(Reading time: 19 - 37 minutes)

“அச்சச்சோ… மெழுகுவர்த்தி அணைஞ்சிட்டே….”

சதி செய்ய நினைத்த காரியத்தை இயற்கைக் காற்றே செய்துவிட, அவளின் வார்த்தையில் சட்டென நிமிர்ந்தவன் அணைந்திருந்த மெழுகுவர்த்தியைப் பார்த்தான்…

“தீப்பெட்டி…..” என தேடியவள் அங்குள்ள ஒருவரை அழைத்துக் கொண்டு வர சொல்ல, அந்த ஆளும் கொண்டுவந்து கொடுத்துவிட்டு அகன்றான்…

தீக்குச்சியை உரசி வெளிச்சத்தை பரவ விட்டவள் மெழுகுவர்த்தியின் அருகே கைகளை கொண்டு வந்து அதற்கு ஒளிகொடுக்க, அவன் பார்வை அவளிடத்தில் வந்திருந்தது…

வெளிச்சம் கொடுப்பதிலேயே கவனமாக இருந்தவள் அவனது பார்வையை கவனிக்கவில்லை… மனதில் எதுவோ உறுத்த, சட்டென நிமிர்ந்தவளது விழிகள் அவன் விழிகளில் தஞ்சம் கொள்ள, அவனால் விழிகளை அசைக்கமுடியவில்லை…

அவளும் அவனும் கரைந்து கொண்டிருந்த வேளை, தீக்குச்சியின் ஆயுள் அவள் விரல்களில் சற்று தீவிரமாகவே வந்து முடிய,

“ம்ருத்யூ……………” என கத்தினாள் அவள்…

லேசாக தீப்பட்ட விரல் என்றாலும் அந்த சுருக் என்ற உணர்வு அவள் விரலில் இருந்து உடம்பில் பரவ, அவள் முகத்தில் அதன் பிரதிபலிப்பு தெரிய,

மனதில் சட்டென ஒரு காட்சி வந்து செல்ல, கண்கள் தானாக சிவந்தது அவனுக்கு…

கோபமா? வெறியா? இல்லை ஆதங்கமா? எதுவென்று பிரித்து சொல்லிடமுடியவில்லை…

அவன் விழியெங்கும் வலியும், வேதனையும் தெரிய, அவள் கைகளை உதறிக்கொள்வது கண்ணில் பட, இதயமெங்கும் ஓர் உணர்வு இமைக்கும் நொடியில் வர,

சட்டென அவளது விரலைப் பற்றினான் ஜெய்….

“வலிக்குதாம்மா?... வலிக்காது… சரியா?... ஒன்னும் ஆகாது… உனக்கு எதுவும் ஆகாது…” என சொல்லிக்கொண்டே விரலில் இருந்து கைகளை எடுத்து அவள் கரத்தினை பிடித்து தன் நெஞ்சோடு சேர்த்து வைத்துக்கொள்ள அவளுக்கு விழிகள் விரிந்தது…

உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்…. என அவன் மனம் கோடி முறை கூப்பாடு போட, அவனது நெஞ்சத்தில் அழுந்தியிருந்த அவளது கரம் அதனை உணர்ந்ததோ என்னவோ, அவளிடத்திலும் சில மாற்றங்கள்…

அவளது கரம் மூலம் தாறுமாறாக துடிக்கும் அவனது இதயத்துடிப்பை உணர்ந்தவளுக்கு அவன் மேல் உள்ள காதல் அணை எல்லாம் உடைத்துக்கொண்டு வெளிவரும் நீரைப் போல் பெருக, அவள் விழி ஓரம் சில நீர்த்துளிகள் எட்டிப்பார்த்தது…

அதே சமயத்தில் கண் மூடி தியானத்தில் அமர்ந்திருந்த பிரம்மரிஷியின் இமைக்கதவுகளின் ஓரத்திலும் நீர் வர அவர் மெல்ல விழி திறந்தார்…

Episode 18

Episode 20

{kunena_discuss:1001}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.