(Reading time: 49 - 97 minutes)

 

" வங்க கல்யாணம் ஆனவங்களா ? ஆயிருந்தா  ஏன் மாடர்ன் பேருல தாலி இல்லாம வராங்க... ஆகலேன்னா ஏன் இப்படி இருக்கணும் ... அண்ட் "

" அண்ட் ? "

" பாஸ் ஏன் ஜானகிக்கு இவ்வளோ இடம் கொடுக்கணும்னு ......."

" புல் ஷிட் ... இவங்கலாம் வேலை செய்ய வராங்களா இல்லை..........." என்று பற்களை கடித்தவன்,

" ஜானகி இப்போ எங்க ? " என்றான்

" சுஜாதா மேடம் ரூம் ல.. "

புயலென உள்ளே வந்தவன் வாணியையும் அவளின் தோழிகளையும் தனதறைக்கு அழைத்தான்.

ரகு உள்ளே நுழையும்போதே ஜானகி அவனை பார்த்து விட்டாள். அவன் பின்னே வாணியும் செல்வதை கண்டு இப்போதைக்கு அங்கே போக வேண்டாம் என்றபடி சுஜாதாவின் அறையில் அமர்ந்திருந்தாள். அரைமணி நேரம் ஆகியும், அவன் தன்னை அழைக்கவில்லையே என்று அவளே அங்கு நுழையும்போது,

" ஜானகிக்கு என்ன உரிமை இருக்குன்னு கேக்க யாருக்கும் உரிமை  இல்ல... இங்க நான் எப்படியோ எப்படித்தான் ஜானகியும் ... நாங்க வேற வேற இல்லை .. இதை ஏத்துக்க முடியாதுன்னா நீங்க எப்போ வேணும்னாலும் இந்த வேலையை விட்டு போகலாம் " என்று கர்ஜித்தவன் அப்போதுதான் ஜானகியை பார்த்தான் ....

" யு மே கோ நவ் " என்று அவர்களை அனுப்பிவிட்டு

" ஜானகி "

" ம்ம்ம்"

" வெளிய போகணும் கெளம்பு "  என்றபடி கார் சாவியை எடுத்தான்.  ஏற்கனவே வேதனையில் இருந்தவளுக்கு அவனின் வார்த்தைகள் ஆறுதலும் அதிர்ச்சியும் அளித்தது .. அதையும் தாண்டி அவனின் கோபம் அவளுக்கு புதிதாய் இருக்க அமைதியாய் அவனுடன் சென்றாள்..

ரகு காரோட்டும் வேகத்திலேயே  அவனின் கோபத்தை உணர்ந்து கொண்டாள் ஜானகி.

" ரகு " தயக்கமும், பயமும் அவள் குரலில் பிரதிபலிப்பத்தை உணர்ந்தவனின் கோபம் மெல்ல அடங்க,

" ம்ம்ம்" என்றான்.

" ...."

" ஆபீஸ் ல யாரும் சொன்னா என்கிட்ட சொல்ல மாட்டியா ? நான் வேண்டாதவனா ? "

" அப்படிலாம் இல்ல ரகு ? "

" பின்ன வேற எப்படி ? அவ ஜாடை மாடைய பேசுனா உனக்கு வாய் இல்லையா பதில் கொடுக்க ? "

" அவங்க நம்ம கம்பனி வொர்கெர் ரகு... சண்டை போட்டு ஒருத்தர் ஒருத்தர் முகம் தூக்கி வெச்சிகிட்டு வேலையை பார்க்க முடியும் ? "

" போனா போகட்டும் ஜானு ... உன்னை விட அவங்க எனக்கு முக்கியமா? "

"இல்லே ரகு ... என் மேலயும் தப்புதானே .. ஒருத்தவங்க தப்ப பேசுற மாதிரி நான் ஏன் நடந்துக்கணும் ...அவங்க வாய் பேசுற வாய்ப்பை நான்தானே கொடுத்தேன் "

" ஆமா உன் மேலதான் தப்பு "

" ரகு ...??? "

" எதுக்கு இப்படி இருக்கே ஜானு ? "

" ..........."

