(Reading time: 23 - 46 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

தொடர்கதை - பூவா? தலையா? - 07 - சசிரேகா

தற்கிடையில் கோவலனுக்கு பிறந்த நாள் வேறு வந்தது, அந்த பிறந்த நாளை கொண்டாடும் நிலைமையில் கூட அவன் இல்லை, மாதவியின் பிரிவு அவனை நோகடித்தது. அவளைக்காண கல்லூரிக்கு அடிக்கடி சென்றான், அவளை பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும் அவளிடம் பேச எண்ணி முயல்கையில் அவளே அதை தவிர்த்துவிட்டு சென்றுவிடுவாள். அவளின் இந்த வெறுப்பு அவனால் தாங்க இயலவில்லை எப்படியாவது பழையபடி மாற வேண்டும் என ஆசைக்கொண்டான்.

  

தனது பிறந்த நாளுக்கு நிச்சயம் தன்னை தேடி வருவாள் அல்லது ஒரு வாழ்த்து செய்தியாவது தருவாள் தான் எடுத்து தந்த புடவையை அணிந்துக் கொள்வாள் என்றெல்லாம் அவன் யோசித்தான், ஆனால் மாதவிக்கோ கல்லூரி வேலை அதிகமாக இருந்தது மாணவர்களுக்கு பாடம் எடுப்பதற்கே நேரம் போதவில்லை, அவளால் வேறு எதையும் சிந்திக்க இயலவில்லை, முக்கியமாக கோவலனின் பிறந்த நாளை கூட அவள் மறந்தே போனாள்.

  

கோவலனோ தனது பிறந்தநாளில் மாதவிக்காக காத்திருந்து காத்திருந்து அவள் வராமல் போகவே வாழ்க்கையை வெறுத்தான், இனி மாதவி தனக்கு இல்லை என நினைத்து அதோடு அமைதியானான், அதற்காக அவளை தேடிச் சென்று பேசி புரிய வைக்கும் அளவு அவனுக்கு தோன்றவில்லை, விதிவழி நடக்கட்டும் என விட்டான். அவனது அமைதி ஈஸ்வரமூர்த்திக்கு சந்தேகத்தை தந்தது, ஒருவேளை கல்லூரியில் இருந்து அவனை விலக்கிவிட்டதால் மனம் உடைந்து போய்விட்டதாக எண்ணினார், தினமும் அவரே கல்லூரிக்கு சென்று கவனமாக பார்த்துக் கொண்டார்.

  

கண்ணகியும் லேசுபட்டவள் அல்ல, எப்படியாவது பரிட்சையில் மாணவர்கள் பாஸாக வேண்டும் என தனக்கு தெரிந்த அனைத்து முயற்சிகளையும் செய்தாள் இம்முறை மாணவர்கள் கூட இறங்கி வந்து படித்தார்கள், அதிலும் சில மாணவர்கள் படிக்காமல் திமிராக நடந்துக் கொள்ள அதற்காக ஆசிரியர்கள் அவர்களை அடிக்க அது பெரிய பிரச்சனையை உண்டாக்கியது.

  

அடிவாங்கிய மாணவன் தனது பெற்றோரை அழைத்துக் கொண்டு நேராக கண்ணகியை பார்க்க வந்தான். அவனது பெற்றோரோ கண்ணகியிடம் தாம்தூம் என குதித்தார்கள் கல்லூரி நிர்வாகத்தையே குறை கூறினார்கள், ஆசிரியர்களை சகட்டு மேனிக்கு திட்டினார்கள்,

2 comments

  • மிக்க நன்றி, எங்க கோவலன் பேராசியரா வந்து ரொமான்ஸ் பண்ற மாதிரி கதை போயிடுமோனு பயந்தேன். நல்லவேளை அப்படி எதுவும் ஆகல, அதுக்கே மிக்க நன்றி

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.