(Reading time: 4 - 7 minutes)

34. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

பிரம்மாபுரம்….

வானளாவிய உயர்ந்த மாட கோபுரங்களின் மத்தியில் பிரம்மாண்டமாய் உருவாக்கப்பட்டிருந்தது அந்த உலகம்…

அரண் போல் பாதுகாப்பாய் சுற்றிலும் பெரும் கோட்டை சுவர்களும், கண்ணைக் கவரும் வண்ணம் பல விதமான செடி, கொடி, மரங்களும்…

ஆஹா…. சொல்லி மாளாது அந்த ரசனைகளை ஒரு சில வரிகளில்…

இயற்கைக்கு எப்பவும் ஒரு அழகு உண்டு… அது இங்கே கொஞ்சம் கூடுதலாகத்தான் உள்ளதோ என்று தோன்றிடும் அளவிற்கு இருந்தது அந்த இடம்… நிச்சயமாய் அங்குள்ள மக்களின் வார்த்தைகளும் அதுவாகவே இருந்திடும்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலையோரம் வீசும் காற்று..." - நட்பால் இணைவோம்...

படிக்க தவறாதீர்கள்...

ஏனெனில், அவர்கள் வாழும் அந்த உலகம், அந்த இடம் அனைத்தையும் இப்படி மனதைக் கவர்ந்திழுக்கும் தன்மையுடன், கூடவே வியந்து போற்றிடத்தக்க வகையில் அமைத்திட்ட பெருமை, சேருவது ஒருவரை மட்டுமே…

ஆம்… பிரம்மதேவனின் மூத்த புதல்வனான தட்ச பிரஜாபதியையே சாரும்… தந்தையின் சொல்லுக்குள் நிற்பதிலாகட்டும், தன் மக்களை நல்வழியில் நடத்துவதிலாகட்டும், தான் பெற்ற மகள்களின் மீது காட்டும் பாசத்திலாகட்டும், தன் மனைவியிடம் பிரியமாய் நடந்து கொள்வதாகட்டும், அவருக்கு நிகர் அவரே… இது அனைத்திற்கும் மேலே அவர் உயிரையே வைத்திருக்கிறார் என்று சொன்னால், அது இரண்டு பேரின் மீது மட்டுமே…

ஒன்று…. உலகத்தை காக்கும் அந்த பரந்தாமன்…. இன்னொன்று, அவரின் செல்லமான இளைய மகள் சதி….

அளவில்லாத பக்தி அந்த பரந்தாமனிடம் அவர் கொண்டிருந்தால் என்றால், அளவில்லாத நேசத்தை வைத்திருந்தார் தன் உயிருக்கும் மேலான மகளிடத்தில்…

இதுநாள் வரையில் அவள் ஒரு விஷயத்திற்காக ஏங்கியதே இல்லை என்றே கூறலாம்… ஆம், அவள் ஆசைப்பட்ட அனைத்தையும் அவள் கேட்டு முடிப்பதற்குள் அவளிடம் கொடுத்து, மகளின் முகத்தினில் தவழும் பேருவகையைக் கண்டு மனதினுள் பூரித்து போவார் அவர்…

தன் மகளுக்கு வலி என்ற ஒன்றே தெரியாமல் வளர்த்திருந்தார் அவர்… மேலும் மகளின் மனமோ, முகமோ வாடிட சம்மதிக்கமாட்டார் அவர்…

ஆம், பல பெண்ணை பெற்றவராயிருந்தாலும், அவருக்கு அவரின் சதி மீது தனி பிரியம்  உண்டு… அவள் அவருக்கு கிடைத்தது அவர் செய்த வரம் அல்லவா?... ஆம் அவர் அதனை அப்படித்தான் எண்ணினார்…

உயர்ந்த மதிலை தாண்டி வந்து கொண்டிருந்த புதல்விகள் மூன்று பேரையும் கண்டதில் மகிழ்ந்த தாயுள்ளம் சற்று நேரத்திலேயே, இன்னும் தனது இரண்டு புதல்விகள் வராதததைக் கண்டு பதறியது…

முதலாக வந்த மூத்த மகளிடம் வினவினார் அவளின் அன்னை பிரசுதி…

“மகளே… எங்கே சதி?...”

“வருகிறாள் அன்னையே…”

“எங்கே?… அவளைக் காணோமே…”

“பின்னால் தான் வருகிறாள்….”

“சரி… நீங்கள் சென்று தந்தையிடம் நீரை கொடுங்கள்… சதி வந்த்தும் நான் அவளை அழைத்து வருகிறேன்…”

“அப்படியே ஆகட்டும் அன்னையே…” என்ற பெண்கள் மூவரும் சட்டென உள்ளே செல்ல, வாசலையேப் பார்த்திருந்த பிரசுதியின் கண்கள் சிறிது நேரத்திலேயே மலர்ந்து போனது…

“சதி… மகளே…. ஏனம்மா இவ்வளவு நேரம்?...”

மகளிடம் அக்கறையாய் அவர் வினவ,

“ஒன்றுமில்லை அன்னையே…” என பதிலளித்துவிட்டு, 

“தந்தை அபிஷேகத்தை ஆரம்பித்துவிட்டாரா?...” எனக் கேட்டாள் தாயிடம்…

“இப்பொழுது தான் ஆரம்பித்தார்… அதனால் தான் நான் இங்கேயே நின்று நீங்கள் வருவதற்காக காத்திருந்தேன்…  சரி சரி… விரைந்து உள்ளே செல்ல்லாம்… வாருங்கள்…”

என்ற பிரசுதி சற்றும் தாமதிக்காமல், தனது இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்…

அங்கே, தனது ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருந்த பிரஜாபதி, ஸ்ரீவிஷ்ணுவின் சிறிய சிலைக்கு அபிஷேகத்தை ஆரம்பிக்க சொன்ன வேளை, மகள்கள் அனைவரும் வர, அனைவரிடத்திலும் இருந்த நீரை கீழே வைக்க சொல்லிவிட்டு, தனது பூஜையை தொடங்கினார் அவர்…

பின்னர், அதனை முடித்துக்கொண்டு எழுந்த போது, அனைவரும் எழுந்து கொண்டனர்…

“அனைத்தும் அந்த பரந்தாமனின் கருணை… அவரின் கருணைக்கு என்னால் இயன்ற ஒரு சிறு காணிக்கை தான் நான் அடுத்து செய்ய போகும் செயல்…”

அவர் சொல்லிவிட்டு அங்கிருந்தோரைப் பார்க்க, அரண்மனையில் உள்ள முக்கிய நபர்கள் யாவரும் முழித்தனர், அது என்னவாக இருக்கும் என்று…

அனைவரின் எண்ணத்தினையும் அவர் புரிந்து கொண்டாரோ என்னவோ, புன்னகையோடு ஓரிடத்தைக் கை காட்ட, அனைவரின் பார்வையும் அவர் சுட்டிக்காட்டிய இடத்தை நோக்கிச் சென்றது உடனேயே…

Episode 33

Episode 35

{kunena_discuss:1001}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.