(Reading time: 11 - 22 minutes)

வான்மழை மாயை என்றால்???

பாலைவனத்தில் அதீத நாட்களாக பயணிக்கும் ஒருவனின் கண்களுக்கு,ஒருநாள் நிச்சயம் நீர் புலப்படும்.

ஆனால்,அது கானல் நீராகவே இருக்கும்.

இதனை உணர்ந்தவன் தன் பயணத்தை சலனமின்றி தொடர்கிறான்.உணராதவன் ஏமாற்றம் அடைகிறான்.

தெய்வீகம் என்பது ஒவ்வொரு அணுவிலும்        படைக்கப்பட்டது.

இப்பிரபஞ்சம் இல்லை என்றால்....

இன்று,மனிதன் ஒரு மண்ணாய் கூட மதிக்கப்பட்டிருக்க மாட்டான்.

நீதி என்ற செந்நெறி கானல் நீராகி இருக்கும்."

"இந்த வாழ்வின் முடிவில் ஒரு மனிதன் எதை பிராப்தமாக பெறுவான்?"

"எவன் ஒருவன் புண்ணியத்தை கருதாது,தனக்கு மிஞ்சிய சக்தி உண்டு என்பதை உணர்கிறானோ...அவன்,

உலகம் உயர வழிவகுக்கும் தேவராய் வாழ்வான்."

"நடக்கப்போவதை அறிந்தும்,மனிதனை தீய வழியில் செல்ல ஏன் அனுமதிக்கிறீர்?"

"நெருப்பு சுடும் என்று தாயால் பிள்ளைகளுக்கு கூற தான் முடியும்.நெருப்பு தான் வேண்டும் என்று அழும் பிள்ளைகளின் விரல்களை தாயால் தீயில் சுட்டு காயப்படுத்த இயலாது."

"மனிதனின் மகத்துவம் என்ன?"

"இந்த ஜகத்தினில் மகத்துவம் பெற்றவன் மனிதனே ஆவான். இறைவனின் வாகனங்களாக விலங்குகள்          சித்தரிக்கப்பட்டாலும், அவற்றை ஆள்பவன் மனித உருக் கொண்டே சித்திரிக்கப் படுகிறான் அல்லவா??

"செய்த பாவத்திற்கு வருந்தி,முக்தியை வேண்டுபவனுக்கு முக்தியை பெறும் வரம் கிட்டுமா??"

"நிச்சயம்...தன் தவறுகளை எவன் ஒருவன் ஏற்கிறானோ...அவன் அக்கணமே மன்னிப்பை பெறுகிறான்.அவன் ஆன்மா வேள்வித்தீயால் புனிதம் அடைகிறது.அவன்,    இறைத்துவத்தை நிச்சயம் அடைவான்!"

"துன்பம் வரும் பட்சத்தில்,காப்பாற்றும் படி மனிதன் மன்றாடும் சில வேளைகளில் இறைவனின் உதவிக் கிடைக்காதது எதனால்??"-அவர், ஷைரந்தரியை உற்று நோக்கினார்.

"மனிதனின் நிழல் ஒன்றை எப்போதும் உணர்த்தும்.அது,அவன் பிம்பம் அல்ல இறைவனின் சாயல்.

அவன் துன்பம் வரும் வேளையில் இறைவனால் தாங்கப்படுகிறான்.

அன்று...திரௌபதியின் மானம் காக்க வாசுதேவனின் சுதர்சனம் விரைந்தது.

உனது மானம் காக்க அக்னி வளையம் தோன்றியது.

கல்பனாவின் புனிதத்தை உலகிற்கு உணர்த்த ஷைரந்தரி என்பவள் இவ்வுலகில் அவதரித்தாள்."-என்றார்.

ஷைரந்தரி நிமிர்ந்தாள்.

"இறைவன் மனிதனால் இயலாத சமயம் ஒன்றிலே உதவ முன் வருவான். கல்பனா நினைத்திருந்தால் அன்று அவள் விதி நிச்சயம் மாறி இருக்கும்.

ஆதிசக்தியின் கரங்கள் கட்டுபடவில்லை என்றால்...

இன்று உனக்கு இங்கு எந்த வேலையும் இல்லை."

"சகலத்தையும் தன்னுள் அடக்கிய பரமாத்மா அடங்க காரணம்?"

