(Reading time: 32 - 64 minutes)

ங்க அம்மா அவர் கிட்டே கேட்ட மறு நிமிஷம் அவர் கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டார். அதுக்கப்புறம் என்னாலே அவரை கல்யாணம் பண்ணிக்க முடியாதுங்கிறதை சொல்ற தைரியம் எனக்கு வரவே இல்லை.

அப்பாவை  இழந்திட்டு துவண்டு போயிருந்தாங்க அம்மா. உடம்பில ஒரு சின்ன குறையோட இருக்கிற எனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைச்சிட்டாரு அப்படிங்கிற சந்தோஷத்தில இருந்தாங்க அவங்க.

அதை உடைச்சு போடவும் மனசு வரலை எனக்கு. இந்த பக்கமும் போக முடியாம, அந்த பக்கமும் போக முடியாம நான் அந்த இருபது நாள் எனக்கு நரகமா இருந்தது. அவர் முன்னாடி வந்து நிக்ககூட எனக்கு கூச்சமா இருக்கும்.

என்னோட ரெண்டு மூணு friendsகிட்டே இதைப்பத்தி கேட்டப்போ இதெல்லாம் ஒரு பிரச்சனையா? கல்யாணம் ஆனா எல்லாம் சரியா போயிடும்னு சொன்னங்க. யாருக்குமே என் மனசு புரியலை. வீட்டிலே சொன்னாலுமே இப்படிதான் எடுத்துப்பாங்களோன்னு தோணிச்சு.

சரின்னு மனசை  இறுக்கமா பிடிச்சிட்டு கல்யாணத்துக்கு முன்னாடி நாள் ரிசப்ஷன்லே அவர் பக்கத்திலே நின்னேன்.

அதுக்கப்புறம் மொட்டை மாடியிலே போய் தனியா உட்கார்ந்து அழுதேன். அப்போ அங்கே வந்து பரத்வாஜ் சார் ஆறுதலா என் தோளை தொட்டப்போ எனக்கு அப்படியே..... அவள் கண்களில் நீர் கட்டிக்கொள்ள, அத்தையும் கண்களிலும் அபர்ணாவின் கண்களிலும் கூட நீர் சேர்ந்தது. அங்கே அப்படியொரு கனத்த மௌனம்.

அந்த நேரத்திலே என் மனசிலே இருக்கிற எல்லாத்தையும் யார் கிட்டேயாவது கொட்டணும்னு தோணிச்சு. என் போனை எடுத்து பார்த்தப்போ அதிலே விஷ்வாகிட்டே இருந்து ரெண்டு மூணு மிஸ்ட் கால் இருந்தது. உடனே அவனுக்கு போன் பண்ணேன்.

அவனுக்கு அப்போ எந்த விஷயமும் தெரியாது. எனக்கு கல்யாணம்ன்னு சொல்லி விஷ் பண்ணான். அதுக்கு மேலே என்னாலே தாங்க முடியாம அவன் கிட்டே இந்த கல்யாணத்திலே எனக்கு இஷ்டம் இல்லைன்னு சொல்லி அழுதேன். வேறே எதை பத்தியும் யோசிக்காம  மனசிலே இருக்கிறதை எல்லாத்தையும் கொட்டிட்டு போனை வெச்சிட்டேன்.

காலையிலே ஒரு பொம்மை மாதிரி ரெடியாகி மேடையிலே வந்து உட்கார்ந்தேன். ஆனா விஷ்வா வந்து கல்யாணத்தை நிறுத்துவான்னு நான் எதிர்பார்க்கலை. எங்க பரத்வாஜ் சாரை எல்லார் முன்னாடியும் அவமானப்படுத்தணும்னு நான் எப்பவுமே நினைச்சதில்லை. ஆனா அந்த நிமிஷத்திலே எனக்கு விஷ்வாவோட போயிடணும்னு தான் தோணிச்சு. அதுதான் ரெண்டு பேருக்குமே நல்லதுன்னு தோணிச்சு. பேசாம எழுந்து அவனோட போயிட்டேன்.

