(Reading time: 5 - 10 minutes)
Nilave mukam kattu - Siddarth
Nilave mukam kattu - Siddarth

தொடர்கதை - நிலவே முகம் காட்டு - 03 - சித்தார்த்

"து எத்தனாவது ப்ரேக் அப் ஏஞ்சல்?" மார்க் பல் எல்லாம் தெரிய கேள்வி கேட்டான்.

  

ஏஞ்சல் அவனை விழி உயர்த்தி ஒருப் பார்வை பார்த்து விட்டு மீண்டும் மொபைலில் டைப் அடிப்பதை தொடர்ந்தாள்.

  

ஏஞ்சல் பதில் சொல்லாமல் இருக்கவும் அவள் அருகே அமர்ந்திருந்த உஜ்வலா, "மார்க், தெரியாத மாதிரி கேட்காதே. ஏஞ்சல் கின்னஸ் ரெகார்ட்க்கு முயற்சி செய்துட்டு இருக்கா!" என்றாள் பொய்யான சீரியஸூடன்!

  

'ஷீ இஸ் அ ஹார்ட் பிரேக்கர்!' என மார்க் சத்தமாக பாடவும், உஜ்வலா மட்டும் அல்லாது மீட்டிங் ரூமில் குழுமி இருந்த ஒன்பது பேருமே சிரித்தார்கள்.

  

ஏஞ்சல் இவர்களின் கேலிக்காக கோபப் பட்டதாக தெரியவில்லை.

  

டைப் அடித்துக் கொண்டிருந்த டெக்ஸ்ட் மெசேஜை முடித்து, அனுப்பி விட்டு, மொபைலை கீழே வைத்தவள் நிமிர்ந்து அங்கே இருந்தவர்களைப் பார்த்தாள்.

  

"எதுக்கு உங்க எல்லோருக்கும் இப்படி சிரிப்பு? நான் இன்னும் செட்டில் ஆகுறது பத்தி யோசிக்கலை. நான் யாரை டேட் செய்தாலும் ஆறு மாசத்துக்குள்ளே கமிட்மென்ட் பத்தி பேச ஆரம்பிச்சிடுறாங்க."

  

"ஏஞ்சல், எனக்கு தெரிஞ்சு நீ இது வரைக்கும் டேட்டிங்ன்னு போனதே ஒரே ஒருத்தன் கூட தான்!" என்றாள் அவர்கள் டீமின் தலைவி மோனா கண்டிக்கும் குரலில்.

  

"அதை தான் சொல்றேன், மோனா! நான் பேசினாலே எல்லோரும் அடுத்து கல்யாணம்னு பேச ஸ்டார்ட் செய்திடுறாங்க. எனக்கு என் வேலை பிடிச்சிருக்கு. இப்போ இருக்க சுதந்திரம் பிடிச்சிருக்கு. இதை எல்லாம் விட்டுட்டு குடும்பம்ன்னு கமிட் செய்ய பயமா இருக்கு."

  

"இது எல்லோருக்கும் வர பயம் தான் ஏஞ்சல்!" என பக்கத்தில் இருந்த உஜ்வலா அவளுக்கு ஆறுதல் சொன்னாள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.