(Reading time: 21 - 41 minutes)

னக்கு ஒன்று தெரியுமா எங்கள் வீட்டில் உள்ளவர்கள் எப்பொழுதும் என் மனதிற்குப் பிடிக்காததை செய்யமாட்டார்கள். ஆனால் இன்று என் மனதைப் பற்றி நினைத்துப் பார்க்காமல் உன்னைமாதிரியே உன் சார்பாக என்னிடம் அவர்களை பேசவைத்துவிட்டாயல்லவா? அதுமட்டுமில்லாமல் என்னை ஏய்... என்று அலட்ச்சியமாக் கூப்பிடவேறு செய்கிறாய். இது போல் இன்னும் ஒரு முறை எனை கூப்பிட்டால் நடப்பதே வேறு என்றாள் .

நம் இருவருக்கும் இடையில் வேறு என்ன பேபி நடக்கும் .நீ ரொமான்சையா சொல்கிறாய்?... என்று அவள் கோபப்படுவதை அவன் ரசித்து சொன்னதும் .

ழையா கோபத்தில் அந்த அறையில் இருந்த ட்ரெஸ்ஸிங் டேபிளின் முன் உட்கார இருந்த ஸ்டூலை எடுத்து அவனை அடிக்கும் நோக்குடன் ஓங்கினால்.

அவள் அவ்வாறு செய்யப்போவதை அவள் உடல் மொழியின் மூலம் யூகித்த மஹிந்தன் வேகமாக அவளின் கையில் இருந்த ஸ்டூலை பிடிங்கி அதில் உட்கார்ந்து கொண்டு சரண்டர் என்று கையை மேலே தூக்கிக்கொண்டு, ஓகே பேபி இனி உன்னை நான் அப்பாடி கூப்பிடமாட்டேன் ஆனால் அதற்கு நீ மனைவியாக என்னிடம் நடந்து கொல்லவேண்டும். டீல் ஓ.கே வா என்று கேட்டான் .

கடைசியில் உங்களுக்குத் புத்தி இப்படித்தான் போகும். நானும் பார்த்தாலும் பார்த்தேன் உங்களைமாதிரி ஓர் அகங்காரம்பிடித்த பணத்திமிருள்ள ஓர் ஆளை இதுவரை நான் எங்கும் பார்த்ததில்லை, உங்களுக்கு என்ன பெண்கள் என்றாள் அவ்வளவு ஈசியாக போய்விட்டார்களா?.. நீங்கள் தாலிகட்டிவிட்ட காரணத்திற்காக உடனே உங்களுடன் குடும்பம் நடத்த ஒத்துக்கொள்ள நான் என்ன உங்கள் அடிமையா? முடியாது.. முடியவே முடியாது.... நீங்கள் நினைப்பது ஒரு நாளும் இனி என் விசயத்தில் நடக்காது என்றாள் .

கவிழையா பேசப்பேச மஹிந்தனின் முகத்தில் இருந்த குறும்புச் சிரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக் மாறி அதில் கடுமை குடியேறியது ,

வேண்டாம்.. ழையா... என்னிடம் இவ்வாறு பேசுவது என் ஈகோவை சீண்டிவிட்டது போல் ஆகிவிடுகிறது, இதுவரை நான் என் முன்னால் விரல் நீட்டிப் பேசக்கூட யாரையும் அனுமதித்ததில்லை .ஆனால் நீ மட்டும் அதற்கு விதிவிலக்கு என்று நான் நினைத்தாலும் உன்னுடைய அதிகப்படியான் உதாசீனம் உன்னை என்னால் காயப்பட வைத்துவிடுமோ!... என்று எனக்கு பயமாக இருக்கிறது என்றவன் ம்.... என்ன சொன்ன? .

