(Reading time: 32 - 63 minutes)

ஹாய் ப்ரீத்தி... நைஸ் டு மீட் யு' என்று கை குலுக்கினான் வியன். 'ஹாய் வியன் வைத்தியநாதன்!' என்று பதிலுக்கு கை கொடுத்தாள் ப்ரீத்தி.

வியன்  முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது. சராசரிக்கு சற்றே உயரமான வியன் கொஞ்சமே கொஞ்சம் பூசிய உடல்வாகோடு... 'பையா' கார்த்தியை போல் இருந்தான் தோற்றத்தில்! ப்ரீத்தியை போல் அழகான ஒரு பெண் கை  கொடுத்தவுடன் டீன் ஏஜ் பசங்களுக்கே உரிய ஒரு பரவசத்தை உணர்ந்தான் அவன்.

வியனின் எண்ணம் போகிற போக்கை உணர்ந்த மலர்விழி தம்பி வியனின் தோள் மீது கை போட்டுக்கொண்டு 'டேய் தம்பி! அவங்க நம்ம வீட்டுக்கு வந்திருக்க விருந்தாளி... உனக்கு ஒன்னு தெரியுமா? அவங்க சிஏ ஆர்ட்டிகல்ஷிப் பண்றாங்களாம்! பேரு கூட ஏதோ நாதன் அசோசியேட்ஸ்னு சொன்னாங்க...கோட்டூபுறம்ல இருக்காமே? உனக்கு தெரியுமா? அவங்க எம்.காம், எம்பிஏ வேற! சூப்பர்லடா?' என்றாள் தம்பி வியனுக்கு ரகசிய பார்வை பறிமாற்றத்துடன்!

அதிசய பார்வையுடன் திரும்பி புதியவளை பார்த்தவன் அழகாய் புன்னகை சிந்தினான். ஹேய்.. வியன்...உங்க கன்னம் கொழுக் மொழுக்குனு இருக்கு சூப்பரா இருக்கு!' என்றாள் ப்ரீத்தி. சிரித்துக்கொண்டே உள்ளே விரைந்தான் குளித்து வர!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз...!

படிக்க தவறாதீர்கள்...

என்ன ப்ரீத்தி? ஒரே யோசனையில இருக்கீங்க? எங்க லார்ஜர் ஸ்கேல் படம் ஓட்டலாமா? இன்னும் அரைமணி நேரத்தில எல்லாரும் வந்திடுவாங்க.. அப்புறம் பூஜை ஆரம்பிச்சிடுவாங்க! உங்களுக்கு விருப்பம் இருந்தா சொல்லறேன்... இல்லைனா அப்புறம் நீங்களே தெரிஞ்சுகங்க!' என்றாள் கயல்விழி.

கண்டிப்பா சொல்லுங்க... எனக்கு ஆர்வமா இருக்கு... ஆனா ஒரு நிமிஷம் இருங்க... பர்மிஷன் மட்டும் சொல்லிடறேன்!' என்றவாறு மொபைலை எடுத்துக்கொண்டு இரண்டு அடி தள்ளி நின்று காதில் வைத்தாள். 

அன்னியன் படத்திலிருந்து 'ஐயங்காரு வீட்டு அழகே...ஐயங்காரு வீட்டு அழகே...' என்று பாடகர் ஹரிஹரன் குரலில் காலர் ட்யூனாய்.. சற்று தள்ளி நின்றிருந்தவருக்கும் வெளியில் கேட்டது. அது மற்ற பெண்கள் முகத்தில் ரகசிய புன்னகையை வரவழைத்தாலும்... ப்ரீத்திக்கு கோபம் தலைக்கு ஏறியது...'எப்படி மானத்தை வாங்கறான் பாரு?' என்று மனதிற்குள் அவனை வசை பாடினாள்.

ஹாய் ப்ரீத்ஸ் டார்லிங்! காலையிலேயே என்ன உன் மச்சான் நினைப்பு வந்திடுச்சா??

டேய் விஸூ! காலங்காற்தால மொக்க போடாதடா! மொதல்ல அந்த காலர் டோன்.. ரிங்க் டோன் எல்லாத்தையும் மாத்து!

