(Reading time: 4 - 7 minutes)

02. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி

Savathopathra... Viyoogam

மேகவுடை அணிந்து பூக்களால் மைத் தீட்டி பனித்துளி வளை குலுங்க சில்லிடும் சாரல் காற்றை காதணியாய் அணிந்து வளைந்து நெளிந்த வழி இடைக் கொண்டு ரம்யமாய் காட்சியளித்தாள் மலைகளின் அரசி.. ஊட்டி..

தியாவை வேட்டையாட விக்ஸும் எலியும் சென்ற நேரத்தில் ஊட்டியிலும் ஒரு வேட்டை நடந்து கொண்டிருந்தது..

ந்தப் புதரின் மறைவில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக இரு பறைவைகள் வான் நோக்கி பறக்க ஆரம்பித்தது.. அதற்காகவே காத்திருந்தது போல் ஒரு கை துப்பாக்கியுடன் காத்திருந்தது.. டிஷ்யும்.. டிஷ்யும்.. டிஷ்யும்..

"என்ன தாத்தா நீ..?? இந்த தடவையும் நீ மிஸ் பண்ணிட்ட.. இப்போ என் சான்ஸ்..",தன் தாத்தாவிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கினாள் க்ரியா..

"குட்டி.. இன்னொரு சான்ஸ் கொடு.. இந்த தடவை நான் ஜெயிச்சிடுவேன்..",கெஞ்சினார் ப்ரணதீசன்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "கிருமி" – காதல் கலந்த விறு விறு தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"சரி.. சரி.. இந்தா பிடி துப்பாக்கியை.."

மீண்டும் அந்த புதரின் மறைவில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக இரு பறைவைகள் வான் நோக்கி பறக்க ஆரம்பித்தது.. டிஷ்யும்.. டிஷ்யும்..  டிஷ்யும்.. மீண்டும் மிஸ் செய்து விட்டார் தாத்தா..

"போ தாத்தா.. அங்க பாரு அந்த டாக் மறுபடியும் உன்ன பார்த்து சிரிக்கப்போகுது.."

அவள் கூறி முடித்த நொடி அந்த புதரிலிருந்து தோன்றியது பிரவுன் டோஃகி.. நக்கல் பார்வை ஒன்றை க்ரியாவையும் தாத்தாவையும் நோக்கி வீசிவிட்டு நமுட்டு சிரிப்புடன் மீண்டும் அந்த  புதருக்குள் மறைந்தது..

அந்த டோஃகி வந்து மறைந்த திரையில் பேக்ரௌன்ட் ம்யூஸிக்குடன் இப்பொழுது கேம் ஓவர்.. 

தவமின்றி கிடைத்த வரமே .இனி வாழ்வில் எல்லாம் சுகமே

நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியில் தானே வாழ்கிறேன்

நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன்

நீ சூரியன் நான் வான்முகில் நீ நடந்திடும் பாதையாகிரேன்

நீ சூரியன் நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன்

தவமின்றி கிடைத்த வரமே ...இனி வாழ்வில் எல்லாம் சுகமே

"குட்டிமா.. போன் அடிக்குது போய் யாருனு பாரு",என்றார் தன்னை முறைத்துக் கொண்டிருந்தவளிடம் எஸ்கேப் என்று மனதில் நினைத்த படியே..

திரையில் தெரிந்த பெயரை பார்த்து முகம் மலர்ந்த க்ரியா தன் தாத்தா இருக்கும் அறையை விட்டு வெளியே வந்து போனை ஆன் செய்தாள்..

"ஹெலோ.. எப்படி இருக்க..?? போயிட்டு போன் பண்ண சொன்னேன்ல..?? அப்புறம் ஏன்  பண்ணலை..??", என்றாள் படபடப்பாக..

"ப்ச்.. தொணதொணன்னு கேள்வி கேட்காதே.. நான் கேட்கறதுக்கு மட்டும் பதில் சொல்லு..", என்று ஆணையிட்டது அந்தக் குரல்..

"ம்...ம்..."

"நான் சொன்ன வேலையை முடிச்சிட்டியா..??"

"இன்னைக்குள்ள முடிச்சுடுவேன்..",என்றாள் தந்தியடித்த படியே..

"என்னது..?? இன்னும் முடிக்கலயா..?? உன்கிட்ட என்ன சொல்லிட்டு வந்தேன் நான்.. நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க..??",பல்லைக்கடித்தபடியே..

"கோபப்படாதே.. கொஞ்சம் கிளாரிஃபிகேஷன்ஸ் இருக்குது அதான்.. இன்னைக்கு நைட் உனக்கு மெயில் பண்றேன்...",என்றாள் அவசரமாக..

"நீ மெயில் எல்லாம் பண்ண வேண்டாம்.. அந்த டாக்குமென்டை என்ன பண்ணனும்னு நாளைக்கு காலையில் கூப்பிட்டு சொல்றேன்...."

"ம்...சரி.. சரி.."

"பெருசு என்ன பண்ணுது..??"

"தாத்தாவா.. அவர்  கேம் விளையாண்டுட்டு இருக்கார்.."

"அதுக்கு எண்பது வயசாகுது.. இந்த வயசுல என்ன கேம்ஸோ..??"

"தாத்தாவை அது இதுனு சொல்லாதே..",என்றாள் க்ரியா சற்றே காரம் ஏற்றி..

"நண்டு.. அட்வைஸ் பண்ணாதே.. எனக்கு பிடிக்காது.. பெருசு இப்போ நீ யார் கிட்ட போன் பேசுனேனு கேட்டா பிரெண்டுக் கிட்டன்னு சொல்லு..அப்புறம் உடம்பை பார்த்துக்கொள்.."

"ம்ம்.. நீயு...", என்பதற்குள் க்ரியாவின் செவிக்குள் பீப்..பீப்.. என்ற ஒலி..

ஒரு நிமிடம் அந்த கைபேசியையே வெறித்து பார்த்த க்ரியாவிற்கு கண்ணீர் கண்ணை முட்டிக் கொண்டு நின்றது...

வியூகம் வகுக்கலாம்...

Episode # 01

Episode # 03

{kunena_discuss:1111}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.