(Reading time: 14 - 28 minutes)

ண் மூடி படுத்திருந்த காவேரியின் அருகே அவரின் பார்வைக்காக காத்திருந்தான் மகத்….

“ராஜா….” என்றபடி அவர் முனக,

“மதர்… உங்களுக்கு எதுவும் இல்ல… இங்க பாருங்க…” என அவன் கூற,

அவர் முனகல் அதிகமானது… “விசித்திரா…. நான்… உன்னை… உன்னை….” என்ற அரற்றலும் அதிகமாக, மகத் அவரின் கைப்பிடித்து தட்டிக்கொடுக்க, மெதுவாக அவர் அமைதியாகினார்…

அறையை விட்டு வெளியே வந்த அவனிடம் அனைவரும் சூழ்ந்து கொண்டு “என்னாயிற்று…” எனக் கேட்க,

“ஒன்னுமில்ல… பயப்படவேண்டாம்…” என்றான் அவன்…

“இல்ல காவேரி மேடம்… ரொம்ப டிஸ்டர்ப்டா இருந்தாங்க… அழுதுகிட்டே அப்படியே மயங்கிட்டாங்க… நிஜமாவே அவங்க நார்மல் ஆகிட்டாங்கல்ல?...” என கவலையோடு கேட்ட ருணதியின் மீது பார்வையை செலுத்தியவன்,

“என் வார்த்தை மேல நம்பிக்கை இல்லையா உனக்கு?... இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க சரியாகிடுவாங்க…” என சொன்னதும் அதற்கு மேல் எதுவும் அவள் கேட்கவில்லை…

“இல்ல சார்… ரொம்பவே பயந்துட்டேன்… அம்மா ரொம்ப அழுதுட்டாங்க…” என்ற பவித்ராவிற்கு அப்போதும் அழுகை நிற்கவில்லை…

“பவித்ரா… என்னாச்சு?.. எதுக்கு இப்போ அழற?.. அதான் மதர் சரியாகிட்டாங்கல்ல… அழாத…” என்றான் மகத்…

“இல்ல சார்… அது…” என அவள் இழுக்க,

“மதர் திடீர்னு ஏன் அழுதாங்க… என்ன நடந்துச்சு?... பவி… அழாம சொல்லு…” என பிரபு கேட்க, அவள் அழுகை நீண்டது…

“ஏய் லூசு… அழாத… என்ன நடந்துச்சுன்னு சொன்னாதான தெரியும்…” என அவன் உரிமையாக திட்ட… அவள் அழுதுகொண்டே அவனைப் பார்த்தாள்…

“பிரபு… அவங்க ஏற்கனவே அழுதிட்டிருக்காங்க… இப்போ நீ வேற திட்டினா எப்படி சொல்லுவாங்க… கொஞ்ச நேரம் போகட்டும்… அப்புறம் கேளு…” என்ற விஜய்யை எதுவோ போல் பார்த்தான் பிரபு…

“என்னடா… எதுக்கு அப்படி பார்க்குற?....” என்ற விஜய்யிடம்

“இல்ல… ஒன்னுமில்ல….” என்றவன், “எதுக்கு மதர் அழுதாங்கன்னு தெரியலைடா மகத்… இவளும் வாய் திறக்கமாட்டிக்குறா… என்ன நடந்துச்சுன்னு இப்போ எப்படி கண்டிபிடிக்குறது?...” என கேட்க

“கன்யா…” என்றான் மகத்….

“வாட்….” என அதிர்ந்து பிரபு கேட்க, விஜய்யும் கன்யாவை ஏன் சொல்கிறான் என புரியாமல் மகத்தைப் பார்த்த அதே நேரத்தில்,

ருணதி, கன்யாவை ஏன் சொல்கிறான் என்ற எண்ணத்திலும், பவித்ரா , மகத் சாருக்கு எப்படி தெரியும் அவள் தான் காரணம் என்ற அதிர்ச்சியிலும் பார்க்க, மகத் அமைதியாக இருந்தான்…

“அந்த ராட்சஸி பேரை ஏண்டா இங்க சொல்லுற?... அவ பேச்சையே எடுக்காத நீ…” என பிரபு கோபமாக சொல்ல

“மதர் அழுததுக்கு காரணம் கேட்டல்ல… அதான் நானும் சொன்னேன்…” என்றான் மகத் அமைதியாக….