மொக்க போடறேனா? சொல்லுவடீ! இன்னைக்கு எவ்வளவு முக்கியமான நாளு... இதுக்காக தானே வெயிட் செய்தோம்.. என்ன புடவை கட்டி வருவல?? அப்புறம் என்ன சொன்ன? அந்த காலர் டோன்.. ரிங்க் டோன்...ஆ...எந்த டோனையும் மாத்த முடியாது டீ பட்டு மாமி! நீ முடிஞ்சதை பார்த்துக்கோ!....

மவனே... கையில கிடச்ச சட்னி தான் டா நீ... எத்தனை தடவ சொல்றது உனக்கு?? என்னவோ... தாலிக்கட்டின பொண்டாடி மாதிரி 'டீ' போடுற? இன்னும் நான் உன் ஆத்துகாரியாகல....அது நினைப்பு இருக்கட்டும்...

சரிதான் போடீ....ஏய் ஒரு நிமிஷம் இரு.. ஏய் எங்க வீட்டு வானரங்கள் இன்னோரு லைன் ல வராங்க... சீக்கிரம் சொல்லு!

டேய் விஷ்வா...நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளேண்டா..அபிஷ்ட்டூ!

புடவை கட்டனியா.. இல்லையா? அத சொல்லு முதல்ல! எங்க அண்ணனுங்க பார்த்து அப்படியே அசந்து நிக்கனும்...அவனுங்க ஒரு நல்ல முடிவுக்கு வந்தாதான்.. அடுத்து எங்க வீட்டு பெரியவங்ககிட்ட பேச முடியும்! அதுக்கு தான் அவனுங்க இம்ப்ரஸ் ஆகறாமாதிரி வர சொன்னேன்.. அவனுங்க கொஞ்சம் ஓல்ட் ஃவேஷண்ட்! ஆனா என் தங்கை எல்லாம் மார்டன் பா!

டேய் மடையா... அண்ணனுங்க  இம்ப்ரஸ் ஆக லவ்வரை புடவைல வர சொன்ன முதல் அறிவு ஜீவிடா நீ...எல்லாம் புடவைல தான் இருக்கேன்... ஆனா நான் ஆஃவிஸ் வர லேட் ஆகும்.. அதனால நம்ம பிளான் இன்னைக்கு நிறைவேறுமானு தெரியல?

சரி..சரி...சீக்கிரம் சொல்லு.. எப்ப வருவ?? ஒரு பத்தரை மணிக்குள்ள வருவீயா? அதுக்குள்ள வந்திடுமா.. தாயே! ப்ளீஸ்! இப்போ என் சிஸ்டர் கால் பேசனும்... நேருல பார்க்கலாம்..பை டார்லிங்க்' என்று கூறி முத்தம் வைத்து போனை அணைத்தான் விஷ்வா.

ம்ம்ம் சொல்லுங்க கயல்.. என்றவாறு வந்து நின்றாள் ப்ரீத்தி. 

ப்ரீத்தியை பார்த்துக்கொண்டு மோபைலில் பேசினாள் மலர்..'டேய் சந்து அண்ணா! எங்க இருக்கீங்க.. ஒரு முக்கியமான விருந்தாளி வந்திருக்காங்க சீக்கிரமா வீட்டுக்கு வா... விளையாடினது போதும்... ம்ம்ம்ம் சீக்கிரம்! எதுக்குன்னா கேட்கற?? டேய்...பொன்னு சமையா இருக்காடா! நிச்சயமா உன் கர்ள் பிரண்டை விட அழகா தான் இருக்காங்க... சரி..சரி... ஜல்தி அண்ணா' என்றாள்.

அதற்குள் வீட்டுனுள் இன்னோவா கார் ஒன்று உள்ளே நுழைந்து அவர்கள் கதை நேரத்திற்கு தடை விதித்தது! 'ராமு அப்பா... மாப்பிள்ளை பொன்னு வந்திட்டாங்க.. என்று உள்ளே குரல் கொடுத்துவிட்டு காரினை நோக்கி விரைந்தாள் கவின்.. அவளை தொடர்ந்து மற்ற பெண்களும்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.