(Reading time: 30 - 59 minutes)

13. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - புவனேஸ்வரி கலைச்செல்வி

" ஹே ஹிட்லர்  என்னை யாருடா இறக்கி விடுவா ?" என்ற காவியாவின் குரல் அங்கிருந்த அனைவரையுமே எட்டியது ? " யார் அது என் எழிலை ஹிட்லர்ன்னு சொல்றது ?" என்று சட்டென தோன்றிய எரிச்சலில் முகில்மதியும் , " இது தர்ஷினி குரல் மாதிரி இருக்கே " என்ற ஆவலில் கதிரும் " யாரிந்த பெண் ?" என்ற கேள்வியுடன் அனைவரும் நின்றுகொண்டிருந்தனர்.. முழுதாய் பின்னலிடப்படாத  கூந்தல் அவளது முகம் மறைக்க, காவியாவின் முகம் பார்க்க முடியாமல் நின்றான் கதிரேசன்.

எழிலிடம் கேள்வி கேட்டப்படி ஆர்வகோளாரில் இடது காலை ஊன்றி இறங்க வந்தவளை செல்லமாய் கடிந்து கொண்டான் எழில் ..

" கொஞ்ச நேரம் பொறுமையா இருக்க மாட்டியா நீ ?? இதுல பாவாடை தாவணி வேற .. உனக்கு பழக்கம் இல்லாத டிரஸ் எல்லாம் எதுக்கு டீ போடுற நீ ?" என்று கேட்டுகொண்டே கை பிடித்து அவளை தூக்க முயன்றான் அன்பெழிலன் .

Ithanai naalai engirunthai

"  இருங்க நானே  ஹெல்ப் பண்ணுறேன்  " என்று சொல்லி ஓடி வந்தாள்  முகில்மதி. கண்களில் அனல் பறக்க ஒருமுறை அன்பெழிலனை பார்த்துவிட்டு  காவியாவின் அருகில் சென்றாள்  அவள் .. எழிலோ

" ஹே பிசாசு உனக்கு தனியா வெத்தலை பாக்கு வைக்கணுமா ? ஹெல்ப் பண்ணு " என்று ஒரு அதட்டல் போட்டான் மித்ராவிடம் .. அதுவரை அழுது வடிந்த முகத்துடன் ஏதேதோ எண்ணங்களில் உழன்று கொண்டிருந்தவள் நண்பனின் குரலுக்கு கட்டுபட்டு இயல்புநிலைக்கு வந்தாள் .. முகிலாவோ

" மித்ரா அண்ணியையே இவன் அதட்டுறானே , இந்த பெண் என்ன அவ்வளவு முக்கியமானவளா  ? " என்று மனதிற்குள்ளேயே வினவினாள் ..

" சாரி .. சாரிங்க ..ஏதோ யோசனையில் ... " என்று என்ன சொல்வதென்றே தெரியாமல் திருதிருவென விழித்தாள்  சங்கமித்ரா.. காவியாவோ  மிக இயல்பாய் அவள் கைகளை பிடித்து கொண்டு

" அடடே என்ன மித்ரா நீங்க ? இவன் என்னமோ உங்களை பத்தி எக்குத்தப்பா சொல்லி  வெச்சான் ... நீங்க என்னடான்னா இவ்ளோ பரம சாதுவா இருக்கீங்க ? ஏன்டா ஹிட்லர் நீ அடங்காத குரங்கு மித்ரான்னு சொன்னியே அது  இவங்க இல்லையோ ?" என்று சரியான நேரத்தில் பற்றவைத்தாள்  காவியதர்ஷினி.

" அம்மா தெய்வமே ப்ளீஸ் என்னை இன்னும் கொஞ்ச நாள் உயிரோடு வாழ விடு " என்று கைகளை உயர்த்தி பெரிய கும்பிடாய்  போட்டான் அன்பெழிலன்.

