(Reading time: 11 - 21 minutes)

ஹே.. விரிக்காதே லேப்டாப் ஷாப்!! ஐ அம் டெல்லிங் ஈமெயில் மேட்டர் தூனே லஞ்ச் டைம் மே சொன்ன மேட்டர்...”

அவன் சொன்னதும் சட்டென்று நிமிர்ந்த ஆர்யமன் அவன் பேச்சில் இடை புகுந்து..

“உனக்கு வேற வார்த்தையே கிடைக்கலையா.. மேட்டராம்.. மேட்டர்”, என்று மெல்லிய குரலில் அவனைக் கடிந்து...

“ஜாஸ்மின் மாதிரி லீவ்ல போனவங்க.. உன்  ஈமெயிலை பார்க்க கூட மாட்டாங்க! போன் செய்தும் சொல்லிடு!”, என்றான் கட்டளை போல்..

‘இந்த ஈமெயில் அனுப்பியதே, மேலிடத்திடம் சொல்லாமல் இவனாக செய்தது! இப்பொழுது இது வேறா’, என்று தனுக்குள் குழம்பினான் தினேஷ்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

தினேஷ் ஒரு குழப்பவாதி. இப்படி குழப்பவாதிகள் முடிவெடுக்க மற்றவர் துணை நாடுவர். அந்த வகையில் ஆர்யமன் நல்ல வழி காட்டி அவனுக்கு!

இந்த இரண்டு வருடத்தில் ஆர்யமன் எப்படி முன்னேறினானோ.. அதே போல தான் தினேஷ்ஷின் வளர்ச்சியும் - இள வயதிலே ஹச்.ஆர். தலைமை பொறுப்பை ஏற்று விட்டான்!

இப்பொழுதும் ஆர்யமன் சொன்னதை செய்ய குழம்பி போய் நிற்க...

“எந்த பிரச்சனையும் வராது!”, என்று அழுத்தமாக ஆர்யமன் சொல்லவும், அதில் இருந்த உறுதி தினேஷ்ஷை தெளிய வைத்தது... அதற்குள் ஆர்யமன் கணினியை மீண்டும் உயிர்ப்பிக்க.... அதைக் கண்ட தினேஷ்,

“ஹே.. இட்ஸ் டைம்... கல் யா வொர்க் பண்ணலாம்..”, என்று அவனைக் கிளம்ப முயல...

“ஜஸ்ட் டென் மினிட்ஸ்! எனிவே சசிக்கு சப்போர்ட்டா  டெக்னிகலி சவுன்ட்  பெர்சன் வேணும்.. இந்த கேன்டிடேட் சரியா வருவானான்னு பார்க்கலாம்.“, என்று சொல்லிக் கொண்டே தினேஷ் அனுப்பிய ஈமெயிலை திறந்து...

அந்த ரெஸ்யூமை திறந்தான்.. இதில் விஷயம் என்னவென்றால்.. இன்னும் அந்த பெயரைப் படிக்கவில்லை.. வேகமாக அவன் தகுதி, அனுபவம் இதையெல்லாம் ஓட்டி விட்டு...

‘இந்த கேண்டிடேட் பத்தி முகுந்த் கொடுத்த ரிப்போர்ட்டை பார்க்கணுமே..”, என்று கேட்க...

“லுக் அதே ஈமெயில் மே பரணிதரன் ஏக் ஃபைல் இருக்கு!! அது முகுந்த் ரிப்போர்ட் ஹே!!”, என்றான் தினேஷ் அவனருகில் அமர்ந்த படி...

இவன் பரணிதரன் என்று சொன்னதுமே...

“பரணிதரன்.. பரணி நட்சத்திரம்.. மேஷ ராசி”, என்று முந்தைய மாலைப் பொழுதில்  அஞ்சனா தவிப்புடன் கேட்டது அநியாயத்திற்கு நினைவு  வர.. அவளை நினைக்கக் கூட பிடிக்காமல்...

