(Reading time: 16 - 32 minutes)

33. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

கார்கில் தாக்குதலின் வெற்றிக்கு பிறகு அந்த டீமில் இருந்த எல்லோருமே ஒரு உற்சாக மனநிலையில் இருந்தனர்.

விமானபடை ஒத்துழைப்பு இருந்தாலும் கூட, அந்த மலைசரிவில் ஏறி எதிரிகளை வெல்வது என்பது மிகுந்த சிரமங்களுக்கு இடையில் கிடைத்த ஒன்றே. அர்ஜுன், ராகுல் இருவருமே அவர்கள் வீரர்களை மிகுந்த உற்சாகபடுத்தி கொண்டு இருந்தனர். அந்த குளிரிலும், பனியிலும் சோர்வு அடையா வண்ணம் பார்த்துக் கொண்டனர்.

இதில் நிஷாவின் பங்கு மிகுந்த பாராட்டு பெற்றது. ஒவ்வொரு நாளும் வீரர்கள் செல்லக் கூடிய தூரம் கணக்கிட்டு அதற்கு தகுந்தவாறு உணவு பொருட்களை அங்கே கொண்டு செல்ல ஏற்பாடு செய்தது, அதிக பனியின் போது அவர்கள் உடலுக்கு சூடு ஏற்படும் விதமாக energy ட்ரின்க் , மற்ற குளிர் ஆடைகள் கொடுப்பது இவை எல்லாமே சரியாக கிடைக்குமாறு பார்த்துக் கொண்டாள்.

 இது அவசர நேரம் என்பதால் வெளியில் இருந்து வர வேண்டிய மூல பொருட்களை அதிகமாகவே கொண்டு வந்து சேர்த்து வைத்தாள். எதிரிகள் பின் வாங்கிய அறிவிப்பு வெளியாகும் வரை பொருட்கள் சேர்த்துக் கொண்டு இருந்தாள். உள்நாட்டில் எங்காவது பிரசினைகள் ஏற்பட்டால் கூட அதனால் எந்த தாமதமும் ஏற்படாவண்ணம் முன்னெச்செரிக்கையாக ஏற்பாடுகள் செய்து கொண்டாள்.

இதை கவனித்த பாதுகாப்பு துறை மற்றும் ராணுவ தளபதி அவளின் முயற்சியை வெகுவாக பாராட்டினார்கள். நிர்வாகத்துறை என்பது அவளுக்கு எளிதாக இருந்தது.

சுபாவின் வேலை திறமையும் பாரட்டினார்கள். எதிரிகளின் ஊடுருவல் பற்றி தகவல் கிடைத்த முதல் நபர்களில் ஒருத்தி என்பது அவளை பாராட்டுவதற்கு முக்கிய காரணம். அதோடு கிடைத்த சந்தர்ப்பங்களில் அவள் ஈடுபட்ட போர், தகவல்களை சரியான முறையில் கொண்டு சேர்த்தது எல்லாமே அவளின் தனி சிறப்பாக பார்க்கப்பட்டது.

ராணுவ தளபதியோடு சேர்ந்து நடத்தினாலும் திட்டத்தின் மூளை அர்ஜுன் , அதோடு இருப்பதில் மிக கடுமையான தாக்குதலை சந்தித்ததும் அவன் குழு தான். ராகுலும் அதே விதமான தாக்குதலை சமாளித்தான்.

பரத், மிதுன் இருவரின் உளவு செய்திகள் தாக்குதல் சரியான முறையில் செயல்பட உதவியது.

இதற்காக இவர்கள் ஆறு பேர் மட்டும் கலந்து கொண்ட மீட்டிங் முடிந்து பாராட்டுதலையும் பெற்றுக் கொண்டார்கள்.

இரண்டு நாட்கள் லீவ் இவர்களுக்கு கொடுக்கப்பட்டது.  பரத் , மிதுன் இருவரும் அவர்கள் ஊருக்கு திரும்பி விட்டார்கள்.

அர்ஜுன் சுபா நிஷா இருவரிடமும் “ஹேய்... ரெண்டு நாள் என்ன பண்ணலாம் ?” என்று கேட்க,

சுறா “ஸ்கியெங் , ரிவர் ரப்டிங் போலாமா பாஸ் ?” என,

நிஷா “ஹே.. இது எல்லாம் இங்க இருக்குன்னு உனக்கு தெரியுமா சுறா ?”

“ஹ.. ஹ.. எனக்கு தெரியாமல் எதுவும் உண்டோ ?”

“ஹேய். ரீல் சுத்தாத.. உனக்கு யார் சொன்னா?”

“சர்வ வல்லமை பொருந்திய கூகுளே ஆண்டவர் தான்.. வேற யாரு ?”

“வழக்கமா உன்னோட ஆண்டவர் கிட்டே சாப்பாட்டு கடை எங்கேன்னு தானே கேட்பே.. ? இந்த தடவை என்ன முக்கியமான விஷயம் எல்லாம் தேடிருக்க ?”

“ச்சே..ச்சே..  நான் தேடினது சாப்பாட்டு கடை தான்.. ஆனால் இங்கே ஒண்ணுமே வரல.. சரி வேற என்னதான் இருக்குன்னு பார்த்தேன்.. இது கிடைச்சது.. சரி நாமும் இதுவரைக்கும் skiing பண்ணது இல்லையே... நம்ம கேப்டன் பிரபாகரன் கேட்டவுடனே சட்டுன்னு சொல்லிட்டேன்..”

அர்ஜுன் “ஹோய் .. என்ன லந்தா..?” எனவும்

“ஹை . பாஸ் நீங்க பேசினது என்ன பாஷை?”

“ஹ்ம்ம்.. சங்கம் வளர்த்த மதுரை தமிழ் மா “

“பாஸ்.. யு speak four language இன் தமிழ் ஆஹ்?

“உன் கடி தாங்க முடியல..?”

“ஓகே.. பாஸ்... சுறா.. உன் திறமை பார்த்து இங்கே எல்லாருக்கும் பொறாமை.. நீ கலக்கு செல்லம்..”

“போதும்.. ஸெல்ப் டப்பா.. skiing இப்போ சீசன் இல்லை சுபா.. சோ நாம ரிவர் ரப்டிங் போகலாம்..” என

“ச்சே.. இந்த சுபாவோட திறமை பார்த்து இந்த இமயமலை கூட பயந்துடுச்சு.. ஓகே.. கேப்டன் ரிவர் ரப்டிங்லே என் திறமைய காட்டறேன்..”

“ஐயோ .. சிரபுஞ்சிலே பெய்யற மழை கூட ஓயும்.. உன்னோட பேச்சு மழை ஓயவே ஓயாதா சுறா ?” நிஷா கேட்க,

“அது எல்லாம் கூடவே பிறந்தது.. என்னிக்கும் ஓயாது..” என்றாள் சுறா..

இவர்கள் பேசிக் கொண்டே ரிவர் ரப்டிங் operators ஆபீஸ்க்கு வந்து சேர்ந்தனர். எல்லா சீசனிலும் ரப்டிங் பண்ண முடியாது.. வருடத்தில் இரண்டு அல்லது மூன்று மாதம் தான் அந்த வாய்ப்பு கிடைக்கும். லடாக் சுற்றுலா தளங்களில் முக்கியமானது இந்த இந்துஸ் ரிவர் ரப்டிங் ..

இதை பற்றி அறிந்து இருந்த அர்ஜுன் grade ii ரப்டிங் தேர்ந்தெடுக்க சுராவோ grade iii லெவல் சில்லிங் டு ஷங் ரூட் தேர்ந்தெடுத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.