தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 26 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சரவணன் விக்கிராந்த் சொல்வதை நம்ப முடியாதவனாக, “என்னடா பேசுற நீ?” என்றான்!
“சரோ, ஆர்த்தி கஷ்டம்னா என்னன்னே தெரியாம வளர்ந்தவ, எனக்கு அது நல்லா தெரியுது, புரியவும் செய்யுது... உனக்கே தெரியும் அவ அப்பா ஒரு பிஸ்னஸ் மேன், சொந்தமா பிஸ்னஸ் நடத்துறார்... ஆர்த்தி படிச்சு முடிச்ச உடனேயே அதுல கிட்டத்தட்ட ஒரு எம்.டி போஸ்ட் கிடைச்சிடுச்சு...”
“டேய், இதுல உனக்கு என்னடா வருத்தம்? பொறாமையா?”
“பொறாமை இல்லைடா... நான் ஆர்த்தியை புரிஞ்சுக்க ட்ரை செய்ததுல எனக்கு தெரிஞ்சது அது. ஆர்த்தி ஆஃபிஸ் ஹவர்ன்னு டிஃபரன்ஸ் இல்லாம எப்போ வேணா கால் செய்வா, நான் வேலை எல்லாம் விட்டுட்டு அவளோட பேசணும்னு எக்ஸ்பெக்ட்டும் செய்வா... அவளுக்கு என்னோட ஆஃபிஸ் பத்தி தெரியலை, ஸோ, இதை நான் தப்புன்னு சொல்லலை... ஆனால் நான் ஒரு கம்பெனியில் எம்ப்ளாயீ. என்னால் அது போல எல்லாம் எப்போவும் பேச முடியாது. சரி, நைட் வீட்டுக்கு போய் அவளோட பேசலாம்னு கால் செய்தா, நான் பேசினப்போ நீங்க பேசலை இப்போ பேசாதீங்கன்னு சொல்லிட்டு எனக்கு பேச ஒரு சான்ஸ் கூட கொடுக்காம கட் செய்து வச்சிடுறா...”
ஜான்வி இப்போதும் அமைதியாக அமர்ந்திருந்தாள். ஆனால் சரவணன்,
“இதெல்லாம் ஒரு பெரிய ரீசனா? ரூபிணி கூட கோவிச்சுப்பா... நம்ம வேலை அப்படின்னு அவங்களுக்கு எப்படி தெரியும்... சொன்னால் புரிஞ்சுப்பாங்க,” என்றான்.
“சொன்னா புரிஞ்சுப்பாங்க சரி... சொல்ல விட்டால் தானே? சரோ, இன்னைக்கு சரி... இன்னும் ஒரு வாரத்துக்கு சரி... ஒரு மாசத்துக்கு சரி... அப்புறம்? எவ்வளவு நாள் தான்டா நான் அவ புரிஞ்சுப்பான்னு வெயிட் செய்துட்டே இருக்க முடியும்? என் மனைவிக்கு எல்லா விதத்திலும் சப்போர்டிவா இருக்க தான் நான் விரும்புறேன்... இருப்பேன்! அதுல எந்த சந்தேகமும் இல்லை... ஆனால் என் மனைவியும் எனக்கு கொஞ்சமாவது சப்போர்டிவா இருக்கனும்டா... நான் ஆர்த்தியை தப்பா சொல்லவே இல்லை! அவளோட எக்ஸ்பெக்டேஷன்ஸ் எனக்கு புரியுது... ஆனால் நான் அந்த எதிர்பார்ப்பை எல்லாம் நிறைவேத்தும் நிலையில இல்லை... ஷீ