(Reading time: 9 - 18 minutes)

து எல்லாம் இன்னைக்கு அப்படிதான். அப்புறம் நீங்களே நிறுத்த சொன்னாலும் நிறுத்த மாட்டாள் “ என்று மென்னகையுடன் கண்ணனுக்கு பதில் அளித்தாள்.

ஷண்மதியிடம் திரும்பி, “ மதிமா, உன் மாமாவ பார்த்தியா இங்க? “ என்று கேட்க, அவள் ‘இல்லை’ என தலையசைத்தாள். (அவளுக்கு கண்ணனை தவிர மத்த எல்லாரும் ஒவுட் ஆப் ஃபோக்கஸ் தானே )  

“ சரி டா, நான் போய் உன் மாமாவ தேடிட்டு வரேன். ரிலேடிவ்ஸ் எல்லாருக்கும் ரூம் புக் பண்ணிட்டாராணு கேக்கணும்”

“ ம், சரிக்கா. பாப்பாவ குடு, கொஞ்ச நேரம் நான் வச்சுகிறேன்.” என்று குழந்தையை வாங்கிக் கொண்டாள்.

சமுத்திரா சென்றவுடன், “ ஹிம்ம்.. இப்ப சொல்லுங்க ” என்று குழந்தையைக் கொஞ்சுவது போல் அதனிடம் பார்வையைப் பொதித்து அவனுடன் பேச தொடங்கினாள்.

“ அது எப்படி எல்லா பொண்ணுங்களும் மேரேஜ் அப்போ மட்டும் இப்டி சாத்வீகமா மாறிடுறீங்க? “

“ இத கேக்க தான் கூப்பிடிங்களா? “

“ இல்ல இல்ல ”

“ அப்புறம்? “

“ இன்னைக்கு அநியாயத்துக்கு அழகாயிருக்கடீடீடீ...... இதை சொல்ல தான் கூப்டேன் “ என்று அவளைப் பார்த்து அவன் கண்சிமிட்ட,

“ போதும், போதும்.. தொடச்சுக்கோங்க. ரொம்ப வழியுது. யாரதும் பக்க போறாங்க..” என்று அவனை வாரினாலும், மேடம் மனம் மிட் ஆரில் ரெக்கைக் கட்டி பறப்பதை அவள் கன்ன சிவப்பும், வெட்கத்தால் உயராத விழியும் அவனுக்கு சொல்லாமல் இல்லை.

அவனோ, “ என் பொண்டாட்டிய, நான் சைட் அடிக்குறேன். யார் பாத்தா எனக்கென்ன? “ என்று அவளிடம் இருந்த குழந்தையை வாங்கி கொண்டு, அவளை நெருங்கி அமர்ந்து ஃபோட்டோகிராபரிடம் அவர்களை போட்டோ எடுக்குமாறு அவள் அறியாமல் சைகை காட்டினான்.

அதை அறியாத அவளோ “ ஓ.. சார்க்கு பாப்பாவ தூக்க எல்லாம் தெரியுமா? பயம்லாம் இல்லையோ? ”

“ யா யா... ஐயாக்கு எல்லாம் தெரியும். பயமாவது கியமாவது...“என்று  புரியாத வார்த்தையை யூஸ் பண்ணி கெத்தாக  ரைமிங்கில்  பதில் சொன்னான் .

ஷண்மதியோ விடாமல் கேள்விகளை தொடுத்தாள் “ஓகே அத்த மாமா? “மேல பயம் இல்லயா

“ என்ன ஷணு, சிறு பிள்ளைத்தனமா பேசி கிட்டு. நோ பயம் “

“ தாத்தா பாட்டி....? “

“ ஹா.. ஹா.. புள்ள, உன் அத்தானுக்கு அவங்கள ஹாண்டில் பண்ணுறதெல்லாம் அல்வா சாப்டுற மாதிரி.. !!! “

“ ஆஹான்ன்ன்… ” ஒரு உள்ளடக்கிய சிரிப்புடன், “ அப்போ என் அப்பா??? “ ஒற்றை புருவம் உயர்த்தி அவள் கேட்க,

“ ஏய்!! இப்ப ஏன்டீ மாமாவ இழுக்குற? “ அவன் பதறிவிட்டான்.

“ நீங்கதானே நோ பயம்னு சொன்னிங்க. அப்பறம் என்ன சார்? “ மொத்தமாக கிண்டல் மட்டுமே இருந்தது இந்த கேள்வியில்.

“ சும்மா இருடி, யாராவது பார்க்க போறாங்க.. “ என அவள் டயலாக்கை ஈயுடன் காப்பி அடித்தான் கண்ணன்.

ஷண்மதியின் அப்பா, தில்லைராஜன்- டி.‌எஸ்.‌பி ஒப் தஞ்சாவூர். அம்மா சரஸ்வதி ஹவுஸ் வொய்ப். கண்ணனுக்கு பெண் பார்க்க தொடங்கியதும், அவனின் நெருங்கிய உறவினர் ஒருவர் மூலமாக அவனைத் தேடி வந்த தேவதை ஷண்மதி. போலீஸ் என்பதாலோ என்னவோ, கண்ணனுக்கு அவனின் மாமனார் மீது மரியாதையுடன் கூடிய பயமொன்று இருக்கத்தான் செய்தது. அதை வைத்து தான் ஷணு அவனை அடிக்கடி சீண்டி பார்ப்பாள்.

“ என் தம்பி அப்பவே சொன்னான், ‘டேய் அண்ணா பொண்ணொட அப்பா போலீஸாம், முடிவு எடுக்குறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சுகோனு’ நான் கேட்டேனா!!!.. நீ தான் யோசிக்க விட்டியா!!!  ஃபர்ஸ்ட் லுக்லயே என்ன போல்ட் அவுட் பண்ணவ தானே நீ.. “

( தம்பி நீ திட்றியா?? பாராட்டுறியா?? புரியவேயில்லையேப்பா..)

“ பார்ரா  இல்லைனாலும் எங்க அப்பானா உங்களுக்கு ரொம்ப பயம் தான் பாருங்க.. பொண்ணு பாக்க வந்த அன்னைக்கு நீங்க விட்ட ஜொள்ளுல எங்க ஏரியால வெள்ளமே வந்துருச்சு “

“ நான் என்ன பண்ண, என் பொண்டாட்டி அம்புட்டு அழகு! “

“ போதும் போதும்..... “

“ எனக்கு போதாதே, நீ இன்னைக்கு நைட் நம்ம மீட்டிங்கு ஓகே சொன்னால் தான், அயம் ஹாப்பி ”

“ அதெல்லாம் முடியாது போங்க”

“ ஹேய் ஷணு குட்டி மாமா பாவம்டி. ஒத்துக்கோ ப்ளீஸ்... “

“ சான்ஸ்ஸே இல்ல. நோ... “

“ என் ஷணுல..  ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.