கண்களில் கண்ணீர் வழிய சொல்லி முடித்தாள் அஸ்வினி. அந்த கூடத்தில் இருந்த கடிகாரத்தின் நொடி முள் நகரும் சத்தம் மட்டுமே தெளிவாக கேட்டுக்கொண்டிருந்து. வேறு யாரிடத்திலும் துளியும் அசைவில்லை.

சில நிமிடங்கள் கழித்து தன்னை சுதாரித்துகொண்டு தொடர்ந்தாள் அஸ்வினி. 'தப்பு எல்லாம் என்னோடது பரத்வாஜ் சார்' முழுக்க முழுக்க என்னோடது. விஷ்வா மேலே எந்த தப்பும் இல்லை. நான் தான் முதலிலேயே எல்லாத்தையும் சொல்லி இருக்கணும். தப்புதான் தப்புதான் தப்புதான்.' ஒரு பெருமூச்சு எழுந்தது அவளிடம்.

'அதுக்கப்புறம் எல்லாத்தையும் உங்க கிட்டே சொல்லிடணும்னு பல தடவை நினைச்சிருக்கேன். ஆனால் உங்களை இப்படி ஏமாத்திட்டு மறுபடியும் உங்க முன்னாடி எப்படி வந்து நிக்கறதுன்னு தெரியலை. இப்போ கொஞ்ச நாள் முன்னாடி அபர்ணாவை பார்த்தப்புறம், அவங்களாலே உங்களுக்கு ஒரு நல்ல வாழ்கை அமைய போகுதுன்னு தெரிஞ்சப்புறம் கொஞ்சம் தைரியம் வந்தது. எல்லாத்தையும் சொல்லிட்டு, அம்மா மனசிலே இருக்கிற குழப்பத்தையும் போக்கிட்டு உங்க ரெண்டு பேரையும் சந்தோஷமா சேர்த்து வைக்கணும்னு தான் கிளம்பி வந்தேன்'

சொல்லிட்டேன். என் மனசிலே இருந்ததை எல்லாத்தையும் சொல்லிட்டேன் என்னை மன்னிச்சிடுவீங்கதானே பரத்வாஜ் சார் கேட்டாள் அஸ்வினி.

உணர்ச்சி கலவையாக நின்றிருந்தான் பரத். அவள் வார்த்தைகளில் இருந்த நியாயங்கள் அவனை உலுக்கி இருந்தன. அவள் தனக்கு மனதில் எப்படிப்பட்ட இடத்தை கொடுத்திருக்கிறாள் என்ற எண்ணம் அவனை நெகிழ்த்தி இருந்தது. எதுவுமே பேசத்தோன்றவில்லை அவனுக்கு.

சூழ்நிலையின் இறுக்கத்தை கலைக்க இடைபுகுந்தார் தாத்தா. ' டேய் இவளை தயவு செய்து மன்னிச்சிடு டா. இவளுக்காக இல்லைடா. கட்டினா இவளை தான் கட்டுவேன்னு, கால் வலிச்சாலும் பரவாயில்லைன்னு ஒத்தை காலிலே நிக்குற அந்த ஜீவனுக்காக, அந்த அப்பாவி பையனுக்காக இவளை மன்னிச்சிடுடா.'

சட்டென மலர்ந்தது எல்லா முகங்களும். 'யார் தாத்தா அது?' கேட்டான் பரத்.

'அதுவா? அஸ்வின் அப்படின்னு ஒரு பையன். இவ வேலை பார்க்கிற ஸ்கூல்ளோட ஓனர் இவ மேலே உயிரையே வெச்சிருக்கான். இவ என்னடான்னா உனக்கு ஒரு நல்ல வாழ்கை அமையற வரைக்கும் எனக்கு வாழ்க்கையிலே எந்த சந்தோஷமும் கிடையாது அப்படின்னு, அவன் பக்கமே திரும்பகூட  மாட்டேங்கறா'

சின்ன புன்னகையுடன் தலை குனிந்துக்கொண்டாள் அஸ்வினி.