“என்னடா சொல்லுற?... எப்படிடா?... உனக்கெப்படி தெரிஞ்சது?... நீ, நான் , விஜய் மூணு பேரும் தான இங்க கிளம்பி வந்தோம்… விஜய் முதலில் போய் மதரை பார்க்குறேன்னு உள்ளே போனான்… நீயும், நானும், வாங்கிட்டு வந்த பொருட்களை எடுத்துட்டிருந்தோம்… பாதி எடுத்துட்டு நான் உள்ளே போனப்போ, பவி ஓடி வந்து விஷயத்தை எங்கிட்ட சொன்னா… நான் உங்கிட்ட சொல்லி உடனே ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு வந்தோம்… இங்க வந்தப்பிறகு மதரும் கண் முழிக்கலை… இவளும் சொல்லலை… அப்புறம் எப்படி சொல்லுற அந்த ராட்சஸி பேரை?...” என துப்பறியும் போலீசாக அவன் கேட்க

“மதர் இப்போ உள்ளே அவ பேரை சொன்னாங்க… இத்தனை வருஷத்துல அவ பேர் சொல்லி நான் கேட்டதில்லை… இன்னைக்கு தான் சொல்லுறாங்க… அதும் பெரும் வேதனையோட…” என்றான் மகத்…

“ஓ… மதர் சொன்ன வார்த்தை வச்சே… கண்டுபிடிச்சிட்டியா?... நீ போலீஸ் ஆக வேண்டியவண்டா… தப்பித் தவறி டாக்டர் ஆகிட்ட… மூளை உனக்கு நல்லா வேலை செய்யுதுடா…” என்ற பிரபு அவனை வம்பிழுக்க…

“சரி… ரொம்ப நேரம் ஆச்சு இங்க வந்து… மதர் ரெஸ்ட் எடுக்கட்டும்… எப்படியும் அவங்க கண் திறக்க இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்… நீங்க இரண்டு பேரும் சாப்பிடலை… வாங்க போகலாம்… முதலில் சாப்பிடுங்க… அப்புறம் மத்தததை பேசலாம்…” என பிரபுவிடமும், விஜய்யிடமும் அவன் சொல்ல

“என்ன வம்பிழுத்தாலும் அதிலிருந்து எஸ்கேப் ஆகிடுறீயேடா… ஹ்ம்ம் சாப்பிட்டு உன்னை பேசிக்கிறேன்… ஆமா, நாங்க இரண்டு பேரும் தான் சாப்பிடலையா?... நீயும் தான் சாப்பிடலை… அதனால மரியாதையா எங்ககூட வா…” என மகத்தின் கைப்பிடித்து பிரபு இழுக்க, அவன் சிரிப்புடன் சரி என்றான்…

“நீங்க போயிட்டு வாங்க… நாங்க இங்க இருக்குறோம்…” என்ற ருணதியிடம்,

“அங்க கேண்டீன்ல இருக்கலாம்…… மதர் கண் முழிக்கிறதுக்குள்ள வந்துடலாம்… இரண்டு பேரும் வாங்க…” என மகத் அழைக்க, ருணதி தயங்கினாள்…

அவள் தயக்கத்தைக் கண்டவன், “வா….” என ஒரு அழுத்தத்துடன் அழைக்க, அவள் அதன் பின் மறுக்கவில்லை…

“ஹேய்… பவி… உனக்கு வேற தனியா சொல்லணுமா?.. வா லூசு… அழுது அழுது முகமே நல்லா இல்ல… வா… வந்து முகம் கழுவிட்டு சூடா ஒரு காபி குடி… வா…” என அவளின் கைப்பிடித்து பிரபு அழைக்க, விஜய்யின் கண்கள் ஏனோ பிரபுவின் மீதும் அவளின் மீதும் படிந்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.