(Reading time: 12 - 23 minutes)

வரும் குறும்பாக சிரித்துக் கொண்டே,'எல்லாம் நீ நடந்துக் கொள்ளும் விதத்தைப் பொறுத்திருக்கிறது,'

'அப்படி என்ன என்னிடம் தெரிந்துக் கொள்ள வேண்டுமோ?' என்றான்

அவர் அப்படியே ஆச்சர்யமாகிப் போனார், நீ பிசினெஸ்ஸுக்கு, சரியான ஆள்தான்,' என்றார், கர்வத்துடன்

'சரி விஷயத்துக்கு வா, இந்தக் கிழவனை காக்க வைக்காதே,' என்றார்

'யாரு கிழவன்? இந்த நீலகண்டனா? ஹ, என் தாத்தாவைக் கிழவன் என்று கூறியவன் யார்? கூப்பிட்டுவா, அவனை, அவரை நான் என் சிநேகிதன் என்று இருக்கிறேன்,' என்று வீர வசனம் பேசினான்

'இந்த சாக்கில் என்னை, "அவன் இவன்" என்று சொல்கிறாயா? என்று கேட்டு இடி என சிரித்தார்

'தாத்தா ஒன்று சொல்லட்டுமா இப்படி சிரிக்காதீங்க, என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கு,' என்றான் கண்ணில் நீர் தளும்ப

' ஏய், பயித்தியம்! என்னடா, இங்கே வா, என் கிட்டே சொல்லு, என்ன நடந்தது, உன் மனசுல இருக்கிற பாரத்தை இறக்கிவிடு என்னிடம், நீ என்னை உன் சிநேகிதன் என்றாய் இல்லையா... அதை உறுதி படுத்திவிடு' என்றார் தாத்தா

அவனும் நடந்த விஷயத்தைச் சொன்னான்,' தாத்தா எனக்கு என்னவோ, அவளுக்கு ஒரு நல்ல வரன் வந்தா, முடித்து விடலாம், பிறகு அவள் படித்துக் கொள்ளட்டுமே, என்ன சொல்கிறீர்கள்?' என்று கேட்டான்

'ஆனால் ஒன்று யாருக்கும் இது தெரியக் கூடாது, அந்தப் பெண்ணின் மனசை யாரும் கீரக் கூடாது, ஏன் தெரியுமா அவள் இன்னொருவர் வீட்டில் போய் சந்தோஷமாக வாழவேண்டாமா,அதுக்குத்தான்'

'சரிப்பா, உனக்கு நல்ல பையனா தெரிந்தால் சொல்லு' என்றார் நீலகண்டன்.

'சரி, நீங்கள் கவலைப் படாதீர்கள் ... எனக்கு வேலை இருக்கு, நான் போகிறேன் ' என்று கூறி வெளியே வந்தான்

வன் ரூமுக்கு போய் டிரஸ் மாத்திக் கொண்டு வந்து டிபன் சாபிட்டான்

வனிதாவின் ரூமுக்குப் போய் ' என்ன வனிதா, ரெடியா, படிக்கலாமா?' என்றான்

'இதோ , வந்துட்டேண்னா,'  என்றாள்

அவள் பாகை எடுத்துக் கொண்டு வந்தாள், அவனுடைய மற்ற தங்கைகளையும் வரச் சொன்னான், அவர்களும் வந்தார்கள், எல்லாருடைய புக்ஸ்ஸையும் வாங்கிப் பார்த்தான், எல்லோருக்கும் அசைன்மென்ஸ் கொடுத்தான், கணக்கு சொல்லிக் கொடுத்தான், அதை திரும்ப செய்யச் சொன்னான், தன் தங்கையையும் அவனுடன் வந்து அவர்களுக்கு கிளாஸ் எடுக்கச் செய்தான், தாத்தாவிற்கு ஒரே ஆச்சர்யம்.. மனதில் நினைத்துக் கொண்டார் “என்ன தவம் செய்தனை, இப்படி ஒரு பேரன் பெற” என்று மனதிற்குள் ஆர்பரித்தார்.

வனோட ப்ராஜெக்ட் லோன் அப்ரூவாகி  வந்து விட்டது, ரொம்ப சந்தோஷமாகி விட்டான், பக்கத்திலிருந்த ஐஸ்கிரீம் ஷாப்புக்கு தன் தங்கைகள் எல்லோரையும், கூட்டிச் சென்றான் , அங்கு எல்லாரும் ஒரே ஆர்பாட்டம் பண்ணிக் கொண்டிருந்தார்கள், அவன் சிரித்துக் கொண்டே எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்தான்,அவர்கள் ஆர்டர் செய்த ஐஸ் கிரீம்கள் வந்தது, அந்தப் பெண்ணையும் அவன் பார்க்க நேர்ந்தது, அவள் இன்னொரு பெண்ணோடு இருந்தாள். அவன் யாரும் அறியாமல், 'இந்த ஐஸ் கிரீம் வேணுமா?'என்று அவளிடம் கேட்டான், அவளுக்கு முகமெல்லாம் சிவப்பாகி விட்டது, அவன் வாய் விட்டு சிரித்து விட்டான், தன் தங்கை நந்தினி, “எதற்கு சிரித்தாய் அண்ணா” என்று கேட்டாள், அவன் எதுவும் சொல்லவில்லை.

எப்படி சிரிக்கிறான் பாரு, அவன் மனசுக்குள்ள தான் என்னவோ கோகுலத்து கிருஷ்னன்ற நினைப்பு, அவனைச் சுற்றி பெண்கள் இருப்பதால் என்னையும் அந்த ரகம், என்று நினைத்து விட்டான் போலிருக்கு,  என்று தன் மனசுக்குள் நினைத்துக் கொண்டு, திரும்பி பார்த்து ஒரு எகத்தாளமாக சிரித்தாள்.

தன் தங்கை நந்தினியைக் கூப்பிட்டு  சொன்னான், ' அந்தப் பெண் நம்மையே ரொம்ப நேரமாக திரும்பி, திரும்பிப் பார்க்கிறாள், நீ போய், நாங்கெலெல்லாம், அவர் தங்கைகள் என்று சொல்லி விட்டு வா,” என்றான்

”யாரோ நம்மை பார்த்து தப்பாக எடுத்துக் கொண்டா நமக்கென்ன?” என்றாள் அவன் தங்கை நந்தினி

“வேற யாரைப் பார்த்தாலும் தப்பாக எடுத்துக் கொள்ளலாம், ஆனால் நான் என் தங்கைகளுடன் வந்திருக்கிறேன், அதை யாரும் தப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது, ப்ளீஸ்!” என்றான்

அவனுக்கு முக்கியமாக, அவள் தன்னை தப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது,

தெரிந்தோ தெரியாமலோ அவள், தன் மனதை ஆட்கொண்டாள்.  அவனால் அதை தாங்க முடியாது. விதி என்று ஒன்று இருந்தால், இவள்தான் என் மனைவி என்று முடிவு செய்தான்.

நந்தினி கடைசி தங்கை  “சரி அண்ணா!” என்று  போனாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.