(Reading time: 14 - 27 minutes)

த்தை.. உங்க கார்ட்லே லிமிட் முடிஞ்சிருக்கும் ... இருங்க இந்த கார்ட்லே போட்டுடலாம்” என்று தன் debit கார்டு மூலம் பணம் கொடுத்தாள்.

ஆதியின் அம்மாவிற்கு தர்ம சங்கடமாக இருந்தது. அவளை ஏதோதோ சொல்லி விட்டு இப்போது அவளே தனக்காக சமாளிக்கிறாளே என்று இருந்தது.

ஆனாலும் தன் மாமியார் என்ற கெத்தை விடாமல் பற்றிக் கொண்டு சாதாரணமாக இருந்தார்.

பிரத்யாவின் மனதில் தன் மகன் அனுப்பிய பணத்தை செலவழித்தவர், தன்னிடம் ஒரு வார்த்தைக்காவது நீயும் பணம் எடுத்துக்கொம்மா.. அங்கே முன்ன பின்ன ஆனால் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்று கேட்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது.

பிரத்யாவாக கவனித்து சரி செய்து விட்ட போதும் .. அவர் ஒரு சந்தோஷம் என்ற உணர்வை கூட காண்பிக்கவில்லையே என்று இருந்தது.

ஷாப்பிங் எல்லாம் முடித்து அவரவர் வீடு சென்றவர்கள், அலுப்பில் அமர்ந்தார்கள். மதியம் வெளியில் சாப்பிட்டதால், இரவிற்கு வெறும் இட்லி மட்டும் போதுமென சாப்பிட்டு சீக்கிரம் படுக்க போய் விட்டார்கள்.

காலையில் இருந்த உற்சாகத்தில் அன்று இரவு ஆதியோடு வீடியோ சாட் செய்யும் போது அவன் சந்தோஷத்தை பார்க்க வேண்டும் என்று எண்ணியிருந்தாள்.. அதனால் வேறு புடவை மாற்றாமல் இரவு பேச வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள்..

ஆனால் தற்போது உள்ள மனநிலை அதற்கு இடம் கொடுக்காது என்று எண்ணியவளாக வழக்கமான தன் உடைக்கு மாறியவள் அவனோடு பேச அமர்ந்தாள்.

“ஹாய்.. டார்லிங்.. “ என்று அவளை பார்த்தவன் , அவள் வேறு உடை மாற்றியிருப்பதை பார்த்து அவன் உற்சாகம் வடிந்தது. அவனோ காலையில் அவள் கொடுத்த டீ ஷர்டோடு இருந்தான்.

பிரத்யாவிற்கு வேதனையாக இருந்தது.. ஆனால் அதை காட்டினால் அவன் வருந்துவான் என எண்ணி சாதாரணமாக இருப்பது போல் நடித்தாள்

“சாரி ஆதிப்பா.. வெளியில் அலைந்தது பயங்கர tired .. அதோடு புடவையும் கச கச என்று இருக்கவே மாற்றி விட்டேன். “ என கூறவும்,

“ஹே.. இதுலே என்னடா இருக்கு? உன்னை காலையில் photo வில் பார்த்ததே சந்தோஷமா இருக்கு... “ என்றவன் அவளிடம் ஷாப்பிங் பற்றி விசாரித்தான்.

முதலில் தயங்கியவள் , பிறகு என்ன என்ன வாங்கினார்கள் என்று மட்டும் சொன்னாள்.

ஆனால் அவள் அறியாதது முதலில் தன் அன்னையிடம் பேசியவன் , அவர் ஷாப்பிங் சென்றபோது வித்யா மாமியார் பேசியதை சொன்னவுடன்

“அம்மா.. அவர்கள் குடும்ப விஷயத்தை மட்டும் பார்க்க சொல்லுங்க.. என் பொண்டாட்டிக்கு நான் வாங்கி குடுக்குரதுக்கெல்லாம் நான் அவங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை .. இதே நீங்களோ வித்யாவோ அவங்ககிட்ட சொல்லிடுங்க.. நான் சொன்னா அது வேற மாதிரி ஆகிடும்” நு எச்சரித்தான்.

இதை கேட்ட ஆதியின் அம்மா நல்ல வேளை நாம பேசியதை சொல்லவில்லை .. என்று மனதிற்குள் தைர்யம் சொல்லி கொண்டார்.

மேலும் அவரிடம் செலவுகளை பற்றி விசாரித்தவன், பணம் குறைவாக இருந்திருக்குமே என்று எண்ணியவன் , என்ன செய்தார்கள் என்று விசாரித்தான். அவர் ப்ரத்யா சமாளித்ததை சொல்ல, அவனுக்கு தன் மனைவியை எண்ணி பெருமையாக இருந்தது. அந்த மனநிலையோடு பேச வந்தவன்,

அவளின் சுருக்கமான பதில்களில், மேலும் ஏதோ நடந்திருப்பதை ஊகித்தான்.

“ரொம்ப தேங்க்ஸ் டா.. அம்மா சொன்னங்க.. நீதான் அந்த ஷார்ட் ஆன பணத்திற்கு அட்ஜஸ்ட் செய்தியாம்.. உன் அக்கௌன்ட் நம்பரில் அந்த பணத்தை transfer செய்துடறேன்.. “

“ஏன் ..நீங்களும் என்னை உங்க குடும்பத்தில் ஒருத்தியா நினக்கலியா? உங்க பணம் , என் பணம் ஏன் பிரிச்சி பார்க்கறீங்க ? “ என்று வருத்தமாக பேசவும்,

“ஹே.. அப்படியெல்லாம் இல்லைடா தங்கம், உனக்கு செலவிற்கு பணம் வேண்டாமா..? உங்க அம்மா வீட்டுக்கு வேற பணம் அனுப்பற.. அதோட.. இது எல்லாம் சேர்த்து வித்யாவிற்கு போட்ட பணம்தான்.. அம்மா இவ்வளவு போதும்னு சொன்னதாலே தான் கரெக்ட் ஆ transfer பண்ணினேன்.. இல்லாட்ட இந்த அமௌன்ட் சேர்த்துதான் பண்ணியிருப்பேன்.”

“அதெல்லாம் வேண்டாம் ... உங்களுக்கு இல்லாம எங்கிட்ட எதுவும் இல்ல “ என்றவுடன்,

“அப்படியா.. அப்படின்னா.. காலையில் என் photo விற்கு கொடுத்ததை இப்போ என் முகம் பார்த்து சொல்லு “ எனவும்”

வெட்கத்தோடு அதெல்லாம் முடியாது என்று தலையாட்டினாள். .அவன் மேலும் ஏதோ கேட்க .. அவள் இன்னும் அதிகம் வெட்கப்பட்டவள், அவனோடு செல்ல சண்டையிட்டு கட் செய்தாள்.

ஆதியிடம் பேசுவதற்கு முன் இருந்த மன நிலை மாறியிருந்தாலும் , காலையில் ஏற்பட்ட அந்த தடையற்ற மகிழ்ச்சி இப்போ இல்லை பிரத்யாவிற்கு.. ஆனால் இதுதான் தன் வாழ்க்கை என்று புரிந்து கொண்டாள்.

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:948}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.