(Reading time: 12 - 23 minutes)

 

ந்தப்  பெண்ணைப் பார்த்து, “ஹாய் அக்கா என் பேர் நந்தினி! அவர்கள் மூன்று பேரும் என் அக்காக்கள், கூட இருப்பது எங்கள் நான்குபேருக்கும் அண்ணன்,” என்று நந்தினி கூற, அவள் முகம் சிவந்தது..

“அது சரி நந்தினி அதை ஏன்  என்கிட்டே சொல்ற ,” என்று சித்ரா கேட்டாள்,

சித்ராவின் சிநேகிதி மாலினி  'யார் இந்தப் பெண் உனக்குத் தெரியுமா சித்ரா?'என்றுகேட்க, அவளுக்கு அவமானமாய் போயிற்று..    

“இல்லை எனக்குத் தெரியாது?' என்று சொன்னாள் சித்ரா

'சரி நான் கேட்டேனே நந்தினி, பதில் சொல்லவில்லையே? இதெல்லாம் ஏன் என்னிடம் சொல்கிறாய், உங்க அண்ணன் சொல்லி அனுப்பினாரா?' என்று கேட்டாள்

நீங்க அவர பார்குற பார்வையில, நீங்க அவர தப்பா நினைசீங்களோ என்னவோ அதான், அவரை தப்பாக எடுத்துக் கொண்டது போல் இருந்ததாம், அதனால், நீங்களெல்லாம் என் தங்கைகள், என்ற உண்மையை சொல்லிவிட்டு வா, என்றார்,' என்றாள் நந்தினி

“அதை ஏன் என்னிடம் சொல்லச் சொன்னார் உன் அண்ணன்,” என்று கேட்டாள் திரும்பி

“அதான் சொன்னேனே அக்கா! நீங்கள் என் அண்ணனைத் தப்பான கண்ணோட்டத்தில் பார்த்தீர்களாம், அதனால்,' என்றாள்

மறுபடியும் முகம் சிவந்தாள், அவன் குறும்புச் சிரிப்போடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்,

அவள் மனதுக்குள், கொழுப்பைப் பார்….இத்தனையும் இவன் தங்கைகளா? இவன் கேர்ள் பிரெண்டின், சிநேகிதிகள் என்று நினைத்துக் கொண்டேனே? என்று அவனை திரும்பிப் பார்த்தாள், அவன் அவளை பார்த்துக் கண் அடித்து, குறும்பாகச் சிறுத்தான்.

அவன் தங்கைகள் வேறு ஏதோ பேசிக் கொண்டிருந்ததால், அவன் செய்ததைக் கவனிக்கவில்லை

அவளுக்குக் கோபம் வந்தது பாவம் இந்தப் சின்னப் பெண்ணை தூது அனுப்பியிருக்கிறான், 'சரி உன் அண்ணனுக்கு, எப்படி தெரியும், நான் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கிறேன்னு?' என்று கேட்டாள்

'அதான் நீங்கள் அவரைப் பார்த்தீர்களே,” என்று அவள் அழுத்திச் சொன்னாள்

அவள் கொஞ்சம் அழுத்திச் சொன்னது, அவளுக்கு வெக்கமாக இருந்தது, நான் உங்களை எல்லாம் பார்த்தேன் உங்கள் அண்ணனைப் பார்க்கவேயில்லை, அங்கே கொஞ்சம் பெரிய பெண்ணாக இருக்கிறாளே அவள் பெயர் என்ன? அவளை எங்கோ பார்த்த மாதிரி இருக்கு, அதான் பார்த்தேன்.' என்று ஒரு வழியாக முடித்தாள்.

'ஐயோ, அக்கா, அது வித்யாக்கா! அவள் தான் அண்ணனுடன் கூடப் பிறந்த தங்கை, என்கண்ணணு டைய அச்சு அசல் ஜாடை, அண்ணனை மாதிரியே ரொம்ப அழகு இல்லை,' என்று வம்பிழுக்கவும், அவன் வாய் விட்டுச் சிரித்தான்,

அவன் சிரித்த அழகிலும், தன் மனதில் இருந்ததை  அந்தப் பெண் சொல்லிவிடவும் , அவள் வெட்கிச் சிவந்தாள்.

