(Reading time: 18 - 36 minutes)

ஷ்வந்த் கூட கிண்டல் செய்வான்.

“இவளை தவிர எல்லாருமே குற்றவாளிங்கன்னு நினைப்பு..விஜயசாந்தி ரேன்ஜ்க்கு எல்லாம் செய்தாலும்,கடைசில ரிப்போர்ட் கொடுக்க என்கிட்ட தானே வரணும்”என்பான்.

நந்தனாவிற்கு தன்னுடைய வேலையே முதல் காதல்.இரண்டாவது காதல் தன் தங்கையின் மீது.மூன்றாவது யஸ்வந்த்தின் மேல் தான்.ஆனால் அதை அவள் சொன்னதும் இல்லை.யஷ்வந்த்திற்கு அது தெரியாமலும் இல்லை.

வீட்டிலாவது நிம்மதியாக,நான் நானாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்,தன் வேலையோடு சம்பந்தப்பட்ட யாரையும் அவன் தன் வீடு வரைக்கும் அனுமதித்ததே இல்லை எனும் போது வாழ்க்கையில் அனுமதிக்க மட்டும் இடம் தருவானா!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

முத்துலெட்சுமி சுப்ரமணியனின் "இவள் எந்தன் இளங்கொடி" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

இதை அவளும் உணர்ந்தே இருந்தாள்.அதனாலையே இருவருமே அதைப்பற்றி நேரடியாக பேசிக்கொள்ள மாட்டார்கள்.விலகல் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.

மருத்துவர் கொடுத்த ரிப்போர்ட்டை படித்துக் கொண்டிருந்த யஷ்வந்த்,வர்ஷூ தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்து,”என்ன”என்பதாக பார்த்தான்.

“அவந்திகாவை பார்த்தீங்களா.எப்போ இங்க வருவாளாம்.பைனல் எக்ஸாம் இருக்கே.ப்ராஜெக்ட் ரெவியூக்கு அவசியம் அவ இருக்கணும்”

“அவளுக்கு விருப்பமிருந்தா வந்துடுவா.நீ ஏன் கவலைப்படற”

“நான் கவலைப்படறது இருக்கட்டும்.உங்களுக்கு வருத்தமா இல்லையா”கூர்ந்து பார்த்தாள்.

“எதுக்காகவும் வருத்தப்பட்டு அதையே யோசிச்சிட்டு இருந்தா,அடுத்த கட்டத்துக்குப் போகவே முடியாது”

“அடுத்தக்கட்டத்துக்கு போக முடியாம தவிக்கறீங்கன்னு கேள்விப்பட்டேன் மாமா”எனவும் மென்னகையுடன்..

“சிலந்தி வலை பின்னிட்டு தான் இருக்கும் வர்ஷூ.எங்கே ஆரம்பிக்குது,எப்போ வலையை பின்னி முடிக்குதுன்னு சாதரணமா கண்டுபிடிச்சிட முடியாது.ஆரம்பமும்,முடிவும் யாருக்கும் எப்பவும் தெரியாமல் இருந்தாலும்,குறி மாறவே மாறாது”புதிராக கூறினான்.

“எது எப்படின்னாலும்,நீங்க இவ்வளவு ரிஸ்க் எடுத்து கல்யாணம் வரைக்கும் வந்திருக்க வேண்டாம்.நான் முன்னாடியே சொன்ன மாதிரி,அவந்திகாவை இங்கே கூட்டிட்டு வந்திருக்கலாம்.அவ மறுத்திருக்கமாட்டாள்.எல்லாத்துக்கும் ஒரு முடிவு கிடைச்சிருக்கும்”

“எல்லா விஷயத்துக்கும் ரெண்டு பக்கம் இருக்கும் வர்ஷூ.அவந்திகாவை நீ சொன்ன மாதிரியே கூட்டிட்டு வந்திருந்தா ஒன்னு அவ தப்பானவளா இருக்கும் பட்சத்தில எஸ்கேப் ஆக நிறைய வாய்ப்பு இருக்கு.தப்பானவள் இல்லைன்னாலும் வீணா அவளை இதுல இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்கறது நம்மளோட மிகப்பெரிய தவறா மாற வாய்ப்பிருக்கு”

“இதுல இன்னொரு கோணம் கூட இருக்குங்க மாமா.காதலிச்ச பொண்ணு எப்படி இருந்தாலும்,அவளை விட்டுக் கொடுக்கக் கூடாதுன்னு நினைச்சிருக்கீங்க”குற்றம் சாட்டும் குரலில் வினவ..

“இதுக்கு நான்காவதா இன்னொரு கோணம் கூட இருக்கு வர்ஷூ.காதலுக்கு அன்பை கொடுக்க தெரியும்.ஆதரவா இருக்க தெரியும்.எந்த சூழ்நிலையிலையும் அரணா பாதுகாப்பா இருக்க நினைக்கும்.குற்றவாளியாவே இருக்கும் பட்சத்தில,எந்த பின்விளைவுகளையும் தாங்கிக்கற மனப்பக்குவத்தோட எல்லாவற்றையுமே எதிர்கொள்ள துணிவை கொடுக்கும்”ஆழ்ந்த குரலில் கூறினான்.

“காதலுக்கு இன்னொரு விஷயத்தைக் கூட சிறப்பா செய்ய தெரியும் மாமா.காயப்படுத்துறது”என்றாள்.

புரிந்தாலும்,புரியாதது போல அவன் நோக்க,”தன்னை காதலிச்ச பொண்ணு பக்கத்திலையே இருந்தும்,அவ சுயநினைவோட இருந்த போது மனம்விட்டுப் பேசாமல்,இப்போது எதையுமே புரிந்துகொள்ள முடியாத மனநிலையில இருக்கும்போது உங்களோட இன்னொரு காதலியை பற்றி பேசறீங்க இல்லையா.இது அநியாயம் இல்லையா”குமுறலுடன் கேட்டவளை பரிதாபமாக பார்த்தான்.

வர்ஷூ அவனைப் பொறுத்தவரை ஒரு குழந்தை.அந்த குழந்தை என்ன செய்தாலும்,அவளை காயப்படுத்த அவனால் முடியாது.இப்போது அவளுடைய கேள்விக்கு பதில் கூறவும் முடியவில்லை.

தன்னருகிலையே தன்னுடனையே வேலை பார்த்தவளின் மேல் காதல் வரவில்லை.நந்தனாவிடம் வலியப் போய்,’இப்படியெல்லாம் நினைக்காதே’என்று எப்படி அவனால் கூற முடியும்.

காதலை உணர்ந்தாலும்,வார்த்தையால் பகிரப்படும் போது தான் உண்மைத்தன்மை வெளியே வருகிறது.

அவந்திகாவிடம் மட்டும் அவனைக் கேட்டா இந்தக் காதல் வந்து தொலைத்தது.காதல் நாள் நட்சத்திரம் பார்த்து வருவதில்லை.இவரிடம் தான் வர வேண்டும்.இவரிடம் வரக் கூடாது என்பது போன்ற விதிமுறையைக் கூட வைத்திருக்கவில்லை எனும் போது யாரை குறை கூற!!

மனிதனை வென்று தின்று கொன்றுவிடக் கூடிய இந்தக் காதலிலிருந்து யாரும் தப்ப முடியாது தான்.

தொடரும்

Episode # 14

Episode # 16

{kunena_discuss:1004}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.