(Reading time: 49 - 97 minutes)

 

வர்களின் காதல் நாடகத்தை கண்டும் காணததுபோல் இருந்தனர் தாயார் இருவரும். அபிராமி கிருஷ்ணனிடம் மருத்துவமனையில் நடந்தது அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டார். அதன்பின்,

" மீரா நீ குணம் ஆகும்வரை இங்கேயே இரு " என்றார் அபிராமி .

" ஆன்டி நான் எப்படி இங்க ? பரவாயில்ல நான் வீடுக்கு போறேனே "

" அதெலாம் உன்னை எப்படி தனியா விட முடியும் ? நீ இங்கதான் இருக்கணும் " என்று  சிவகாமியும் சொல்ல,

" இல்ல என் திங்க்ஸ் எல்லாம் ............ " என்று என்ன காரணம் சொல்வது என்று புரியாமல் விழித்தாள் மீரா.

" அட, உன் டிரஸ் எல்லாம் ஏழு கடல் ஏழு மலை தாண்டியா இருக்கு ? நானும் அண்ணாவும் அஞ்சே நிமிஷத்துல எல்லாத்தையும் கொண்டு வந்துருவோம் " என்று கூறி மீராவை ஒருவாறு சம்மதிக்க வைத்தாள் நித்யா.. சிறிது நேரத்திற்கு பிறகு, மீராவை ஓய்வெடுக்க கூறிவிட்டு, நித்யாவும் கிருஷ்ணனும் மீராவிற்கு தேவையான பொருட்களை எடுத்து வர சென்றனர் .... ( கிருஷ்ணா சார் , உங்க காட்டுல மழை பெய்யுது ... என்ஜாய் )

" அண்ணா நம்ம அடுத்த ப்ளானை ஆரம்பிக்க வேண்டியதுதான் "

 " இப்போவேவா? "

" என்ன இப்போவேவா ? உங்க ஜோடிகூட சேருறா ஆசை இல்லையா உங்களுக்கு? " ( ஆமா கிருஷ்ணா எல்லாரும் அதுக்குதானே வைட் பண்றோம் ...நீங்களும் உங்க தம்பி மாதிரி லேட் பண்ணாதிங்க )

" ஐயோ அப்படி இல்லடா... மீராவுக்கு அடிபட்டுருக்கே .,... அவளாலே இப்போ எப்படி  அங்கே போக முடியும் ? "

" மக்கு அண்ணா... அதான்  ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்க போறாளே ... அதுக்கு பிறகு போகட்டும் ... பட் மீராவுக்கு ஸ்ப்ரைன் ஆனதும்  நல்லதுக்குதான் "

" ஏன் "

" மீராவை பொருத்தவரை சஞ்சய் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபீசர்"

" யாரு நம்ம சஞ்சய் ??? ஹா ஹா ஹா நான் தான் அவனை ஸ்ட்ரிக்ட் ஆ இருக்குற மாதிரி நடிக்க சொன்னேன் ... ஆமா நீ கூட காருல அவன் பெரிய கோபக்காரன் என்ற ரேஞ்சுக்கு  பில்டப் கொடுத்தியே "

" பின்ன  நம்ம நீலாம்பரிக்கு சந்தேகம் வர கூடாதே .. அதான் சஞ்சயை எனக்கு தெரியாத மாதிரி பேசுனேன்...சரி விஷயத்துக்கு வரேன் ... நேத்து  நம்ம சொல்லி தானே சஞ்சய்  மீராவுக்கு ஓவர் வேலைய கொடுத்து அவளை லேட்டா வீட்டுக்கு வர வெச்சோம், பட் அது தெரியாத மீரா என் கிட்ட என்ன சொன்னா தெரியுமா ? "

" என்ன? "

" என் பாஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட் டீ .. காலையில நான் லேட்டா வந்துட்டேன்னு இவினிங்  நிறைய வேலை தந்துட்டாரு ... எப்பவும் அப்படிதான்... அவருக்கு வேண்டிய வேலையை கரெக்ட் ஆ பேசி நடத்திகுவாருன்னு சொன்னா "

" அதுக்கு ? "

" இப்போ ஒரு வாரம் கழிச்சு மீரா வேலைக்கு போனா, கண்டிப்பா சஞ்சய் அதிகமான வேலை கொடுப்பான்னு மீராவுக்கு தெரியும் .. சோ அதையே சாக்கா  வெச்சு அந்த ப்ராஜெக்ட் பத்தி அவனை சொல்ல சொல்லுவோம் "

" ...."

