(Reading time: 35 - 70 minutes)

ற்கனவே பின் தலையில் பட்ட அடியில் ரத்தம் கொட்ட கொட்டத்தான் அவனுமே இவளிடம் பாய்ச்சலாய் வந்து கொண்டிருந்தான்…..யார் அட்டாக் செய்தாலும் இப்டி ஓபன் ஸ்போஸ்ல நிக்றது செம ரிஸ்காச்சே என்பது அவனுக்கு….. ரியுவ சேஃபான ப்ளேஸ்க்கு கொண்டு போயே ஆகனும் என்பது அவன் நினைவு….

“ரியு வீட்டுக்குள்ள போ ரியு….. தயவு செய்து  உள்ள போ….இங்க வராத” எத்தனையாய் அவன் கத்தியபடி அவளை நோக்கி ஓடி என்ன…..ரியா அவனிடம் தான் ஓடினாள்…… பாய்ந்து அப்பினாள்…. அங்குலம் அங்குலமாக அவன் முகம், தலை, கழுத்து, அவன் உடல் என ஒவ்வொரு செல்லின் சுக பத்திரத்தை தடவிப் பார்த்து பரிசோதிக்கிறது நடுங்கிக் கொண்டிருக்கும் அவள் கரங்கள்….

இருந்த உச்ச நிலை உணர்ச்சியில், பயத்தில், தவிப்பில் அவளுக்கு வார்த்தை என்று எதுவும் வராமல்….வெறும் ஓலமாக மட்டுமே வருகிறது அழுகை…

அவளை அப்படியே அவனோடு அள்ளி சேர்த்தபடி கட்டாக தூக்கியபடி அசுர வேகத்தில் ஆதிரனின் வீட்டுக்குள் நுழைந்தான் விவன்…

இதற்குள் ரியாவின் அழுகை சத்தத்தில் அங்கு வந்திருந்த ஆதிரனின் மனைவி…. ரத்தம் சொட்ட நிற்கும் விவனையும் அவன் கைகளுக்குள் நடுங்கிய படி இருக்கும் ரியாவையும் பார்த்தவர்…..நிமிடத்துக்குள் ரியாவை தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள…..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

 விவன் வீட்டிற்குள் யாரும் வந்துவிடக் கூடாதென அந்த பாதுகாப்பை கவனிக்க….. இதற்குள் ஆதிரனுக்கும் தகவலும் கொடுக்க…..

சற்று நேரத்திற்கெல்லாம்…..ஃபயர் எஞ்சின் மற்றும் பக்கா ப்ரொடெக்க்ஷனுடன் விவன் ரியாவை ஆதிரன் தனக்கு தெறிந்த  ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போய்விட்டார்.

விவனுக்கு  தலையில் 4 ஸ்டிச்சஸ் போட வேண்டி இருந்ததை தவிர பெரிதாய் எதுவும் காயமில்லை….ஆனாலும் அன்றைக்கு அங்க அப்சர்வேஷனில் இருக்கட்டும் என்றுவிட்டனர் டாக்டரும் போலீசும்….

ஆம் அடுத்த எந்த வகையில் காய் நகர்த்த என்ற நிலை விவனுக்கும் ஆதிரனுக்கும்….

ஆனால் ரியாவோ குழப்பமின்றி தெளிவாக இருந்தாள்…. யார் இருக்கிறார் அருகில்…..இது ஹாஸ்பிட்டல் பெட்….. என எதைப் பத்தியும் அவள் சட்டை செய்ததாகவே இல்லை…. விவனது தோளைப்பற்றியபடி அவனது தோளிலேயே சுருண்டபடி அவள்….

“இப்பவே தென்காசி கிளம்பிடுவோம்பா” என்ற ஒரே முடிவில் அவள்….

ஆவிதான் இதெல்லாம் செய்துன்னா அங்க போற வரைக்கும் இனி அது விவன கொல்ல ட்ரைப் பண்ணும்…..இதை அவளால் நினைத்துப் பார்க்க கூட முடியவில்லை….. இன்னைக்கு அவன் தப்பியதே எவ்ளவு பெரிய அதிசயம்…. இன்னுமொரு முறை அவனை அப்படி ஆபத்திற்குள் நிறுத்துவதாமா? என்பது அவள் மனம்.

“இல்ல நீங்க சொல்றது போல மனுஷங்கதான் இதை செய்றாங்கன்னே வச்சுப்போம்….அவங்கள எப்டி ட்ரேஸ் செய்யப் போறோம்….. ? தென்காசி வர சொல்றவனுக்கு  எப்டியும் தென்காசில ஒரு ப்ளான் இருக்குமில்லையா…. அதை நம்மட்ட எக்சிக்யூட் செய்றதுக்காகவாவது அங்க நாம இருக்க இடத்துக்கு அவன் வருவான் தானே….. அப்ப ப்ளான் செய்து அவன பிடிக்கலாமில்லையா…? இங்கயே இருந்தா அவன் நம்மள எங்க வக்சு எப்டி அடிக்கிறான்னே தெரியலையே…” இது விவனுக்கும் ஆதிரனுக்குமான அவளது கேள்வியும் விடையும்….

“கொஞ்சம் ப்ளான் செய்ய டைம் கொடு ரியு…..” என்ற விவனின் வார்த்தையைவிட….. “சாருக்கு கொஞ்சம் ப்ளட் லாஸ் அதிகம் அவங்க ரெஸ்ட் எடுக்கனும் மேம்” என்ற நர்ஸின் வார்த்தைதான் அவளை இங்கு இருக்க அனுமதிப்பதே…

இன்னைக்கு ஒரு நாள் என்பது போய் இன்னும் இரண்டு நாளும்  ஹாஸ்பிட்டலிலேயே கழிய… ஆதிரனும் விவனும் செய்த எந்தப் ப்ளானையும் கூட இவள் காது கொடுத்து கவனித்தாள் என்று இல்லை….

விவனுக்கு என்ன வேண்டும் என்பதை மட்டும்தான் கர்ம சிரத்தையாய் கவனித்துக் கொண்டிருந்தாள்….

இதில் ஒரு வழியாய் தென்காசிக்கு கிளம்பிவிட்டனர் இவர்கள்…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.