" ஹா ஹா தர்ஷினிக்கு ப்ரண்ட்  ஆகிட்டா கும்பிடுறது என்ன ? தீமிதிச்சாலும் ஆச்சர்யபடுறதுக்கு  இல்லை அன்பு " என்று சொல்லியபடி ஸ்டைலாய் வந்தான் கதிரேசன் சிரிக்கும் விழிகளுடன் ..

இதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அவளது திகைப்பிலேயே தெரிந்தது.. கடந்த ஒருவாரமாய், என்னத்தான் அன்பெழிலன் அவளோடு இருந்திருந்தாலும் கூட காவியாவின் மனம் கதிரேசனை தேடியது உண்மை தான் ! அவளுக்கே இது புதிதொரு மாற்றமாய்தான் தோன்றியது..இரண்டு மூன்று முறை   இத்தனை நாட்களாய் உணராத நேசம், இத்தனை நாட்கள் அவன் அருகில்  இருந்தபோது எழாத உணர்வுகள் அனைத்தும் மொத்தமாய் உருவெடுத்து அவன் இல்லாதபோது ஆயிரம் கதைகளை காவியமாய் அவளது மனதில் தீட்டியது..

நேற்று

அதை மறந்துவிட்டேன் !

நாளை

அதை துறைந்துவிட்டேன் !

இன்று

அது மட்டுமே நிஜம் .. அதில் நித்தமும்  உன் நினைவு மட்டுமே!

 என்று சரணாகதி அடைந்திருந்தாள்  அவள் .. அவள்  காதலின் ஆழம் யாருக்கு தெரியும் ? இதோ அவளுக்கே அவன் கண்முன்னே நிற்கும்போதுதான் தெரிகிறது. மொத்தமாய்  காதலில் கனிந்திருந்த மனமும் மகிழ்ச்சியில் விகாசிக்கும் முகமுமாய் நின்றிருந்தாள்  காவியதர்ஷினி. கண்களில் லேசாய் நீர் கோர்க்க கண் சிமிட்டினால் எங்கு அவன் மறைந்து விடுவானோ என்றஞ்சி அப்படியே நின்றிருந்தாள் .. சற்று முன்பு காரில் கேட்டுக்கொண்டிருந்த பாடல் அவள் மனதில் மீண்டும் ஒலித்தது ..

அய்யயோ ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே

நூறுகோடி வானவில்  மாறிமாறி சேருதே

காதல் போடும்  தூரலில் தேகம் மூழ்கி போகுதே

ஏதோ  ஒரு ஆச ..வாவா கதை பேச

ஏதேதோ எண்ணங்களில் இருந்தவளின் வலது கரத்தில் யாருக்கும் தெரியாமல் கில்லி வைத்தான் எழில்.. அதில் தன்னிலைக்கு வந்தவள், சட்டென இயல்பாய் மாறி

" கதிர் நீங்க இங்க என்ன பண்ணுறிங்க  " என்றாள் .. தன் கேட்க வந்த கேள்வியை அவள்  கேட்டு வைக்கவும் கதிரின் புன்னகை பெரிதானது .. அதற்குள் திவ்யலக்ஷ்மி தான்

" இந்த பெண்ணை உனக்கு தெரியுமா கதிர் ?" என்று கேட்டு வைத்தார்.

" ம்ம்ம் ஆமாம்மா.. இவ காவியதர்ஷினி .. நாங்க ஒரே கம்பனியில வேலை செய்யுறோம் .. என்னுடைய பெஸ்ட் ப்ரண்ட்  " என்றான் தெளிவாய் .. " ப்ரண்ட்  " என்று சொன்னதில் அவள் மனம் சிலுப்பி கொண்டு நின்றாலும் " பெஸ்ட் " என்ற வார்த்தையில் அவன் காட்டிய அழுத்தம் அவளுக்கு பிடித்திருந்தது .. அன்று ரிஷி பேசியதை இப்போது நினைவு கூர்ந்த எழில் " ஓஹோ அந்த கதிர் தான் இந்த கதிரா ?" என்று கேட்டுகொண்டான் ..