பெண்கள் என்றாள் எனக்கு ஈசியாகப் போய் விட்டார்கல் என்றா சொன்னாய். உன்னைப் பார்த்தப் பிறகு எந்த மடையனாவது அப்படி நினைக்க முடியுமா? உன்னால் காந்தம் போல இழுக்கப்பட்டு இப்பொழுது என்ன செய்தால் என்னை புரிந்துகொள்வாய் என்று என் மண்டையை காய வைக்கிறாயே, அப்பா! “உலகத்திலேயே ரொம்ப கடினமான் விஷயம் இந்த பெண்களை டீல் பண்ணுவதுதான்” என்றான் .

இன்னும் ஒன்று சொன்னாயே, நான் நினைத்தது எதவும் உன் விசயத்தில் இனி நடக்காதா? உனக்கு ஒன்று தெரியுமா இதுவரை நான் நினைத்தது எதையும் நடத்தி முடிக்காமல் விட்டதில்லை .உன் விசயத்தில் நான் உண்னை அடைந்த விதம் வேண்டும் என்றால் தவறானதாக இருக்கலாம் ஆனால் நீ என்னுடையவள் என்று நான் உணர்ந்தபிறகும், உன் மனம் மாறும்வரை காத்திருக்கிறேன் என்று உன்னை அந்த தனுசிடம் விட்டுவிட என்னை என்ன கையாலாகாதவன் என்றா நினைத்தாயா? நெவர் முடியாது.... முடியவே முடியாது ,உனக்கு வாழ்வோ சாவோ அது என்னோடுதான் என்று கூறியவன் கோபத்துடன் அந்த இடத்தைவிட்டு கீழே இறங்கிச்சென்றான்.

கீழே வந்தவன் எதிரில் வந்த காயத்திரியிடம் அக்கா வருகிறாள் எனவே நைட் டிபன் இனிப்புடன் கூடுதலாக மூன்று பேருக்கு இருக்கும்படி செய்துவிடுங்கள் என்று கூறிவிட்டு வெளியேறி, நீச்சல் குளத்திற்குச் சென்று தன்னுடைய தன் மனதின் கொதிப்பை நீரினில் மூழ்கி நீந்தி குறைக்க முற்பட்டான் .

மாடிப்பால்கனியில் நின்று நீச்சல் குளத்தில் நீந்திக்கொண்டிருந்த மஹிந்தனை நீச்சல் குளத்தின் அருகில் இருந்த சோடியம் விளக்குகளின் ஒளியில் தெரிந்த அவன் பிம்பத்தை, தான் அவனை பார்த்துக்கொண்டு இருப்பதை உணராமலேயே பார்த்துக்கொண்டு இருந்தாள் கவிழையா. அவள் மனது முழுவதுவும் குழப்பமே குடியிருந்தது .அவளால் அவனை கணவனாக ஏற்கவும் மனது இல்லை .ஆனால் தன் அம்மா சொன்ன, “உனக்கு அவர்தான் என்று முடிவானப்பிறகு கிடைத்திருந்த வாழ்க்கையை காப்பாற்றப்பார்” என்று கூறியபிறகு தன் வீட்டிற்குப் போகவும் மனம் வரவில்லை .அடுத்து என்னசெய்ய என்று மருண்ட மனதுடன் நின்றிருந்தாள் ,

.அவள் கற்பனையில் அவளின் எதிர்காலக் கணவன் என்பவன், படித்து நல்ல உத்தியோகத்திலுள்ள தன் மனவுணர்வுகளைப் புரிந்து நடக்கும் தென்றலைப்போல் குணம் உள்ள ஒருவன்தான் என கற்பனை செய்திருந்தாள். .

புயலை போன்ற வேகமும் மிரட்டும் அளவுடைய பணமும் எதிரில் இருப்பவர்களை தன் கண் பார்வையில் ஆட்டுவிக்கும் தன்மையுடைய மஹிந்தனைப் போல் ஒருவனுடன் தன் வாழ்வு இணையும் என்று அவள் கனவிலும் நினைத்துப்பார்த்ததில்லை. அவளுக்கு அவள் நின்றிருந்த இடத்தின் பிரம்மாண்டம் அவளுக்கு பழக்கம் இல்லாத சூழல் பயத்தினைக் கொடுத்தது. .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.