்கம் சென்று நின்றாள் அகிலா.