(Reading time: 32 - 63 minutes)

ல்லாரும் நல்லா இருக்கா மாமி! நல்லா நினைவு வெச்சிருக்கேளே? இத்தோ இவாதான்... ரோஜா... லிங்கம் தம்பியோட மனைவி... இதோ இவா பங்கஜ்.. கிருஷ்ணன் தம்பியோட மனைவி..' என்று அறிமுகம் செய்ய பதிலுக்கு ரோஜாவும் பங்கஜும் கைக்கூப்பி வணக்கம் வைத்தனர். நீங்க முதல்ல ஆத்துக்கு வாங்கோ.. மத்தது எல்லாம் அங்கே பேசிக்கலாம்..வாங்கோ..வாங்கோ... காயத்ரி நீங்க எப்படி வந்தேள்?' என்றார் மல்லிகா.

இல்ல மல்லிகா... நாங்க இன்னோரு நா வரோமே... இன்னைக்கு இவ ஆப்பிஸ் போகனும்.. அதுதான்... நாங்க டிராவல்ஸ் கார்ல தான் வந்திருக்கோம்... நீங்கோ உங்க அட்றஸ் தாங்கோ... இன்னோரு நா நிச்சயமா வரோம்!

பரவாயில்ல காயத்ரி.. நாங்க வேத்து மனுஷானு தானே எங்க ஆத்துக்கு வரமாட்டேனுட்டேள்... பரவாயில்ல... பங்கஜ்.. அந்த விசிட்டிங் கார்டை கொடுடா...' என்றார் மல்லிகா.

ஆண்ட்டி... ஒரு நிமிஷம் இருங்க.. அம்மா.. அவங்க வீட்டுக்கு போயிட்டே நாம கிளம்பலாம்... நான் அப்படியே ஆப்பிஸ் போறேன்.. நீங்க வீட்டுக்கு போங்க' என்றாள் அவ்வளவு நேரம் அமைதியாய் இவர்கள் உறையாடலை கேட்ட ஷ்ரவந்தி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

என்னமா அப்படி பாக்கற? நான் அப்படியே வேலைக்கு போறேன்... நம்ம பத்தி இப்படி ஒரு வார்த்தை வந்ததுக்கு அப்புறம் அப்படியே திரும்பி போனா நான் அலமூ பேத்தியில்ல! என்ன அலமேலு நான் சொல்றது சரியா?? நாங்க அப்படியேல்லாம் பாகுபாடு பார்க்க மாட்டோம் ஆண்ட்டி! அதுவும் நான் நிச்சயமாய் பாக்கமாட்டேன் ஆண்ட்டி! நாங்க எங்க வண்டியில வரோம்... நீங்க இடம் சொல்லுங்க..!

பரவாயில்லையே காயத்ரி...உங்க பொண்ணு நல்லாவே பேசறா! என்ன மாமி எல்லாம் உங்க வளர்ப்பா.. வாங்க எங்க கார்லேயே போகலாம்... உங்க வண்டிய பின்னாடி வர சொல்லுங்க... ஒன்னா போனா நாம பேசிண்டே போகலாமே!!' என்றவர் அப்போது தான் அருகிலிருந்த ஷ்ரவந்தியிடம் தன் முழு கவனத்தை செலுத்தினார். சராசரி ஐந்தரையடி உயரம்...ஒல்லிக்குச்சியும் இல்லாமல் குண்டு என்றும் இல்லாமல் ஒல்லியைவிட சற்றே புசினாற் போல் உடல்வாகு...நல்ல களையான முகம்...மெல்லிய ஜரிகையிட்ட ராமர் ப்ளூ லைட் வெயிட் பட்டு புடவை உடுத்தியிருந்தாள். மார்கழிக்காக நேற்றியில் திருமண்ணும் அதற்கு அடியில் நாமக்கட்டியால் "V" என்று தீட்டியிருந்தாள்.தோள்வரை இருந்த முடியினை நுனியில் முடி போட்டு சிறிது மல்லிகையை சூடியிருந்தாள். என்னதான் அமைதியாய் தோற்றமளித்தாலும் அவளது வசீகரிக்கும் குறும்புக் கண்களும் மிகவும் கஷ்டப்பட்டு இருக முடியிருக்கும் வாயும் அவளை அரந்தை வாலு என்று தெளிவாய் எடுத்துக்காட்டியது!

