(Reading time: 54 - 107 minutes)

கான்பரன்ஸ் முடிஞ்சு நீ வந்ததும் வீட்ல சொல்லிக்கலாம் பில்லி ப்ளீஸ்” என்றவன்  உடனேயே கோர்ட் மேரேஜ்க்கான ஏற்பாடுகள் செய்தான். கோர்ட்டில் இன்னொரு முத்திரை தாளில் அவளிடம் கையெழுத்து வாங்கினான்.

என்ன எழுதியிருக்கு என்று அவள் படிக்கவும் இல்லை. கேட்கவும் இல்லை.

கோர்ட் வேலைகள் முடிந்து அவள் கரம் பிடித்து வா போகலாம் என்று அவன் அழைத்துச் சென்ற அந்த நொடி அவள் நினைவுகள் அந்த பால்ய காலத்தின் நிகழ்விற்குத் தாவிச் சென்றன.

அன்று அவளை பில்லி என்று மற்ற அனைவரும் கேலி செய்ய “மாரூங்கா” என்று கோபமாய் உரைத்தவன்  இதே உரிமையாய் அவளது கரம் பற்றி அழைத்துச் சென்றான். அன்றும் இன்றும் அவன் அவள் மீது கொண்ட உரிமையில், அவன் மீதான அவளது நம்பிக்கையில் எந்தவித மாறுதலும் அவர்களிடையே இல்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "யார் மீட்டிடும் வீணை இது..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

தங்கள் மேரேஜ் சர்டிபிகேட் மற்றும் அபூர்வா தனக்கான முடிவுகளை சித்தார்த் எடுக்க சம்மதம் என்று கையெழுத்து போட்டிருந்த பத்திரம் இரண்டையும் காண்பிக்க அனைவரும் திகைப்படைந்து போயினர்.

அவனது இந்த உறுதியைப் பார்த்து பிரதமர் அவன் திட்டத்திற்கு முழு ஒப்புதல் அளித்தார்.

ஜெனீவா செல்லும் முன் சித்தார்த் அபூர்வாவின் நெற்றியில் குங்குமம் வைப்பதாக சொல்லி உண்மையில் ஒரு சிப்பை (CHIP) பொருத்தினான்.

அது அவனது பல ஆண்டு உழைப்பின் கண்டுபிடிப்பு. அவனது ப்ரேத்யேக கணினியில் இருந்து கண்ட்ரோல் செய்யக் கூடிய அந்த சிப்  ஒரு  வீடியோ சென்சார் மட்டுமல்லாது வையர்லெஸ் முறையில் அருகில் இருக்கும் சிஸ்டத்தோடு கனெக்ட் செய்ய வல்லது. அதன் மூலம் அவர்கள் சிஸ்டத்தை ஹேக் செய்து அவர்களின் திட்டத்தை அறிந்து கொள்ள சித்தார்த் அபூர்வா நெற்றியில் இதைப் பதித்தான்.

ஜெனீவா மாநாடு முடிந்து அபூர்வாவை சித்தார்த் அழைத்துச் செல்ல வந்த போது அவளுக்கு ஆச்சரியம்.

“சித்து நீ எப்படி”

“சும்மா தான்” சிரித்தப்படியே கண்ணடித்தான்.

அவனிடம் கான்பரன்ஸ் பற்றி பேசிக் கொண்டு வந்தவள் விமான நிலையம் வந்ததும் அவனுடன் செக் இன் செய்தாள்.

“இது என்ன சித்து” அந்த தனி விமானம் பார்த்து ஆச்சரியம் அடைந்தாள்.

“ஹ்ம்ம் உன்னை கடத்திட்டு போகப் போறேன்”

“சித்து.. மூக்கு ஒழுக அழுதுட்டு இருந்தியே அதான் பாவம் பார்த்து உனக்கு வாழ்க்கை குடுத்தா நீ பண்ற வேலை எல்லாம் சரி இல்லியே” அவன் காதைப் பிடித்து திருகியவள் அவனருகில் அமர்ந்து தோளில் சாய்ந்து கொண்டாள்.

“நிஜமாவே எங்கேயாச்சும் போகப் போறோமா சித்து”

“ஆமா பில்லி”

“சரி”

“எங்கன்னு கேக்கலையே நீ”

“நீ கூட வரும் போது எங்கேயா இருந்தா என்ன சித்து”

அவள் உறங்கிப் போனாள். உறக்கத்தில் இருந்தவள் புஜத்தில் மயக்க மருந்தினை செலுத்தினான்.

“உன் கூடவே தான் இருப்பேன்டா”

விமானம் ஸ்ரீநகர் விமான நிலையத்தை அடைய அங்கிருந்த ராணுவ விமானம் ஒன்றில் எல்லைப்பகுதி கிராமமான குலாப்மார்க்கில் தரையிறங்கினர்.

இந்த ப்ரைவேட் ஜெட் மற்றும் ராணுவ விமானம் பாதுக்காப்பு ஆலோசகரின் சிறப்பு உத்தரவின் பேரில் சித்தார்த்க்கு வழங்கப்பட்டது.

சித்தார்த் முதியவர் போல வேடம் அணிந்து அபூர்வாவிற்கு பர்தா அணிவித்து ஒரு பெரிய மிருதுவான போர்வையில் சுருட்டி தூக்கிக் கொண்டு வாடகை வண்டி ஓட்டுனர் ஒருவரை அணுகினான்.

“என் மனைவியின் கடைசி ஆசை அவள் பிறந்த இடத்தில அடக்கம் செய்யணும்னு. அது சம்பல் கிராமம் அங்கு வரை கொண்டு விட முடியுமா” என்று அந்த ஒட்டுனரிடம் சொல்லவும் அவனும் பரிதாபப்பட்டு எல்லை வரை கொண்டு விட்டான்.

அங்கிருந்து சமீரின் தந்தையிடம் அபூர்வாவை ஒப்படைத்தவன் அவர்கள் செல்லும் மார்க்கத்தை ட்ரேஸ் செய்தபடியே மரங்களின் மறைவில் சற்று தூரத்தில் தொடர்ந்தான். அபூர்வா மர வீட்டினை அடைந்ததும் வீடியோ சென்சார் மூலம் நடப்பவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவன் தக்க சமயத்தில் அவள் நெற்றியில் இருந்த  சிப் மூலம் அவர்கள் சிஸ்டத்தை ஹேக் செய்தான்.

“அவர்கள் சிஸ்டம் மிகவும் அட்வான்ஸ்ட் அண்ட் ப்ரோடக்டட். சாதாரணமாக அதை ஹேக் செய்வது முடியாத ஒன்று. அதிலும் சந்தேகம் வந்துவிட்டால் நமது காரியம் பழுதாகும். அதனாலேயே அபூர்வா நெற்றியில் சிப் பொருத்தி அதை ஹேக் செய்ய திட்டமிட்டேன்”  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.