“நீங்களும் ரொம்ப அழகாய் இருக்கிறீர்கள், அதுவும் உங்கள் முகம்  அப்பப்போ சிவக்கையில் ரொம்பவே அழகாய் இருக்கிறீர்கள் “என்றாள் சின்னவள்

அவன் திரும்பவும், உரக்கச் சிரித்து “போதும் இங்கே வா! நிறைய பேசி விட்டாய்' என்று கூப்பிட்டான்

இதை முதல்லியே செய்திருக்கலாம், என்று பல்லைக் கடித்துக் கொண்டு “வா போகலாம்” என்று மாலினியிடம் கூறி,” பணம் கொடுத்துவிட்டாயா” என்று கேட்டாள்,அவளுக்கு மாலினியிடம்  என்ன  பேசுவது என்று தெரியவில்லை, அவள் எதுவும் தன்னைக் கேடகாமல் இருக்கணுமே என்று மனதில் போராடிக் கொண்டிருந்தாள்

அவள் 'ம்ம்ம்' என்றதும் கிளம்பினர்,

அவள் நந்தினிக்கு' பை' என்று கூறிவிட்டு போனாள்

அவன் தனக்காகத்தான், அவள் பை சொன்னாள் என்று…. வெறும் தலையை ஆட்டினான், அவளுக்கு ஏனோ, தன்னை அறியாமல் ஒரு சந்தோஷம். சிரித்துக் கொண்டே போனாள், அதைப் பார்த்த அவனுக்கும் சந்தோஷம், இன்று அவனுக்கு இரட்டிப்பு சந்தோஷம்.

அவனும் தங்கைகளை”வாங்க போகலாம்,” என்று கிளம்பினான்

ல்லோரையும் காரில் அழைத்து வந்திருந்தான். வீட்டுக்கு போனவுடன் நேரே தாத்தா ரூமுக்குப் போனான், தாத்தாவிடம் தன்னுடைய ப்ரோஜெக்டுக்கு பேங்க் அப்ரூவல், கிடைத்து விட்டது என்று கூறி தான் செய்யப் போவதைப் பற்றியும் கூறினான்

அப்போது அவன் தாத்தா 'இதப் பார், நீ, என்னைப் போல் இருக்கிறாய்,  நிறைய சாதிக்க வேண்டும் என்ற கனவு இருக்கு, இந்த ஆர்வம், ஹார்ட் வொர்க், விடா முயற்சி, இது தான் வேண்டும், கவலைப் படாதே, என்னிடம் இருந்து உனக்கு வேண்டிய, உன் பங்குக்கு போட வேண்டிய பணம் தருகிறேன், அது உன் பணம், உனக்காக நான் சேர்த்து வைத்த பணம்,' என்றார்.. “அது மட்டுமில்லை, எனக்கு ஒரு இடம் இருக்கிறது அதை உன் கம்பனிக்காக உபயோகபடுத்திக் கொள்,' என்றார்

இல்லை தாத்தா, இதை நான் என் சொந்த முயற்சியில் செய்ய வேண்டுமென்றிருக்கிறேன், அதனால் இதெல்லாம் வேண்டாம்,' 'உங்களுடைய ஆசியும், அட்வைசும் தான் தேவை,' என்றான்

'சரிடா, அதெல்லாம் உனக்கு இல்லாததா? இதை கடனாக வைத்துக் கொள், பிறகு எனக்கு எப்போ வேண்டுமோ நான் கேட்கிறேன் அப்போ கொடு, அந்த வீடு உன்பேரில் தான் இருக்கு போதுமா' என்றார்

அவன் கண்கலங்கி சந்தோஷத்தில்,'தேங்க்ஸ் தாத்தா,”

“உனக்குத் தெரியாது இந்தக் குடும்பத்தில் யாருமே என்னைப் போல் ஒரு தனி தன்மை இல்லாமல் இருக்கிறார்களே என்று நினைத்திருந்தேன், இப்போ,  நீ, என்னைப் போலவே இருக்கிறாய், என்பதில் எனக்கு, எவ்வளவு பெருமையாக இருக்கிறது தெரியுமா,' என்றார் குரல் தழு, தழுக்க

அவன், பாட்டியை கூப்பிட்டு விஷயத்தை சொன்னான், அம்மாவையும், அப்பா சித்தப்பாவையும் கூப்பிட்டு சொன்னான், பாட்டி அவனுக்கு திருஷ்டி கழித்து” நீ உங்க தாத்தாவைப் போல் பெரிய ஆளா வரணும்,' என்றார்

தாத்தாவோ 'அதென்ன, தாத்தாவை விட பெரிய ஆளாய் வரணும்னு சொல்லு அதான் எனக்குப் பெருமை,' என்றார் கர்வத்துடன்

சிவேஷ் கண்கள் பனித்தன, அப்பாவிடம் சென்று அவர் காலில் விழுந்து ஆசி வாங்கினான்,' எல்லாம் உங்கள் ஆசியும், அரவணைப்பும், அன்பும்தான், நீங்கள் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தீர்கள், அது மட்டுமல்ல அவன் உங்கள் ரத்தம்' என்றான்

Episode # 01

Episode # 03

தொடரும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.