(Reading time: 33 - 66 minutes)

ல்ல வேளையாக, சரியாக அந்த நொடியில் மணமகன் தாலியை கையில் எடுத்திருந்தான். 'திருமணம் நல்ல படியாக முடிந்து விட்டால் அடுத்து எது வந்தாலும் சந்தித்து கொள்ளலாம்' என்ற மனநிலையில் நின்றிருந்தனர் அனைவரும். மூச்சை பிடித்துக்கொண்டு எல்லாரும் மணமக்களையே பார்த்துக்கொண்டிருக்க, பூமழை பொழிய மங்கல வாத்தியங்கள் முழங்க  மணமகளின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்தான் மணமகன்.

'இறைவா... காப்பாற்றி விட்டாய் உனக்கு ஒரு கோடி நன்றிகள்.' ஒட்டுமொத்தமாக அனைவருமே இறைவனுக்கு நன்றி சொல்ல நிறைவின் எல்லையை தொட்டு நிம்மதியின் மடியில் விழுந்தான் சஞ்சா. எல்லாரும் மணமக்களை வாழ்த்திக்கொண்டிருக்க ஒரு நிதானமான சுவாசத்தை வெளியிட்டு தன்னை சஞ்சா நிதான படுத்திக்கொண்ட வேளையில் ஒலித்தது அவன்  கைப்பேசி.

ஓரமாக சென்று அழைப்பை ஏற்றான் சஞ்சா  'ஹலோ...'

'சார்... என்னை அடிச்சு போட்டாங்க சார்... நான் மயங்கின மாதிரி நடிச்சு அவங்க பேசினதை கேட்டேன் சார்....  திவாகரையும் கொஞ்சம் அடிச்சிருக்காங்க சார். அவன் இப்போ உள்ளே வந்து என்னை அடிச்சது ரிஷின்னு சொல்லப்போறான் சார்...' திவாகரை மறைத்து வைத்த அறையிலிருந்து பேசினான் சஞ்சாவின் பாதுகாவலர்களில் ஒருவன்.

'உனக்கு என்ன ஆச்சு. நீ எப்படி இருக்கே?'

You might also like - Puthir podum nenjam... A romantic story...

'எனக்கு ஒண்ணும் இல்லை சார்.. என்னை ரூமிலே வெச்சு பூட்டிட்டாங்க சார்.. நான் மானேஜ் பண்ணிப்பேன். நீங்க இதை பாருங்க சார்...  திவாகர் இப்போ உள்ளே வரான் சார். பத்திரிகைகாரங்க முன்னாடி பேசப்போறான் எல்லாத்துக்கும் காரணம் அந்த அரவிந்தாட்சன். அவர் எதுவுமே நடக்காத மாதிரி உள்ளே வந்து இருக்காறா?

'ம்... ஆமாம். விடு நான் பார்த்துக்கறேன்..' அழைப்பை துண்டித்தான் சஞ்சா.

அவன் தலைக்குள்ளே பூகம்பம். என்ன செய்வது? என்ன செய்வது இப்போது.???? மனம் சில கணக்குகளை போட, விடையாக கிடைத்தது ஒரு முடிவு. அரவிந்தாட்சனையும், ஜெயித்து எல்லா பிரச்சனைகளையும் முடித்து வைக்கும் ஒரு முடிவு.

'ஆம்! இதுவே சரி!!!!. இதுதான் சரி.!!! இது மட்டும்தான் சரி!!!!'' முடிவெடுத்துக்கொண்டவன் முகத்தில் எந்த பாவத்தையும் வெளிப்படுத்தாமல் அஹல்யாவின் அருகில் வந்து நின்றான்.

'கொஞ்சம் தனியா வா உன்கிட்டே பேசணும்

அவள் அவன் பின்னால் வர அவளை ஓரமாக அழைத்து சென்று அவள் காதில் .மட்டும் விழும்படி சொன்னான் சஞ்சா

'ஒரு பிரச்சனைடா. திவாகர் தப்பிச்சிட்டான். மறுபடியும் உள்ளே வரப்போறான். எல்லார் முன்னாடியும் பேசப்போறான். இதிலிருந்து தப்பிக்க ஒரு வழிதான்டா இருக்கு. நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்'

'என்ன செய்யணும் சொல்லு சஞ்சா. செய்யறேன்...' என்றாள் அஹல்யா. இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை யாருமே கவனிக்கவில்லை. எல்லார் கவனமும் மணமக்களிடமே இருந்தது.