"சத்தியம்...இறைவனால், ஒருவன் கேட்கும் வரத்தை கொடுக்காமல் இருக்க இயலாது.அதை தவறான வழியில் பயன்படுத்தினால்,வரும் விளைவு...ஒரு நொடி அக்கன்னிகை இரட்சிக்க வழி பிறக்கும் என்று எண்ணி இருந்தால்...விதி மாறி இருக்கும்!"

"தர்மத்தை நிலைநாட்ட பல துன்பங்கள் தோன்ற தான் வேண்டுமா?"

"நிச்சயம்...சாதாரணமாய் கிடைத்த எந்த வெற்றியும் உலகோரால்      வணங்கப்படாது.

தர்மத்தை வியாக்க மனிதன் பிறக்கிறான்.ஆனால்,அவன் அதை உணராததால் அதை உணர்ந்தவர் மண்ணின் மைந்தனாக        வணங்கப்படுகிறார்!"

"தாம் கூற விரும்புவது எதை?இந்த உலகிற்கு தாம் எதை உணர்த்த நினைக்கின்றீர்கள்?""மனதில் உள்ள சலனங்களை விடு மகளே..!

உன்னை இரட்சிக்க உலகின் பரமாத்மா காத்து கொண்டிருப்பதை உணர்!எந்த பிரச்சனைக்கும் ஒன்று முடிவு உண்டு!!!இறைவன் மீது நம்பிக்கைக் கொள்.

அளப்பரிய இன்பத்தை பெறுவாய்.

உன்மீது அக்கறை காட்டும் உறவுகளை ஒதுக்காதே..!

பேரின்பத்தை அடைய முதலில் நாடி வந்த சிற்றின்பத்தை பூர்த்தி செய்...

அது,தர்ம வழியில் நிகழட்டும்.

உன் மனம் கவர்ந்தவன் நிலையை உணர்வதும் உன் தர்மமாகும் மகளே...!!!!"-அவர் குறிப்பிடுவது எதை என புரிந்தது.

அவர் சிரித்தார்.

ஷைரந்தரி அவர் பாதம் பணிந்தார்.

"சர்வ மங்கலம் பிராஸ்திரஸ்தூர்!"-ஆசி வழங்கினார்.

ஷைரந்தரிக்கு மனம் தெளிந்தது.

புத்துணர்வோடு வீடு சேர்ந்தாள்.

அவள் முகம் இழந்த தேஜஸ்சை மீட்டது.

"எங்கே அம்மூ போயிருந்த?"

"கோவிலுக்கு!"-சிரித்த முகம் கண்டதும்,சிவாவிற்கு பிரகாசம் வந்தது.

"அம்மூ..வினய் உன் கூட பேசணும்னு வந்திருக்கான்!"

"எங்கே?எங்கே?"-குழம்பிவிட்டான் சிவா.

"தோட்டத்துல!"

"நான் பார்த்துக்கிறேன்!"-என்றப்படி தோட்டத்தை நோக்கி நடந்தாள்.

அவளை கண்டதும் வினய் வெற்றி புன்னகையை வீசினான்.

ஷைரந்தரி சிரித்தப்படி,

"ஹலோ வினய்...எப்படி இருக்கீங்க?"-அவனுக்கும் குழம்பியது.

"நல்லா இருக்கேன் ஷைரு!"

"ஷைரந்தரி!"

"நான் உன்னை ஷைருன்னு கூப்பிட கூடாதா??"

"கூடாது..."

"நான் உன்னை கல்யாணம் பண்ண போறவன்!"

"யார் சொன்னா?"

"................"

"நான் சொன்னேனா?"

"பின்ன என் பாட்டி வந்து கேட்டப் போது,அமைதியா இருந்த?"

"அமைதியா இருந்தா, சம்மதம் ஆயிடுமா?ஆக்சுவலி...நான் ஒருத்தரை லவ் பண்றேன்!"-என்றாள் நெளிந்தப்படி,

"யாரது?"-கோபமாக கேட்டான்.

அந்நேரம் யுதீஷ்ட்ரன் போன் பேசியபடி வெளியே வர,

"அது..."

"யாரு?"

"மாமோய்!"-என்று கத்தினாள்.

யுதீஷ்ட்ரன் திரும்பினான்.

அவள் தன்னருகே வர சொல்லி சைகை காட்டினாள்.

இணைப்பை      துண்டித்துவிட்டு வந்தான்.

"இவர் தான் அது!"-இருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை.

"இவனா?"

"ஆமா...நல்லா இருக்கார்ல?நீங்க எந்த கனவும் காண வேண்டாம்.சரியா!"-வினய் கோபமாக இருவரையும் பார்த்துவிட்டு,சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.