(Reading time: 55 - 110 minutes)

தில் தான் அவர் போய் அப்படி ஒரு கண்டிஷன் போட்டுப் பார்த்தார்…..

இதில் ஏக ட்விஸ்ட் டர்ன் எல்லாம் நடந்து,மாசிரனது குற்றம் வெளிப்பட்ட போது…. மித்ரன் பக்கம் எந்த தவறுமே இல்லை என தெள்ள தெளிவாக தெரிந்து விட்டது….

அதிலிருந்து குற்ற மனப்பான்மை இவரை கொல்கிறது….

மகன் முன் அற்ப புழுவாக உணறுகிறார் தன்னை…..அதோடு அவனை கண்ணால் காண காண…அவன் குணம் அறிய அறிய இன்னுமாய் அள்ளி ஊற்றுகிறதுதான் பாசம். ஆனால் அவன் முன் போய் நிற்கும் போது என்ன சொல்ல எப்படி பேச என்றே தெரியவில்லை அவருக்கு….

சரியாய் சொல்ல வேண்டுமானால் குழந்தையாய் தொலைத்த மகன் மறுபடியுமாய் இவர் இதயத்தில் பிறந்திருக்கிறான்…..அள்ளி கொஞ்ச தோன்றுகிறது ஆசை….ஆனால் அதற்கு தகுதியில்லை தனக்கு என்ற ஒரு உணர்வு….மீண்டும் தவறு செய்து காயப் படுத்துவேனோ என்ற பயமும் வேறு.….

இதில் இவரது மருமகள் மனோகரி…… இவரது மனம் கவர்ந்தவள். ஆரம்பத்தில் யார் தன் மகனை மணந்தால் அவர்களது வாழ்க்கை சரியாய் அமையாது என இவர் என்ணி பயந்தாரோ அவள். திருமணத்திற்கு பின்னும்  அவள் ஸ்விஸ் போகாத போது சற்று பயம் தந்தவள்…..ஆனால் இத்தனை நாளில் அவள் என்ன செய்தாலும் சரியாய் இருக்கும் என இவரை உணர வைப்பவள்.

.தான் அவளைப் போல நடந்து கொண்டிருந்தால் இன்று தன் குடும்பம் இந்த அளவு வேதனைக்கு வந்திருக்காது என அவரை எண்ண வைப்பவள். அப்படிப் பட்டவள் கையில் அவன் இருக்கிறான் என்பதே போதுமானதாய் தோன்றுகிறது…

ஆக அவர் இன்றுவரை மித்ரனை விட்டு விலகி இருப்பதை ஒரு வகையில் இலகுவாக உணர்கிறார்…..தூரத்திலிருந்து அவனைப் பார்த்தால் போதும் என்ற ஒரு மானோ பாவம்….

ஆனால் பாட்டி இப்படி பயந்து போனதைப் பார்த்து இவருக்குமே ஒரு நினைவு…..இவருக்கு மட்டும் சாவு வராதாமா? அது இன்னும் 20 வருடம் கழித்து வரும் என எதுவும் எழுதி கையெழுத்து இட்டு வைத்திருக்கிறதாமா?

நாளை கூட வரலாமே….ஏன் இன்று கூட…..அப்படி நடந்தால் தான் மித்ரனை வெறுக்கவில்லை என்பதை எப்போது எப்படி அவனிடம் சொல்ல முடியுமாம்? அதில் தான் இப்போது அவர் உழன்று கொண்டிருந்தார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - புத்தம் புதிய தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

கூடவே சம்பந்தம் சம்பந்தமில்லாத பயம்…..சொத்து முழுவதும் அவன் பெயரில் இருக்கிறதாமே….அதனால்தான் நான் வந்து சேர்ந்து கொள்வதாக நினைத்தால்???? பயப்பட வேண்டும் என முடிவு செய்து கொண்ட மனம் பயப்பட புது புது காரணங்களை கண்டு பிடிக்கும். அதைத்தான் செய்து கொண்டிருந்தது அவரது  மனம்.

ஆனாலும் அவனிடம் இன்று பேசி விட வேண்டும் என்ற ஒரு வைராக்கியத்திற்கு வந்திருந்தார் அவர்.

விஜிலா மனதில் ஆயிரம் ஊஞ்சலாட்டம்…. அதுவும் மனோவும் மித்ரனும் இன்று வந்து சென்ற பின் இது பெரும் தவிப்பாய் இருக்கிறது…..மனோ எதுக்கு வந்தா? வந்து வர்ஷனைப் பத்தி கேட்டுட்டு போறா…..அவங்க எதுவும் ஆபத்துல இருக்கலாம்னு ஒரு ஹிண்ட் வேற…..மித்ரனும் கொஞ்சம் முன்னால ஸ்விஸ் தான போனாங்க…எதுவும் வர்ஷன் பத்தி இன்ஃபர்மேஷன் கிடச்சுறுக்குமோ….

அந்த ரீதியில் உழன்று கொண்டிருந்தவளுக்கு அன்று இரவு தூக்கமே வரவில்லை….ஏனெனில் இதற்குள் விஷயம் இப்படித்தான் இருக்கும் என்று ஓரளவு உறுதிக்குள் வந்துவிட்டாள் அவள். ஆக மனோவை அழைத்து அதைப் பத்தி பேச வேண்டும் என நினைத்து பல முறை அழைத்துப் பார்த்துவிட்டாள். நம்பர் நாட் இன் ரீச்……

இது இன்னுமாய் பதறுகிறது. கண்டிப்பா வர்ஷனுக்கு எதோ ஆபத்து. மனோவும் மித்ரனும் தேடிப் போயிறுக்காங்க போல….

 இதே நிலை மறு நாள் பகலும் தொடர….இப்போதும் மனோவுக்கு இவள் அழைப்பு சென்றாலும் அவள் அழைப்புக்கு பதில் தராமல் இருக்க….இங்கு வீட்டில் கவனித்தால் எல்லோரும் வெகு இயல்பாய்……

சொல்லப் போனால் ஒரு கூடுதல் மகிழ்ச்சி இழையோடுகிறது…..

பொதுவாகவே வீடு எப்போதும் அடுக்கு கலையாமல் அத்தனை சுத்தமாய் இருக்கும்…..அதில் இன்று வீடு தூசி தட்டப் படுகிறது…..கர்டெய்ன்ங்கள் மாற்றப்படுகிறது……

மெல்ல மெல்ல இவள் நுரையீரலை அழுத்திக் கொண்டிருந்த ஒன்று அதாக விடை பெற்றுப் போகிறது…..எதோ ஒரு மெல்லிய விடுதலை இவள் சுவாசத்தில்…..

மாலையில் குளித்து, தலையில் சின்னதாய் க்ளிப்பிட்டு….ஒரு கீத்தாய் முல்லைப் பூ சூடிக் கொண்டாள்….

மாலை மறைய தொடங்கும் நேரம் இவள் எதிர் பார்த்தது போலவே வீட்டு வாசலில் வந்து நிற்கிறது கார்……முழு நிச்சயமாய் இவள் வர்ஷனை எதிர் பார்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.