(Reading time: 7 - 14 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

"ஏன், நீ ப்ரியாவை அழைச்சிட்டு வரது தானே?"

   

சரவணன் சொன்ன ஐடியாவை கேட்டு விக்கிராந்திற்கும் ப்ரியாவை உடன் அழைத்து செல்லும் ஆசை ஏற்பட்டது!

   

"ஆமாம் விக்கி, அவங்களையும் கூப்பிட்டு வாயேன். காஞ்சிபுரம் போனப்போ என்னால அவங்க கூட சரியாவே பேச முடியலை," என ஜான்வியும் சொன்னாள்!

   

"ப்ரியா கிட்ட கேட்டுப் பார்க்குறேன்!" என்ற விக்கிராந்திற்கு காலையில் ப்ரியா சிந்திய அந்த சின்ன புன்னகை கண் முன் தோன்றி விளையாடியது.

   

அவளுடைய மொபைலில் அழைத்தால் அவள் எடுக்க போவதில்லை, சரி மெசெஜாவது அனுப்புவோம் என்ற முடிவுடன் மொபைலை கையில் எடுத்தவன்,

   

"ஒரு அர்ஜன்ட் கால் பேசனும், நான் டென் மினிட்ஸ்ல வரேன். நீங்க பேசிட்டு இருங்க," என்று சொல்லிவிட்டு விடுவிடுவென அங்கிருந்து நடந்தான்.

   

விக்கிராந்த் சென்ற திசையை பார்த்திருந்த ஜான்வியும், சரவணனும் தங்களுக்குள் சிரிப்பை பகிர்ந்துக் கொண்டார்கள்.

   

"சார் ப்ரியா மேடமோட பேச போறார்!"

   

"அப்படி தான் தோணுது சரோ! என்ன கோபம் வருது அவனுக்கு! லுக்ஸ் லைக் ஹி லவ்ஸ் ஹெர் அ லாட்."

   

"எனக்கும் அபப்டி தான் தோணுது ஜானு! ஆர்த்தி ஃபோன் செஞ்சா எடுத்துப் பேசக் கூட அழுவான், இப்போ அவனே ஃபோன் செய்ய ஓடுறான். பட் ஸ்டில் நான் பேசினதும் கூட தப்பு தான்."

   

"விடு சரோ, நீ தெரியாம தானே செஞ்ச!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.