(Reading time: 26 - 51 minutes)

ஹ்ம்ம் பில்லி ஒரு டெரர். லேடி டான் அப்படின்னு சொல்லி வச்சோம்”

“பாருங்க அத்தை

“போதும் போதும் சீக்கிரம் சாப்டுட்டு போய் வேலைய பாருங்க. நான் பேக் செய்யணும்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

RRன் "மலரே ஒரு வார்த்தை பேசு.... இப்படிக்கு பூங்காற்று...!" - மனம் மயக்கும் மெல்லிய காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்..

சுசீலா கிருஷ்ணமூர்த்தி சென்னை சென்றுவிட அன்று மாலை சித்தார்த் அபூர்வா இருவரும் தத்தம் வேலைகளை ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தபடியே செய்து கொண்டிருந்தனர்.

“எப்படி தான் மணிக்கணக்கில் கம்ப்யூட்டரைக் கட்டிக் கொண்டு இருப்பியோ” லாப்டாப்பில் வேலை செய்து அலுத்துக் களைத்துப் போன அபூர்வா தனது அறைக்குச்  சென்று சலங்கைகளை எடுத்து வந்தாள்.

“கொஞ்ச நேரம் நான் ஆட போறேன். நீ போய் சூடா காபி போட்டுக் கொண்டு வா”

அவன் பதிலை எதிர்ப்பார்க்காமல் சலங்கையை கண்ணில் ஒற்றி காலில் கட்டிக் கொண்டு லாப்டாப்பில் விஜயகுமாருக்குப் பிடித்த மதுவந்தி தில்லானாவை ஓட விட்டு ஆடத் தொடங்கினாள்.

“உனக்கு எப்படி இந்த தில்லானா அலுக்கவே அலுக்காதோ அப்படி தான் எனக்கு கம்ப்யூட்டர்” அவளிடம் சொன்னவன் இருவருக்கும் காபி கலக்க சமயலறை சென்றான்.

அவள் ஆட ஆட அவனுக்கு அத்துப்படி ஆன அந்த தில்லானாவை முணுமுணுத்துக் கொண்டே காபி கலந்தவன் சட்டென்று அவள் தாளம் வேறுபடுவதை உணர்ந்தான்.

“பில்லி என்ன ஆடிட்டு இருக்கே” கையில் காபி கோப்பைகளோடு ஹாலுக்கு வந்தவன் அங்கு அபூர்வா கண் மூடிய நிலையில் வித்தியாசமான ஒரே தாளத்தில் ஆடிக் கொண்டிருந்தைக் கண்டு சிந்தனை வசப்பட்டான்.

“அன்னிக்கும் இதே மாதிரி தானே ஆடினா” சட்டென தனது வாட்சின் ரிகார்டரை ஆன் செய்தான்.

ஆடிக் கொண்டிருந்தவள் திடீரென ஆடுவதை நிறுத்தி தள்ளாடவும் சித்தார்த் அவளைத் தாங்கிக் கொண்டான்.

“டாடி டாடி சித்து...டாடிக்குப் பிடிக்கும் சித்து” அரற்றியவளை அணைத்து சமாதானம் செய்தான்.

விஜயகுமார் மறைந்த பிறகு இத்தனை வருடங்களில் அவள் எத்தனை முறை இதே தில்லானாவை ஆடியிருப்பாள். ஆனால் சில நாட்களாக ஏதோ ஒரு தாளத்தில் கால் போன போக்கில் ஆடுவதும் டாடி டாடி என்று அரற்றுவதுமாக இருக்கிறாள்.

“பில்லி...இங்க பாரு...இந்தா காபி குடி” சித்தார்த் அவள் கையில் காபி கோப்பையை திணித்தான்.

சிறிது நேரத்தில் தெளிந்தவள் சிந்தனை வயப்பட்டாள்.

“ஏன் சித்து. அன்னிக்கு சந்தோஷ் வந்த அன்னிக்கும் இப்படி தான் என்னை அறியாமலே கண்ட்ரோல் இல்லாம ஆடினேன். இன்னிக்கும் அப்படி தான் ஆச்சு. எனக்கு ஏதாச்சும் ப்ரைன் டிஸ்ஸார்டர் இருக்குமோ”

“லூசுத்தனமா ஏதாச்சும் உளறாத. உனக்கு ஒன்னும் இல்ல. ஸ்ட்ரஸ் தான். இந்த பேப்பர் சப்மிஷன் முடிஞ்சதும் சரியாகிடும்”

“என்ன சித்து இதுக்கெல்லாம் நான் எப்போ ஸ்ட்ரெஸ் ஆகிருக்கேன்”

“இது உன் லைப்ல ரொம்ப முக்கியமானது இல்லையா பில்லி, அதான் உன்னை அறியாமலே ஸ்ட்ரஸ் ஆகுற”

“மே பி. எனக்கு டையர்டா இருக்கு சித்து. கொஞ்சம் நேரம் இப்படியே படுத்திருக்கேன்” சிறிது நேரத்தில் தூங்கிப் போனாள்.

“என்ன சித்து. அபி தூங்கிட்டாளா. என்ன செய்யட்டும் நைட்டுக்கு” லக்ஷ்மி கேட்க

“எதுனாலும் ஒகே லக்ஷ்மிமா. எங்க ரெண்டு பேருக்குமே ஹாட் பாக்ஸ்ல எடுத்து வச்சிடுங்க” அவரிடம் சொல்லிவிட்டு அபூர்வா சோபாவில் உறங்க தலையணை வைத்து  போர்வையையும் போர்த்தி விட்டு தனது அறைக்கு விரைந்தான்.

னது ரகசிய பாதாள பைரவி அறைக்குள் சென்றவன் அங்கிருந்த சிஸ்டத்தில் தனது வாட்சில் பதிவு செய்திருந்த அபூர்வாவின் நடனத்தை ஏற்றி அதை ஹெட் போனில் கேட்டான்.

“இது சாதாரணமா தோணலை” சொல்லிக் கொண்டவன் மீண்டும் மீண்டும் கேட்டான்.

அந்த சலங்கை இசையின் நோட்ஸ்சை கூர்ந்து கவனித்தவன் அதை ஒரு பேப்பரில் குறித்துக் கொண்டே போனான். முழுவதையும் குறித்து முடித்தவன் இப்போது கோட்ஸ் டிகோட் செய்வது போல அந்த நோட்ஸ்சை ஆராய்ந்தான்.

“மை குட்னஸ் மாமா....மாமா இட்ஸ் ரியல்லி மாமா.....” அவன் மனதில் சந்தோஷம் பெருகியது. அவனை அறியாமல் கண்கள் கலங்கின.

“பில்லி...மாமா உயிரோட இருக்காங்க. உன் மூலமா இசை மூலமா எனக்கு தகவல் சொல்லிருக்காங்க” தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.

மீண்டும் அந்த குறிப்பினை முழுவதுமாக ஆராய்ந்தவன் இறுதியில் கண்ட செய்தி பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.

“இது உண்மையாக இருக்குமா. இப்போதைக்கு அபிகிட்ட நாம எதையும் சொல்ல வேண்டாம். மாமா அபியோட ஆழ்மனதோடு தொடர்பு கொண்டிருக்கார். அவளுக்கு இப்படின்னு தெரிஞ்சுதுனா கான்சியஸ் ஆகிடுவா. ஐ ஷுட் பி பேஷன்ட். மாமா திரும்பவும் ஏதாச்சும் தகவல் சொல்லலாம். அவர் எங்கே இருக்கார்ன்னு கண்டுபிடிக்கணுமே”   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.