அவன் சொல்ல சொல்ல அவள் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி 'இது... சஞ்சா... நான்.. எப்படி சஞ்சா...' அவள் கண்களில் கண்ணீர் முட்டியது.

அவள் கண்களை ஊடிருவிய படியே சொன்னான் சஞ்சா 'ஒரு வகையிலே நான் உன்னை உன் வாழ்கையை அவசரத்திலே பணயம் வைக்கிறேன்தான். உன் மனசு எவ்வளவு கஷ்டப்படும் தெரியுதுதான் ஆனா இதுனாலே எல்லாம், எல்லாமே சரியாகிடும் அஹல்யா. அதுக்கு மேலே உங்கப்பாவாலே எதுவுமே செய்ய முடியாது.. தணிஞ்சு போய்தான் ஆகணும்...... சரின்னு சொல்லு...'

'சஞ்சா ...' அவள் உதடுகள் துடித்தன. சில நொடிகள் அவனையே பார்த்தவள் ஒரு முடிவுக்கு வந்தவளாக மெல்ல தலை அசைத்தாள் ' ச.. சரி... சஞ்சா..' கண்களை மீறியது அவள் கண்ணீர்.

'அழாதே அஹல்யா.. ப்ளீஸ் அழாதேடா ... எனக்கு  ரொம்ப கஷ்டமா இருக்கு...'

'சரி.. சரி அழலை...' அவசரமாக கண்ணீரை துடைத்துக்கொண்டாள் அவள்.

'தேங்க்ஸ் டா... ' என்று நகரப்போனவன் மறுபடியும் அவளிடம் வந்தான்  'எனக்கு உன்கிட்டே இருந்து ஒரே ஒரு வார்த்தை மட்டும் வேணும். சொல்லு...... நீ என்னை நம்பறியா? எந்த நிலையிலும் உன்னை அழவைக்க மாட்டேன், கஷ்டபடுத்த மாட்டேன் அப்படிங்கிற நம்பிக்கை உனக்கு இருக்கா?'

இந்த கேள்விக்கு பட்டென்று பதில் வந்தது அவளிடமிருந்து 'சத்தியமா சஞ்சா. முழு நம்பிக்கை இருக்கு. உன்னை நம்பாம நான் வேறே யாரை நம்புவேன்.'

நெகிழ்ந்து போனான் சஞ்சா ' தேங்க்ஸ்டா... இது போதும்டா.. இது போதும் எனக்கு... யானை பலம் வந்த மாதிரி இருக்கு. மத்தது எல்லாத்தையும் அப்புறம் பார்த்துக்கலாம்.' சொல்லிவிட்டு அவன் வேகமாக நகரபோக  மண்டபத்தின் பின் பக்கத்திலிருந்து வந்து  வாசல் கதவு வழியே உள்ளே நுழைய எத்தனித்தான் திவாகர். அவன் நெற்றியிலிருந்து ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது. உடம்பில் சில இடங்களில் காயங்கள்.

அந்த நொடியில். சரியாக அதே நொடியில் அங்கே நின்றிருந்த பத்திரிக்கையாளர்களின் மைக்கை கையில் பிடித்தான் சஞ்சா.

'நான் நேத்தே உங்க கிட்டே எல்லாம் சொல்லி இருந்தேன். இன்னைக்கு காலையிலே பத்து மணிக்கு உங்களுக்கு என்னை பத்தின எல்லா விஷயத்தையும் தெளிவு படுத்தறேன் அப்படின்னு. கேட்டுக்கோங்க... அவன் பேச பேச எல்லார் முகத்திலும் பரவியது அதிர்ச்சியா,??? ஆச்சர்யமா??? திகைப்பா??? என்றே தெரியவில்லை.

பேசிக்கொண்டிருந்த சஞ்சாவின் பார்வை மட்டும் கைகெட்டும் தூரத்தில் நின்றிருந்த அரவிந்தாட்சன் மீதே பதிந்திருந்தது. அப்படியே சிலையாக நின்றிருந்தார் அவர்.

