(Reading time: 14 - 28 minutes)

ர்ஜுன் நினைவு தோன்றியவுடன் , அவன் சொன்ன போஸ்டிங் கிடைத்தவுடன் தகவல் சொல்ல சொன்னது நினைவு வந்தது. அடடா.. சொல்லாமல் விட்டுட்டோமே.. என்று எண்ணியவள் அர்ஜுன் நம்பர் க்கு வேகமாக டயல் செய்ய போனாள். பிறகு தான் அவன் மெசேஜ் மட்டும் கொடுக்கும் படி சொல்லியிருந்தது நினைவு வந்தது.

“ஹாய். திஸ் இஸ் சுபத்ரா.. மை போஸ்டிங் இஸ் confirmed இன் Cryptallaogy ட்ரைனிங் சென்டர். ஐ அம் going now டு டெல்லி.. “ என்று மெசேஜ் கொடுத்தாள்.

கொடுத்த பின் தான் மணி பார்த்தவள், மணி பதினொன்று என்று. அவன் தூங்கி இருப்பானோ என்று நினைத்தாள். சரி எப்படியும் காலையில் பார்த்து விட்டு பதில் கொடுப்பான் என்று எண்ணினாள்.

ஆனால் அவளின் நாயகனோ மெசேஜ் சவுண்ட் கேட்டு பார்த்தவன், தன் மனதிற்கு ப்ரியமனவளிடமிருந்து வந்த முதல் மெசேஜ் என்பதால் அதையே சற்று நேரம் பார்த்துக் கொண்டு இருந்தான்.

பின் “ஹாய்.. சுபா.. congrats.. எப்படி டெல்லி போற..? யார் கூட வர்றா?” என்று வினவினான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா" - சமூக அக்கறையுள்ள குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அவன் அவ்ளோ சீக்கிரம் reply பண்ணுவன் என்று எதிர்பார்க்காத சுபா, சந்தோஷமாக,

“by ட்ரைன்.. யாரும் இல்லை.. தனியாதான்...” என்று பதில் கொடுத்தாள்.

“ஒஹ்.. டேக் கேர்.. நாளைக்கு நீ டெல்லி reach ஆனவுடனே எனக்கு மெசேஜ் பண்ணு.. குட் நைட்” என்று பதில் கொடுத்தான்.

சுபாவும் “ஓகே .. குட் நைட்” என்று பதில் கொடுத்து விட்டு தன் பெர்த்தில் ஏறி படுத்தாள்.

அர்ஜுன் அவளிடம் மெசேஜ் பண்ணி வைத்தவன் , மிதுன்க்கு போன் போட்டான்.. அவன் செல்லில் அவுட் going allowed.. ஆனால் ரேட் கட்டர் போல் ரெண்டு நிமிடத்தில் கட் ஆகிடும்.

ராகுல் எடுத்தவுடன் “ராகுல் .. சுபா போற ட்ரைன் நம்பர், கோச் எல்லாம் எனக்கு sms அனுப்பிடு” என்றான்.

“ஏன்டா..?”

“அவள் தனியா போறா இல்லியா. அதனால் அவள் safety க்காகத்தான்.. நான் ட்ரைன் அப்போ அப்போ track பண்ணிக்கிறேன்..” எனவும்

“சரிடா “ என்று உடனே மிதுன் அனுப்பி வைத்தான். அவனுக்கு தெரியும் அர்ஜுன் position. அதனால் வேறு கேள்விகள் கேட்காமல் உடனே செய்தான்.

சுபத்ராவை ட்ரைனிங் கேம்ப் லே சந்திக்கும் முன்னாடி வரை அவளை பற்றி தெரிந்து கொள்ள detective பார்ப்போமா என்று கூட யோசித்தான். ஆனால் எப்போ அவளை பார்த்தானோ அதன் பின் அவளை பற்றிய எந்த விஷயமும் வேறு யாரிடமும் அவன் கேட்க விரும்பவில்லை.

தான் அவளை விரும்புவது தெரிந்த பின், அவளை பற்றி தான் தெரிந்ததை சொன்னால். அவளை உளவு பார்ப்பது போல் தோன்றிவிடுமோ என்று அஞ்சினான்.

அதனால் தான் அவளுடைய போஸ்டிங் பற்றி நிஷா ராகுலிடம் கூறி, அவன் மூலம் அர்ஜுன் தெரிந்து கொண்டாலும் கூட, அவள் கிளம்பும் detail எல்லாம் கேட்கவில்லை. இன்றைக்கு அவளாக மெசேஜ் கொடுக்கவும் தான் அவளிடம் பேசினான்.

ஆனால் தனியாக செல்வதால் , அவளின் பாதுகாப்பு கருதி அவள் செல்லும் ட்ரைன் நம்பர் எல்லாம் மிதுனிடம் வாங்கினான்.

ன் பெர்த்தில் ஏறி படுத்த சுபா, அர்ஜுனோட மெசேஜ் மீண்டும் மீண்டும் பார்த்தவளுக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. அர்ஜுன் தன்னிடம் காண்பிக்கும் அக்கறைக்கு என்ன பெயர் என்று ?

அவளுக்கு சந்தேகம் ஏற்படக் காரணம் , இன்றைக்கு மிதுன் மகிமாவிடம் பேசும்போது காட்டிய முகபாவங்கள். அவள் எது செய்தாலும் ரசிக்கும் முகபாவம். அதே சமயம் மற்றவர்களிடம் கண்ணியமான பார்வை.

இதே மாதிரி அர்ஜுனிடம் கண்டு இருக்கிறாள். அவளுக்கு ட்ரைனிங் சென்ற முதல் நாளே தான் அவனை சைட் அடித்தது நினைவு வந்தது. அதே சமயம் அன்றைக்கு அவன் அவளிடம் புதிதாக பார்ப்பவன் போல் நடந்து கொள்ளாமல், அதே சமயம் ஒரு உரிமையோடு அவளிடம் பேசியது போல் இன்றைக்கு தோன்றியது. ஏன் என்றால் அதே சமயம் அவன் நிஷாவிடம் பேசும் போது காட்டிய முக பாவங்களோ, குரலோ இவளிடம் காட்டும்போது தானாக ஒரு குழைவு, கனிவு வந்து விடும்.

அர்ஜுன் தன்னிடம் கொண்டு இருப்பது காதலா ? என்ற எண்ணம் தோன்றியது ..

ஷப்பா.. இப்போ தான் சுராவிற்கு அர்ஜுன் தன்னை பார்க்கும் பார்வை வித்தியாசமே புரிய ஆரம்பிச்சு இருக்கு .. இவளை கரை எத்தரதுக்குள்ளே நமக்கு நாக்கு தள்ளி போய்டும் போலே.. சரி சரி. .எவ்வளவோ பார்த்துட்டோம்.. இதையும் பார்த்துடுவோம்.)

friends.. அடுத்த எபிசொட் லேர்ந்து நம்ம லவ் மோடுலேர்ந்து .. அதிரடி action மோட்க்கு சுவிட்ச் ஓவர் ஆகிடலாம்னு நினைக்கிறேன். ட்ரை மை லெவல் பெஸ்ட்.

மழை பொழியும்

Episode 25

Episode 27

{kunena_discuss:1031}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.