(Reading time: 23 - 46 minutes)

வளுக்கு அங்கு ஆதரவாக இருந்தவர் அங்கு கன்னியாஸ்திரியாக இருந்த நான்சி மேரி தான்.

அவர் என்றால்  கவிக்கு மிகவும் பிடிக்கும்.அவள் தனிமையை கண்டு பயத்து தன் தாயை தேடிய போது எல்லாம் அவளுக்கு தாயாய் இருந்து அவளை அனைத்தவர் அவர்தான்.

விடுமுறை நாட்களில் நாரயணன் அவளை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுவார். அப்பொழுது எல்லாம் ஆகாஷ் வேறு எங்காவது அனுப்ப பட்டுவிடுவான்.

நாராயணனும் விஷ்வா-காவ்யாவுடன் மாதம் ஒரு முறை வந்து பார்த்து விட்டு செல்வார்கள்.

ஆனால் கவியின் மனதில் மெதுவாக அவளுக்கு யாரும் இல்லை என்ற எண்ணம் நுழைந்து வலுபெற ஆரம்பித்தது.அவள் நான்காவது படிக்கும் பொழுது அவளுக்கு அறிமுகம் ஆனவர்கள் தான் யாமினியும்,அனன்யாவும்.அவர்கள் டேஸ்ஸ்காலர்களாக வந்தனர்.(இப்ப புரியும் எப்படி விஷ்வா யாமினிக்கும்,அனன்யாவுக்கும் தெரிஞ்சவன் என்று...)

மூன்று பேருக்கும் இடையில் அழகான நட்பு பூத்தது. கவி மிகவும் கல்கலப்பானவள் அந்த குணம் மட்டும் அவளை விட்டு போகவில்லை.அது ஒன்று தான் அவளை அவளின் துன்பங்களிடமிருந்து காப்பாற்றியது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பூஜா பாண்டியனின் "நானும் அங்கே உன்னோடு" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அவள் மிகவும் எதிர்பார்க்கும் நாள் எது என்றால் காவ்யாவும்,விஷ்வாவும் வரும் நாள் தான். கவி அனன்யா ,யாமினி குடும்பத்திலும் நன்கு பழகியதாலும்,அவர்கள் வீடு பக்கத்தில் என்பதாலும் ,விஷ்வா,காவ்யா வரும் நாட்களில் அவர்களும் அவர்களுடன் இணைந்து கொள்வார்கள்.

கவிக்கு மற்ற குழைந்தைகள் தங்களது தாய் தந்தை உடன் இருக்கும்போது ஒரு ஏக்கம் வரும்.அவளது வயது அவளது தாயின் இழப்பை புரிந்துக் கொள்ளும் பக்குவத்தை அவளுக்கு ஏற்படுத்தி தந்திருந்தது. இருந்தால் மனம்...

மனிதனின் மனமும்,மூளையும் ஒரே மாதிரி செயல் பட்டால் பல பிரச்சனைகளுக்கு விடை கிடைத்து விடும்.அவள் மனம்

ஆனால் தந்தை.... அந்த கேள்விக்கு மட்டும் அவளுக்கு யாரிடமிருந்தும் பதில் கிடைக்க வில்லை.

அவள் ஒன்று மட்டும் நம்பினால் அவளது தாத்தாவுக்கு அவள் மீது  உண்மையான அன்பு வைத்துள்ளார்  என்று நம்பினாள்.அவளுக்கு ஒரு குடுப்பம் உள்ளது என்றும்,தான் அனாதை இல்லை என்றும் அவள் நம்பினாள் .அதுவும் அவள் பத்தாம்வகுப்பு படிக்கும்பொழுது உடைந்தது.அன்றுதான் அவளது தாத்தாவும்,அவரது குடும்பமும்  அவளை அவர்கள் குடும்பத்தில் இருந்து ஒரு புள்ளியில் ஒதுக்கி  பார்த்துக் கொள்கிறார்கள் என்று..ஆனால் அவர்கள் செய்த பாவத்திற்கான விமோச்சனமாக அவளை பார்த்துக் கொள்கிறார்கள் ..என்று...தெரியவில்லை அவளுக்கு அப்பொழுது ..

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பல நிகழ்வுகள்  அவளுக்கு முக்கியமானது.அதுவும் அவள் டீனேஏஜ்ஜில் காலடி வைக்கும்பொழுது அவள் உடலில் ஏற்படும்  மாற்றங்களை அவளுக்கு சொல்லி புரிய வைக்க அவளுக்கு அன்னை இல்லை என்றாலும் அவளது சொந்தங்கள் அவளுக்கு சொல்லி புரிய வைத்துவிடும்.

ஆனால் கவியின் விஷயத்தில் அவளுக்கு இரண்டும் கிடைக்கவில்லை.

கவி பூப்பெய்த பொழுது அதனை பற்றி அவளுக்கு எடுத்து சொல்ல ஆள் இல்லாததால் அவள் மிகவும் பயந்தாள்.

நான்சி தான் அவளுக்கு அனைத்தையும் எடுத்து சொல்லி வெளிகொண்டுவந்தார். உடனடியாக செய்ய வேண்டிய அனைத்து சடங்குகளும் அவளுக்கு யாமினியின் தாயும்,அனன்யாவின் தாயும் செய்தார்கள்.. அவளது தாத்தாவும்,மாமாவும்,மாமியும் வந்தார்கள் தவிர அவளை அவர்களது வீட்டிற்கு அழைத்து செல்லவில்லை.அங்கே அவர்களுக்கு சொந்தமான வீட்டில் அவளை  அவளது நடராஜன் மாமாவும், மஞ்சு அத்தையும் அதன் பிறகு ஒரு வாரத்திற்கு பார்த்துக்கொண்டு அவளை பார்த்துக்கொண்டனர்.

அது நடந்த பொழுது அவள் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள்.அதன் பிறகு அவள் அதனை இயல்பாக ஏற்றுக் கொண்டு விட்டாள்.அவள் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பொழுது அவளை பார்க்க ஒதுக்கியிருந்த நாளில் விஷ்வா மட்டும் தான் வந்திருந்தான்.

அவனிடம் அவள்  விசாரித்த பொழுது அவன் காவ்யாவிற்கு பங்ஷன் நடந்ததாகவும் அதனால் தாத்தாவால் வர முடியவில்லை என்றுக் கூறினான்.

அதனுடன் ஒரு பெரிய விரிவாக்கமும் கொடுத்தான்.அவன் சொல்லியதில் இருந்து அது மஞ்சள் நீராட்டு விழா என்று அவளுக்கு புரிந்தது.

அனன்யாவிற்கும்,யாமினிக்கும் அது நடந்தது இவள் போட்டோஸ் மட்டும் தான் பார்த்தாள். அவள் மனதில் எங்கு ஏக்கம் வந்து விடுமோ என்று நான்சி அவளை அங்கு அனுப்பவில்லை.

அவளுக்கு செய்யாததால்  தங்கள் வீட்டில் அதுபோல் செய்ய மாட்டார்கள்,அதனால் தான் தனக்கு செய்யவில்லை என்று நினைத்தாள்,ஆனால் காவ்யாவிற்கு செய்து உள்ளார்கள் என்றாள்..,அவள் ஏதோ ஒரு விதத்தில் அவள் அவர்களிடமிருந்து தள்ளி நிறுத்த படுகிறாள் என்று தானே அர்த்தம்...

விஷ்வா அதனுடன் நிறுத்தாமல் அவளுக்கு போடோஸ்களும் காட்டினான்.அது அவளை மேலும் குழப்பியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.