'சில விஷயங்களை பேசி முடித்தவன் 'உங்க கிட்டே எனக்கு இன்னும் கொஞ்சம் பேசணும். கொஞ்ச நேரம் கழிச்சு பேசறேன். திரும்ப வரேன். அது வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நன்றி' எல்லாரையும் பார்த்து புன்னகையுடன் கைகூப்பினான் சஞ்சா.

பின்னர் அரவிந்தாட்சன் முன்னால் வந்து நின்றான் அவன். அவர் கண்களை ஊடுருவினான் . 'போதும். இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்' என்பதாக ஒரு ஆணை அந்த பார்வையில் இருந்தது.

இப்படி ஒரு அதிரடி அறிவிப்பை அவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை அரவிந்தாட்சன்.. விசையுறு பொம்மையாக அவனது கண்களின் ஆணைக்கு அப்படியே கட்டுப்பட்டார் அரவிந்தாட்சன். திவாகரை அப்படியே  தடுத்து நிறுத்த அவனை நோக்கி ஓடினார் அவர்.

நேராக மேடையில் இருந்து இறங்கி வந்துவிட்டிருந்த தனது அம்மாவை நோக்கி சென்றான் சஞ்சா. அவர் கைகளை பிடித்துக்கொண்டான் அவன். அவரிடம் சொல்லாமல் தான் எடுத்துவிட்ட திடீர் முடிவுக்கு மன்னிப்பு கேட்கும் பாவம் அவனிடத்தில்.

'சாரி மா.. எனக்கு இதுதான் சரின்னு தோணிச்சு. எல்லாருக்கும் இதுதான்னு நல்லதுன்னு தோணிச்சு மா'

சில நோடி மௌனம். பின்னர் ஒரு தீர்கமான சுவாசம் அந்த தாயிடம். மகனையும், அவனது மனதையும் ஓரளவு புரிந்துக்கொள்ள முடிந்தது அந்த அன்னையால். அவன் தலை மீது கைவைத்து சொன்னார்

'சந்தோஷமா இருடா ராஜா...'

அதற்குள் அவர்கள் அருகில் வந்திருந்தான் ரிஷி. 'என்னடா திடீர்னு???

'இதெல்லாம் திடீர்னு தான்டா நடக்கணும். அதுதான் இன்டரெஸ்ட்டிங்கா இருக்கும். பிளான் பண்ணி இழுத்தடிச்சு பெரிய போர் ' கண் சிமிட்டினான் சஞ்சா.

விளையாடாதே சஞ்சா. எனக்காகவா? அரவிந்தாட்சனை தோற்கடிக்கவாடா? அதுக்காக நீ....''

அவன் முடிப்பதற்குள் இடை புகுந்தான் சஞ்சா 'சத்தியமா இல்லைடா. நேத்துலே இருந்தே மனசிலே ஒரே உறுத்தல். கொஞ்சம் கூட நிம்மதியே இல்லை. இப்போ ரொம்ப நிறைவா இருக்கு. சந்தோஷமா இருக்கு. எல்லாம் இதோட சரியாயிடும்ன்னு நம்புவோம்' என்றவன் அம்மாவையும் நண்பனையும் அழைத்துக்கொண்டு மேடை ஏறினான்.

அவனது உதவியாளர்களிடம் ஏதேதோ ஆணைகளை பிறப்பித்து விட்டு அஹல்யாவின் முன்னால் வந்து நின்றான். உணர்ச்சி கடலில் குளித்தவளாக நின்றிருந்தாள் அஹல்யா. சில நொடிகளில் அவர்களை நோக்கி வந்தன அவை. இரண்டு பூ மாலைகள்!!!!

Hi my dear friends. என்னாலே முடிஞ்ச அளவு கொஞ்சம் பெரிய எபிசொட் கொடுக்க ட்ரை பண்ணி இருக்கேன். படிச்சிட்டு என்ன தோணுதுன்னு சொல்லுங்க. Waiting for your interesting comments. Thanks a lot.

Episode # 12

Episode # 14

மழைச்சாரல் தொடரும்......

{kunena_discuss:886}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.