" உலகம் அவ்ளோ சின்னதாவா இருக்கு ? " என்று தன்னைத்தானே சந்தேகித்தும் கொண்டான் . வந்ததில் இருந்தே எழிலின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனித்து கொண்டு இருந்த முகில்மதியின்  கண்களில் அவன் அவளை கிள்ளியதும் தென்படாமல் இல்லை .. அந்த எரிச்சலில்

" ஓஹோ கதிர்  அண்ணா கூட வேலை பார்க்கிறவங்க, அன்பெழிலன் சாருக்கு  எப்படி தெரியும் ?" என்று கேட்டாள் .. அவள் " அன்பெழிலன் " என்று  அவனது பெயரை முழுதாய் அழைத்ததிலேயே அவளது மனநிலையை கண்டுக் கொண்டான் அன்பெழிலன்  .. அவன் பதில் உரைக்க தொடங்கும்முன்னே

" அதை  நான் சொல்லுறேன் " என்றாள்  சங்கமித்ரா ..

" நல்லதா போச்சு ...நீ எல்லாத்தையும் சொல்லு மித்ரா .. நான் காரை பார்க் பண்ணிட்டு வரேன் " என்றான் அன்பெழிலன் ..

" ஏன் அன்பு , கார் இங்கயே இருக்கட்டுமே ?" -ஷக்தி

" இல்ல பாஸ் .. எனக்கு பக்கத்தில் இருக்குற கடையில் சில திங்க்ஸ் வாங்கணும் .. கார் இங்கயே இருந்தா கிளம்பும்போது மறந்திடுவேன் .. சோ நான் காரை கடை பக்கத்துல பார்க் பண்ணிக்கிறேன் .. அண்ட் வீட்டுக்கும் கொஞ்சம் கால் பண்ணனும் ..ஜஸ்ட் டென் மினிட்ஸ் " என்று சொல்லி விழியாலேயே தன் தோழிக்கு தைரியம் சொல்லிவிட்டு நடந்தான் அன்பெழிலன் .. என்னத்தான் காவியாவிற்கு கதிரை தெரியும் என்றாலும் மொத்த குடும்பத்தினர் மத்தியிலும் தனியாய் நிற்க அவளுக்கு தயக்கமாய் இருந்தது .. சிறுவயதில் இருந்தே தனித்து வளர்ந்ததும் இதற்கொரு காரணமாய் இருக்கலாம் .. அதை புரிந்து கொண்டவளாய் சங்கமித்ரா

" பீல் ப்ரீ காவியா .. எங்களை உங்க குடும்பமா நினைச்சிகொங்க என்றாள்  .. பிறகு அனைவருக்கும் விளக்கும் தரும் வகையில் பேச தொடங்கினாள் ..

" நம்ம எழில் 3 வருஷமா டெல்லில படிச்சான்ல, அங்க அவனோடு படிச்ச பெஸ்ட் ப்ரண்ட்  தான் காவியதர்ஷினி. அந்த குரங்கை டெல்லியில் தனிகாட்டு ராணியாய் சமாளிச்ச பெருமை காவியாவைதான் சேரும்.. ரெண்டு வருஷம் முன்னாடி தான் காவியாவின் அப்பா தவறிட்டாரு.. அப்போ எழில் மட்டும்தான் இவங்களுக்கு ஆறுதல் .. இப்போ படிப்பு முடிச்சிட்டு சென்னைல இருக்காங்க .. நாங்க மூணு பெரும் சேர்ந்து அப்பபோ க்ரூப் செட் பண்ணி இருக்கோம் .. மத்தப்படி காவியாவை பத்தி எழில் சொல்லித்தான் தெரியும் "

ஒரு கனத்த மௌனம் நிலவியது அங்கு. முகில்மதி முதல் பார்வையிலேயே அவளை தவறாக நினைத்திருக்க கூடாதோ என்று  வருத்தப்பட்டாள் .. கதிரேசனோ இத்தனை நாட்கள் பழகியும் இவளது குடும்ப விவரங்கள் பற்றி அதிகம் நாம் தெரிந்துகொள்ளவில்லையே என்று வருந்தினான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.