அவங்க வீட்டிலேயும் கல்யாணத்துக்கு ரெடியா தான் இருக்காங்க. அஸ்வினியோட அந்த தாத்தா கொஞ்ச நாள் முன்னாடி இதைப்பத்தி எனக்கு போன் பண்ணி இருந்தாரு.  அவங்களை பார்க்கத்தான் நான்  திருச்சி போயிட்டு வந்தேன். ரெண்டு மூணு மாசத்திலே எல்லாத்தையும் சரி பண்ணி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடலாம்னு சொல்லிட்டு வந்திருக்கேன்' என்றார் தாத்தா.

'ஏன் கண்ணா? அஸ்வினி எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்காங்க? அவங்களை அப்படியே மன்னிச்சுட முடியுமா?  ஏதாவது பனிஷ்மென்ட் கொடுக்க வேண்டாமா?  பரத்தை பார்த்து கண் சிமிட்டிய படியே அபர்ணா கேட்க,

நீயே சொல்லு என்ன பனிஷ்மென்ட் கொடுக்கலாம்? சேர்ந்துக்கொண்டான் பரத்.

'நீங்க அவங்களுக்கு சொல்லிகொடுத்த முதல் பாடம்தான் பனிஷ்மென்ட். எதையுமே மனசிலே வச்சுக்ககூடாதுன்னு சொன்னீங்க இல்லையா? இப்போ அஸ்வினி எதையுமே மனசிலே வெச்சுக்காம, நம்ம அஸ்வின் கிட்டே 'ஐ லவ் யூ' சொல்லப்போறாங்க அதுதான் பனிஷ்மென்ட். அஸ்வின் நம்பர் இருக்கா அஸ்வினி.' என்றபடி அவள் கைப்பேசியை எடுத்து விட்டிருந்தாள் அபர்ணா.

அய்யோ! அதெல்லாம் வேண்டாம் அவள் சிணுங்குவதற்குள் அஸ்வினின் எண் அழுத்தி கைப்பேசியின் ஸ்பீக்கரையும்  ஆன் செய்து விட்டிருந்தாள் அபர்ணா.

அஸ்வினி வேறு வழியே இல்லாமல் தவித்து, சிவந்து 'ஐ லவ் யூ' சொல்ல எதிர் முனையில் அஸ்வின் திக்கு முக்காடிப்போக எல்லாருமே சந்தோஷத்தின் எல்லையை தொட்டிருந்தனர்.

பரத் மகிழ்ந்து போயிருந்த அத்தையின் ,முகத்தையே  பார்த்துக்கொண்டிருக்க, அவர் அருகில் சென்று அவர் தோளை அணைத்துக்கொண்டாள் அபர்ணா 'உங்களுக்கு சந்தோஷமா?"

மன நிறைவுடன் தலை அசைத்தார் அத்தை. மெல்ல அஸ்வினியின் அருகில் சென்ற பரத் அவள் கையை பற்றி அழுத்தி சொன்னான் 'இனிமே எங்க அஸ்வினி எதுக்கும் பயப்படாம, தைரியமா சந்தோஷமா இருக்கணும் சரியா?'

கண்ணீர் மல்க தலை அசைத்தாள் அஸ்வினி.

சின்ன புன்னகையுடன் அனைவரது மகிழ்ச்சியையும் ரசித்துகொண்டிருந்த அபர்ணாவின் மனதில் சட்டென வந்து போனான் விஷ்வா.

அங்கே அனைவரிடமிருந்தும் விடைப்பெற்றுக்கொண்டு வெளியே வந்தாள் அபர்ணா.

அவளது விரல்கள் விஷ்வாவின் எண்ணை தன்னாலே அழுத்தின. அடுத்த அரை மணி நேரத்தில் அந்த ஹோடேலில் அபர்ணாவின் முன்னால் அமர்ந்திருந்தான் விஷ்வா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.