(Reading time: 21 - 41 minutes)

ப்போதுதான் மகி, சுராவிற்கு அவர் யார் என புரிந்தது.. இருவரும் மெளனமாக அவரை பார்க்க

“டேய்.. அர்ஜுன்.. நான் அன்னிக்கு சொல்லல... இந்த பய தான் பாடிguard என்று.. இவனை உன் கோல்ட் மெடல் வின் பண்ணின துப்பாக்கியால் போட்டுடா...” என்று வீராவேசமாக குரல் கொடுத்தார்.

இப்போது அர்ஜுன் “தாத்தா.. கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா.. அந்த பெண்ணோடு தான் எனக்கு நிச்சயம் நடக்க போகுது..”

“அட போடா. போக்கத்தவனே.. நான் சொல்றத கேட்டு இருந்தா ஆறு மாசம் முன்னாடியே உனக்கு கல்யாணம் முடிஞ்சு இருக்கும்..”

“என்ன சொல்ற தாத்தா..?”

“அப்போ என் friend பேத்தி ன்னு சொன்னேனே .. அது இந்த பெண்ணைத்தான்.. கலயாணத்தில் என் friend பையன் பார்த்து விட்டு அவன் பாமிலி போட்டோவில் சுபாவின் போட்டோ பார்த்தேன்.. உடனே உன்கிட்ட சொல்லி உனக்கு கல்யாணம் பண்ணலாம் நு பார்த்தா நீ யாரையோ லவ் பண்றதா சொல்லிட்ட.. சரி உனக்கு அவ்ளோதான் தலை எழுத்து என்று விட்டுட்டேன்..”

“ஓல்ட் man சொல்றத ஒழுங்க சொல்ல மாட்டீங்களா?”

“நீ முழுசா கேட்டியா?” என்று தாத்தாவும், பேரனும் எதிரும் புதிருமாய் இருக்க, பெரியவர்கள் இவர்களை சமாதனப் படுத்தி பின் நிச்சயம் செய்தனர்.

இந்த இடைவெளியில் அர்ஜுன் தான் ஆறு வருடங்களாக அவளை காதலிப்பதை பற்றி சுபத்ராவிடம் கூறினான். அவனின் நம்பிக்கையும், காதலும் கண்ட வருண், சுறா, நிஷா மூவரும் திகைத்து இருந்தனர். மற்றவர்களுக்கும் ஆச்சர்யமே.

இவர்கள் மட்டும் இல்லாமல் நான்கு ஜோடிகளுக்கும் நிச்சயம் நடைப் பெற்றது. பின் அன்றில்ருந்து ஒரு மாதம் கழித்து மூன்று ஜோடிகளுக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டது.. வருண், வர்ஷவிற்கு ஆறு  மாதம் கழித்து திருமணம் முடிவு செய்யப்பட்டது.

திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடக்க, மூன்று ஜோடிகளும் தங்கள் ஷாப்பிங் மற்றும் ஏற்பாடுகளுக்கு நேரம் செலவளித்தனர்.

திருமணம் முதல் நாள் மாலை நிச்சயதார்த்தம் நடந்தது.. மறுநாள் காலை முஹுர்த்தமும், பின் மாலையில் reception நடைபெற்றது.

எல்லோருமே பேர் சொல்லும் பணியில் இருப்பதால் கூட்டம் அலைமோதியது. இத்தனைக்கும் திருமனத்திற்கு பாதி பேரும், வரவேர்பிறகு பாதி பேரும் என்று பிரித்து கூப்பிட்டுமே, கூட்டம் தா\ங்கவில்லை.

reception முடியும் போது வழக்கபோல் பெண்கள், மாப்பிளைகளை பாட சொல்ல, ஆளுக்கு ஒரு பாடல் பாடினர்.

அர்ஜுன் முறை வரும் போது

மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை 

ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு கண்ணாடி கன்னம் உண்டு 

காயும் வெயில் காலம் பாயும் மழை நீயோ

கோடையில் நான் ஓடை தானே வாடையில் நான் போர்வை தானே

நீ கொஞ்ச நான் கெஞ்ச வேறென்ன இன்பம் 

நீண்ட நேரம் தோன்றுமோ -- (மாலை சூடும்)

சோலை மஞ்சள் சேலை சூடும் அந்தி வேளை

மாங்கனியாய் நீ குலுங்க ஆன் கிளியாய் நான் நெருங்க

அம்மம்மா அப்பப்பா என்னாகும் தேகம் 

ஆடை கொண்டு மூடுமோ -- (மாலை சூடும்)

என்று பாடி முடித்தான்.. கிட்டத்தட்ட அந்த படத்தில் வருவது போல் இருவரும் கை கோர்த்து பாடினர்.

அர்ஜுன் வாழ்க்கையில் மழையாக பொழிந்தாள் சுபத்ரா..

சில வருடங்கள் கழித்து, அர்ஜுன், சுறா இருவரும் ஊட்டி கண்டோன்மென்ட் ட்ரைனிங் சென்டரில் வேலை செய்தனர்.. சுபத்ரா ட்ரைனிங் incharge ஆகவும், அர்ஜுன் ஊட்டி ரேஜிமென்ட் சீப் ஆகவும் உயர்வு பெற்று இருந்தனர்.

இவர்களின் மகன் அபிமன்யுவோ சுராவின் வால் அத்தனையும் பெற்று , ஆனானப்பட்ட சுபத்ராவிற்கே சவாலாக இருந்தான்.

அவன் அடங்கும் ஒரே நபர் அர்ஜுன் மட்டுமே.. ஆனால் அர்ஜுனோ அபி சுராவை மடக்குவதை பார்த்து சிரித்துக் கொண்டு இருப்பான்...

இவர்கள் மட்டும் இல்லாமல் இவர்களோடு இணைந்த ராகுல் நிஷா, மிதுன் மகிமா, வருண் வர்ஷா எல்லோருக்கும் பிறந்ததும் மிக பெரிய வால்களாக இருந்தது.

அபிமன்யு தலைமையில் அதனை வாண்டுகளும் சரவெடி வெடிப்பதில்லை.. ஒவ்வொரு வீட்டிலும் ராக்கெட் வைத்து விளையாடினர்.

இந்த வாண்டுகளை பார்த்த மகி, சுறா, வருண் ஓடு சேர்ந்து நிஷாவும் அடுத்து என்ன வால்தனம் செய்யலாம் என்று யோசிக்க, அவர்களின் துணைகளோ இவர்களை எப்படி அடக்கலாம் என்று யோசித்தனர்..

இவர்களின் பாச மழைக்கு பொருத்தமாக அப்போது டிவி யில் போடப்பட்ட பாட்டு

“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை..”

என, அர்ஜுன் முகம் விளக்கெண்ணை குடித்தது போல் ஆனது.

ஹாய் friends...

இந்த பாயும் மழை நீயே.. கதையை எழுதி முடிக்க காரணமான அத்தனை friends க்கும் என்னுடைய நன்றிகள்... என்னாலே இப்படி ஒரு நகைச்சுவையோடு எழுத முடியுமா என்று யோசித்து அதன் பின் செய்த முயற்சி.. அது வெற்றிகரமாக அமைய காரணம் உங்கள் ஆதரவு தான்.. எல்லோருக்கும் மிகுந்த நன்றிகள்..

மீண்டும் ஒரு புதிய தொடரில் சந்திக்கிறேன்.. பாய்..

நிறைந்தது!

Episode 33

{kunena_discuss:1031}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.