“ப்ச்ச்ச்!!!!!”, என்ற எரிச்சலுடன்... படக்கென்று கணினியை மூடி விட்டு எழுந்து கொள்ள... அவன் செயலில் திடுக்கிட்ட தினேஷ்,

“ஹே.. ஆர்சி!!! க்யா கர்தா ஹே???”, முழித்த தினேஷ்ஷிடம்...

“நோ... இந்த பர...”, என்று ஆரம்பித்தவன்.. அந்த பெயரைக் கூட உச்சரிக்காமல்..

“இந்த கேண்டிடேட் வேண்டாம்.. லெட்ஸ் கோ!!!”, என்று மட்டும் சொல்லி விட்டு கிளம்பி விட்டான்..

‘கிளம்பலாம்ன்னு சொன்னப்போ... இல்லை இப்பவே ஆள் வேணும்ன்னு சொல்லிட்டு... இப்போ திடீர்னு வேண்டாம்ங்கிறான்!’, என்று குழப்பவாதியான தினேஷ்ஷை மேலும் குழப்பியது இவன் செயல்!!

ஒரு வாரம் ஓடி விட்ட நிலையில்...

அந்த அதிகாலை, ராகவ் காரை ஓட்ட.... அவனருகில் அமர்ந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தாள் அஞ்சனா..

ஆம், சிபி முழுவதுமாக குணமான பின் தான் வேலையைப் பற்றியே யோசிக்க வேண்டும் என்று நினைத்தவளை.... ஒரு வாரத்தில்  சென்னையை நோக்கி கிளப்பி விட்டிருந்தது... அவளின் திருமணப் பேச்சு!!!

‘என் கல்யாணத்தை பத்தி எனக்கே தெரியாம பேசுறாங்க!  யாரையோ கல்யாணம் செய்ய எப்படி எஸ் சொல்லுவேன்? நான் லவ் பண்ணனும்..  பெல்லி பாய், அவங்க எனக்கு மாப்பிள்ளையை காட்டுறதுக்கு  முன்னாடி அந்த பரணிதரனை காட்டிடு!!!’, என்று கண்களை மூடி மானசீகமாக வேண்டிக் கொண்டு வர...

“குட்டி!!! உண்மை சொல்லு!!! வேலைக்கு போற ஆசை இல்லை... கல்யாண பேச்சு பிடிக்காம தானே வந்திருக்க? லவ் பண்ணனுங்கிற உன் ஆசை நிறைவேறலை அதானே உன் கவலை?”, என்று ராகவ் கேட்க...

அந்த கேள்வியில்... ‘பரணிதரனை பார்க்க முடியாமல் போனால்.. ’, கற்பனை தகர்ந்து போய் விடுமோ என்று நினைக்கும் பொழுதே கண்களும் கரித்தது..

எல்லாம் கேட்கும் முன்னே கிடைத்து விடுவதால்.. கிடைக்காது என்ற வார்த்தையை கேட்கக் கூட பெலனில்லை.. அந்த மனதிற்கு....

தங்கையின் கண்ணீர் புரியாது தேற்றுதல் சொல்ல விழைந்தான்...

“குட்டி!!! உனக்கு லவ் ன்னா பிடிக்கும்! அதை விட அண்ணாவை பிடிக்கும் தானே! நான் சொன்னா கேட்க மாட்டியா? கோர்ட்ஷிப் ப்ரீயட்ன்னு இருக்கே.. அதில் அழகா லவ் பண்ணலாமே!!!”

இவளுக்கு காதல் பிடிக்கும்...  என்று மட்டும் தானே அவனுக்கு தெரியும்!!! பரணிதரன் என்ற ஒருவனை காதலனாக மனதில் பதித்து அவனைத் தான் பிடிக்கும் என்று மருகிக் கொண்டிருப்பது அவனுக்கு தெரியாதே!!!

பரணிதரன் வேண்டாம் என்று ஆர்யமன் ஒதுக்க.. அவன் வேண்டுமே  என்று அஞ்சனா தவிக்க..

பரணிதரன் எங்கே இருக்கிறான்???? என்ன செய்கிறான்???

தொடரும்

Episode 14

Episode 16

{kunena_discuss:922}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.