(Reading time: 26 - 51 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

தொடர்கதை - பூவா? தலையா? - 08 - சசிரேகா

நாட்கள் நகர்ந்தது

  

எப்போது ரிசல்ட் வரும் என எதிர்பார்த்துக் காத்திருந்தார் ஈஸ்வரமூர்த்தி, கண்ணகிக்கும் அதே ஆர்வம்தான், அனைவரும் பாஸாகிவிட்டால் தனது லட்சியம் நிறைவேறிவிடும் தன்னை நம்பி கல்லூரி தந்ததற்கு தக்க பலனை செய்தோம் என்ற திருப்தி கிடைக்கும் என நினைத்தாள்.

  

கோவலனுக்கு ஒவ்வொரு நாளும் திக்திக்கென இருந்தது, அவனை பார்க்கும் போதெல்லாம் பந்தயத்தை பத்தி ஞாபகப்படுத்தி அவனை வெறுப்பேற்றினார் ஈஸ்வரமூர்த்தி, கோவலனும் மனதுக்குள் கடவுளை வேண்டிக் கொண்டான், அவனது கல்லூரிதான் ஆனாலும் மாணவர்கள் அரியர் வைக்க வேண்டும் என வேண்டினான்.

  

அது சுயநலம் என நன்கு தெரிந்தும் கண்ணகியை மணக்க அவன் மனம் இடம் கொடுக்கவில்லை, கண்ணகி சொன்னபின்புதான் மாதவிக்கு கோவலனின் மீது ஆர்வமும் ஏக்கமும் பிறந்தது, அது நாள்வரை அவனை பற்றி அவள் பெரிதாக நினைக்க கூட இல்லை, ஆனால் இப்போது சதா அவனைப் பற்றியே நினைக்கலானாள், தான் செய்வது தவறு என தெரிந்தும் அதிலிருந்து மீள முடியாமல் தவித்தாள்.

  

மறுபக்கம் சிலம்பரசனோ ஊருக்குள் வந்து சேர்ந்தான், அவனுக்கு கல்லூரியில் என்ன நடக்கிறது என தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை, இத்தனைக்கும் அவன் உருவாக்கிய பிரச்சனை இன்னும் முடியவில்லை, சிலம்புதான் காரணம் என கோவலன் போலீசிடம் சொல்லி வைத்திருந்தார்கள், எப்போது அவன் சிக்குவான் என அவர்களும் காத்திருந்தார்கள் இவ்விசயம் தெரிந்தும் தைரியமாக வந்து சேர்ந்தான் கல்லூரியில் அவனுக்கு தெரிந்த ஆசிரியர்களிடம் கல்லூரியின் நிலைமையை பற்றி விசாரித்து எரிச்சலுற்றான்

  

”இந்த காலேஜாலதான் நான் இப்படி தலைமறைவா வாழ வேண்டிய நிலைமை வந்தது, ஆனா இந்த காலேஜ் இப்போ சூப்பரா நடக்குதாமே, எந்த செமஸ்டர் எக்ஸாமை வைச்சி நான் கண்ணகியை மாட்டிவிட்டேனோ அதே செமஸ்டர் எக்ஸாமை மாணவர்கள் சூப்பரா எழுதியிருக்கறதா சொல்றாங்க, சே நான் நினைச்சது எதுவுமே நடக்கலை கோவலனோட நட்பை கூட பகைச்சிக்கிட்டேன், இப்ப வேலைக்கு என்ன செய்றது, சாப்பிடறதுக்கு என்ன செய்றது எனக்கு இப்படியொரு நிலைமையை கொண்டு வந்துட்டாளே, அந்த கண்ணகியை

2 comments

  • அன்று நடந்த விபத்தும் சரி, இப்போது கண்ணகியை மிரட்டினதும் அடுத்தவங்களை யோசிக்காம போன நடத்தையால்தான். மறுபடியும் பெரிய விபத்தை சந்திக்க போகிறான்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.