" கண்டிப்பா மீராவுக்கு எந்த டவுட்டும் வராது ... எதிர்ச்சையா அவ புவனேஸ்வரியை மீட் பண்றதா தான் நினைச்சுக்குவா ? "

" இதெல்லாம் சரியாய் வருமாடா ? "

" ஏன் வராது? நம்ம நல்ல நேரம் புவனாவை நாம சந்திச்சது ... அண்ட் நாமளும் மீராவை ஏமாற்ற போறது இல்ல.. பொதுவா சில பேருக்கு மூணாவது மனுஷங்க பேசுனாதான் மண்டையில ஏறும் ... உங்க  மீராவும் அப்படித்தான் "

" ஒய் "

" சரி சரி கூல் டவுன் ... பட் எல்லாம் நல்ல விதமா நடக்கும் ... நீங்க அந்த ராமசாமி மகனிடம் பேசுங்க ..... அண்ட் இந்த ஒரு வாரம் மீரா ஒரே வீட்டுலயா ? ஹ்ம்ம் அப்பறம் என்ன 24 மணி நேரமும் டூயட் தான் ...கலக்குங்க அண்ணா "

" வாலு வாலு ...இரு உன்னை சஞ்சைகிட்டா மாட்டி விடுறேன் "

" வேற விணையே வேணாமே ... அப்படிலாம் பண்ணிடாதிங்க அண்ணா.... ஹி இஸ் நாட் மை டைப் "

" அதையும் பார்க்குறேன் "

(டிங்  டிங் டிங் .... மீரா -  கிருஷ்ணா கதையை கேட்டச்சுல.... டைம் ஆச்சு பாருங்க ... இப்போ இவினிங் .. காருல நம்ம ரகு - ஜானகி என்ன பெஸ்ரங்கன்னு கேட்க வேணாமா ? வாங்க அங்க  போவோம்... )

குவின் காரில்,

சாலையில் கவனம் செலுத்தினாலும் அவ்வப்போது ஜானகியை  பார்த்து கொண்டுதான் இருந்தான் ரகு ... சிறிது நேரம் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தவள், ஏதோ ஒன்று உறுத்த சட்டென ரகுவின் பக்கம் திரும்பினாள்.

" என்ன ரகு பார்க்குறிங்க ? "

" உன்னைத்தான் பார்த்தேன் ஜானு " அவனின் வெளிப்படையான பதிலில் துணுக்குற்றவள் கேள்வியுடன் அவனைப் பார்த்தாள்.

" என்ன ஜானகி ? "

" இல்ல என்னை ஏன்  பார்த்திங்க ? "

" நான் மட்டுமா ? இன்னைக்கு ஆபீஸ் மொத்தமும் உன்னைத்தானே பார்த்திச்சு  "

" ...."

" நீ எவ்வளோ டேலண்டட் தெரியுமா ஜானு ? வந்த முதல் நாளே, எல்லாரையும் இம்ப்ரஸ் பண்ணிட்ட ... அதுவும் திடீர்னு வெச்ச மீட்டிங்கா இருந்தாலும் , நீ உன்னை அறிமுகபடுத்திகிட்ட விதமே உன் திறமையை தெளிவாக காட்டிருச்சு. சுஜா கூட சொன்னாங்க, நீ அந்த வாணி குரூப் கிட்ட கூட ரொம்பே ப்ரண்ட்லியா அப்ரோச் பண்ணியாமே .... எப்படி ஜானகி ? "

" ஹா ஹா இதெல்லாம் என்ன பெரிய விஷயம் ரகு ? நான் படிச்சதே பிசினஸ் மேனேஜ்மன்ட் தான். காலேஜ்ல எங்க ஜூனியர் எல்லாருக்கும் கவுன்சல் பண்ணுறதுக்கு தனி டீம் இருந்துச்சு ... நான் அதுலயும் ஒரு மெம்பெர் ... சோ பொதுவா யாரையும் அப்ரோச் பண்றது எனக்கு கஷ்டம் இல்ல... பட் இதெலாம் இவ்வளோ நாள் காட்டிகல...காட்டிக்க சந்தர்ப்பம் கிடைக்கலன்னு சொல்றதை விட நான் அதை உருவாக்கிகலன்னு தான்  சொல்லுவேன் "

" ...... "

" ராம் போனதுக்கு அப்பறம் நான், எதையும் ஆர்வமா செய்யணும்னு  நினைக்கல ரகு .. சொல்ல போனா இப்போ இந்த மாற்றத்துக்கு நீங்கதான் காரணம் .. என் மேல நீங்க வெச்சுருக்குற நம்பிக்கையை காப்பாத்தனும்னு ஒரு எண்ணம்... அண்ட் சுஜாதாவை பத்தி சொல்லியே ஆகணும் .. சீனியர்னு ஒரு பந்தாவே இல்லாம இருக்காங்க... ரொம்ப சப்போர்டிவ்.... அவங்க ரிசைன் பண்றது உங்களுக்கு எவ்வளோ கஷ்டம்னு ஒரே நாளுல என்னாலே புரிஞ்சுக்க முடியுது ரகு... டோன்ட் வொர்ரி ..ஐ வில் ஹெல்ப் யு " என்று புன்னகைத்தாள் ஜானகி.

வழக்கம் போல அவளுக்கு புரியாத அதே பார்வையை வீசினான் ரகுராம். அப்படி என்னதான் இருக்கு அந்த பார்வையில் ? என்று தனக்குள்ளேயே கேட்டுகொண்டாள் ஜானகி .. ( கவலைய விடுங்க கண்ணீரை துடைங்க ஜானு ... அந்த பார்வையின் அர்த்தத்தை நான்  உங்களுக்கு சொல்றேன் ...ஐ மீன் மீரா சொல்லுவாங்க ...ஹீ ஹீ )

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.