(Reading time: 29 - 57 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

இந்த முன் பக்கம் திருப்பி கட்டிப்பிடித்தான் சரியாக வராமல் போகவே அவளை வேறுபக்கம் திருப்பினான் இப்படியே அவளை திருப்பி திருப்பி கட்டிபிடிக்கவும் அவளுக்கு வெட்கம் போய் அலுப்பு வர அவனை தள்ளி விட்டு ஆயாசமாக மெத்தையில் அமர்ந்துக்கொண்டாள்.

   

”ஏய் என்னாச்சி வா நான் இன்னும் சரியா கட்டிப்பிடிக்கலை வா வா” என அழைக்க

   

”அத்தான் என்னால முடியலை என்னை ஏன் இப்படி ரவுண்டு சுத்த விடறீங்க”

   

“இல்லை எனக்கு வாட்டம் வரலை அதான்”

   

“அதுக்குன்னு இப்படியா எனக்கு மூச்சு வாங்குது அத்தான்” என சொல்லிவிட்டு படுத்துவிட்டாள். அவள் படுத்தது தவறாகிவிட்டது. அவளை ஆசையாக பார்த்தவன் அவள் பக்கத்தில் படுத்து அவள் முகத்தையே பாரத்தான். சரியாக அந்நேரம் கதவு தட்டும் ஓசை கேட்கவும் நந்தினி உடனே எழுந்துக்கொண்டாள்.

   

”அய்யோ யாரோ வராங்க” என பயத்தில் கத்தியவளை சமாதானப்படுத்தினான் ரிஷி.

   

“யாருமில்லை நீ பேசாம இரு நான் பார்க்கறேன்” என  அவளை இழுத்து மெத்தையில் மறுபடியும் சரியாக படுக்க வைத்துவிட்டு மெதுவாக எழுந்து சென்று கதவை திறந்தான்.

   

அங்கு அர்ஜூன் இருக்கவும் தலையில் அடித்துக்கொண்டான். அர்ஜூனோ ரிஷியை அவ்வாறு டவலுடனும் உள்ளே நந்தினி படுக்கையில் படுத்திருப்பதையும் தன்னை பார்த்ததும் பயத்துடன் எழுந்து நின்றதையும் கண்டு தவறாக நினைத்தவன் தன் உயிரான அண்ணனாக பாவித்த ரிஷியின் மீதே கோபம் கொண்டு துணிந்து அவனை அடிக்க கையை ஓங்கிவிட்டான் அர்ஜூன். அதைப்பார்த்து அதிர்ந்த ரிஷியும் அர்ஜூனின் கோப விழிகளில் பலியாகிக்கொண்டிருந்தான்.

  

Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.

    

தொடரும்.

Go to Thooral pola kathal theenda story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.