அதற்குள் பங்கஜ் சென்று காரை எடுத்துக்கொண்டு அவர்கள் அருகில் வந்து நிறுத்தினார். காரினை பார்த்த காயத்ரி 'இது உங்க காரா?' என்று ஆச்சிரியத்தில் வாயை திறக்க ஷ்ரவந்தியின் நிலையோ அவள் முகம் அதிர்ச்சியை வெளிக்காட்டியது! 

அவர்கள் உடுத்தியிருக்கும் உடைக்கும் அவர்கள் வந்திருக்கும் காருக்கும் சுத்தமாக எந்த சமந்தமும் இல்லை என்றே தான் முதலில் தோன்றியது! காரினை பார்த்துவிட்டு மீண்டும் அவர்கள் மூவரையும் பார்த்த பிறகு தான் சற்றே தன்னை சுதாரித்துக்கொண்டாள். இப்போது மீண்டும் கவனிக்கும் போது தான் தெரிகிறது.... அவர்களது எளிமை... பெங்கால் காட்டன் புடவை... கழுத்தில் தாலி சரடு ... கைகளில் ஒரு ஜோடி தங்க வளையல் மட்டும்.... எந்தவித அலட்டலும் இல்லாமல்... அவர்கள் மூவரிடமும் குடிக்கொண்டிருந்த அமைதி... அடக்கம்! பார்ப்பதற்கு சாதாரண நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்களை போலவேயிருந்தனர்.

என்ன ஷ்ரவந்திகா?? எங்களை எல்லாம் அளவிட்டு முடிச்சாச்சா?? - என்றாள் ரோஜா... அருகில் ஆமாம் அவ சொல்றது சரி தானே என்பது போல் கண்களாலேயே சிரித்தவாறு நின்றிருந்தார் மல்லிகா.

அப்படியேல்லாம் இல்ல ஆண்ட்டி! உங்க காரை பார்க்கும் போதே நீங்க ரிச் பீப்புள்னு தெரியுது... ஆனா சாதாரணமா ஒரு பெங்கால் காட்டன் புடவை.. பெரிசா நகையும் எதுவும் இல்ல! அலட்டிக்காம சகஜமா பேசறீங்க? நான் பணக்காரி.. இல்ல கோடீஸ்வரின்ற எண்ணம் இல்லாமல் சாதாரணமா பேசறீங்க... எனக்கு உங்க மூணு பேரையும் பார்த்து ரொம்ப இம்ப்ரஸ் ஆயிட்டேன் ஆண்ட்டீஸ்!

கோடீஸ்வரியா?? அப்படியேல்லாம் இல்லைமா... நாங்களும் சாதாரண மனுஷங்கதான்... இது எங்க பிள்ளைங்க எல்லாம் சேர்ந்து வாங்கி தந்ததுடா.. வாங்க.. வீட்டுக்கு போய் பேசலாம்!' என்று அவர்களை தங்களுடன் அந்த BMW X5 வில் அழைத்து சென்றனர்.

எங்க மல்லிகா உங்க வீடு? ரொம்ப நேரமாகுமோ?

இங்க தான் காயத்ரி... மயிலாபூரில்.. இதோ பக்கமா வந்திட்டோம்..மணி ஆறரை கூட இன்னும் ஆகலை...

எங்க உங்க வீடு? இங்க என் மாமியோட அண்ணன் பெண்ணை கட்டிக்கொடுத்திருக்கோம்...

இதோ வந்திட்டோம் அண்ணி... உங்களை அண்ணினு கூப்பிடலாம்ல???' என்று சங்கோஜமாய் பார்த்தார் பங்கஜ் கதவை திறக்க ஹர்ன் அடித்துவிட்டு.

தாராளமா கூப்பிடுமா!' என்றார் அலமூ மாமி.

காவலுக்கு நிற்கும் வேலன் அவசரமாய் ஓடிவந்து கதவினை திறந்து விட்டான். லாவகமாய் வண்டியை ஓட்டிச்சென்று உள்ளே நிறுத்தினார் பங்கஜ்.

அவர்கள் உள்ளே நுழையும் போதே இரண்டு பெண்கள் பட்டு பாவாடை தாவணியிலும் ஒரு பெண் பாவாடை சட்டையிலும் முன்னால் இருந்த பூந்தோட்டத்தில் நின்றுக்கொண்டு செல்ஃவீ எடுத்துக்கொண்டிருப்பதை பார்த்து புன்னகைத்தாள் ஷ்ரவந்திகா!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.