" அன்னைக்கு மாதிரி நீ சோகமா இருக்குறதை சொல்லலே.. கல்யாணம் ஆகாத பொண்ணு குங்கமம் லம் வெச்சுகிட்டு ... யாருக்காக ? "

" ராம்காகன்னு  சொல்லாதே "

" ..............."

" இப்படி நீ மாறின பிறகு எத்தனை பேரு உன்னை அவதூரா கேள்வி கேட்டுருப்பாங்க ? இதைதான் ராம் உன்கிட்ட கேட்டாரா ? "

" ......"

" நீ மகாபாரதம் பார்பியா ? "

" ம்ம்ம்ம்"

" அதுல கிருஷ்ணர் சொல்வாரு , யாருக்கு அவங்க செய்ற காரியம் மேல கர்வம் ஏற்படுதோ அது கண்டிப்பா தப்பா முடியும்னு "

" ???"

" கர்வம்னா திமிருடன் இருக்குறது மட்டும் இல்ல ... நான் செய்றது சரிதான் அப்படின்னு  ஓவர் கான்பிடன்ஸ் ல இருக்குறது ... நீ இப்படி கல்யாணம் ஆனா பெண் மாதிரி இருக்குறது உனக்கு சரியான  விஷயம்னு  மைண்ட்ல பிக்ஸ் ஆகிடுச்சு ...."

" ..."

" அதுனாலதான் நீ மத்தவங்களை பத்தி நினைக்கல ... மத்தவங்களை விடு ...உன் அப்பா உன் கோலத்தை பார்த்து எவ்வளோ பீல் பண்ணிருப்பாரு... பானு அத்தை அர்ஜுன்  எவ்ளோ வருத்தப்பட்டுருபாங்க ? "

"......"

" பேப்பர் ல பாரு ... கல்யாணம் ஆனா  பெண்களுக்கும்தான்  ஆபத்து வருது "

"...."

" தற்காப்பு என்பது திருமணத்துல இல்ல ... கல்யாணம் ஆனா பொண்ணுனா உடனே ஏறிட்டும் பார்க்காத அளவு இந்த உலகமும் ரொம்ப நியாயமான உலகம் இல்ல... "

" ம்ம்ம்ம் "

"  நீ இப்படி இருந்தாதான் இது  உனக்கு பாதுகாப்பாக இருக்கும்னு இல்லை. அதுவும் நம்ம கலாச்சாரத்துல ஒரு குழந்தை பிறக்குறதுல இருந்து ஒரு மனுஷன் சாகுற வரை எல்லா சடங்கு சம்ப்ரதாயத்துலயும் ஒரு அர்த்தம் இருக்கு .. நாம்தான் மாடர்ன் அது இதுன்னு  பல விஷயங்களை பின்பற்றுறது இல்ல... பட் அட்லீஸ்ட் அதை மாத்தாம இருக்கலாம் ல.."

" ஹ்ம்ம் "

" உன்னை நீயே ஏன் கஷ்டபடுத்திகுற ஜானகி ? உன் மனசுல ஸ்ரீராம் இருக்குறது உனக்கு மட்டும் தெரிஞ்சா போதாதா ? " என்றவனின் குரலில் அவனையும் மீறி ஒரு தடு மாற்றம் இருந்தது .

" இதுவரை நான் இந்த அளவு யோசிக்கல ரகு .. உங்க அளவுக்கு யாரும் ஆதங்கத்தோடு இதை என்கிட்ட சொல்லவும் இல்ல... நீங்க சொன்ன மாதிரி நான் செய்றதுதான் சரின்னு நானும் நெனச்சுகிட்டேன் ... ஆனா இனி இப்படி இல்லாம பார்த்துக்குறேன் "

" தட்ஸ் குட் " என்ற ரகுராம் அவனையும் அறியாமல் அவள் உச்சந்தலையில் கை வைத்து ஆதாரமாய் தடவி விட , ஜானகிக்கு ரகு முகத்தில் ஸ்ரீராமின் முகம் பார்பதுபோல் இருந்தது .. ஸ்ரீராமும் எப்போதும் அவன் பேச்சை ஜானகி ஏற்கும்போதேல்லாம் அவள் தலையை அன்பாய் வருடுவான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.