(Reading time: 44 - 88 minutes)

வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 19 - வத்ஸலா

VTVK

று மாதங்கள் கழிந்திருந்த நிலையில்

இந்துஜா வெட்ஸ் விஷ்வா!!!

அந்த மண்டப வாசலில் பெயர் பலகை மின்னிக்கொண்டிருக்க குடும்ப சகிதம் மண்டப வாசலில் வந்து இறங்கினான் விஷ்வா!!! மாப்பிளையை வரவேற்று ஆரத்தி எடுத்தார் அருண் அம்மா. விஷ்வாவுக்கு பின்னால் அபர்ணாவும் பரத்தும்!!!  அம்மாவின் அருகில் அருண்.

உள்ளே நுழைந்ததும் அருண் விஷ்வாவை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான். அது எப்படி விஷ்வாவை எல்லாருக்கும் பிடிக்கிறதோ???? அவன் இந்துஜாவை மணப்பதில் நிறையவே மகிழ்ச்சி அருணுக்கு. அவன் தோளில் கைப்போட்டுக்கொண்டு கேட்டான் விஷ்வா

'உங்க சிஸ்டர் ரூம் எங்கே இருக்கு...'

'டேய்... மானத்தை வாங்கதேடா... ' பின்னாலிருந்து அவன் அப்பா சொல்லிக்கொண்டிருப்பதை காதில் வாங்கியதாகவே தெரியவில்லை விஷ்வா.

'இல்ல ரெண்டு நாளா கொஞ்சம் கால் வலின்னு சொல்லிட்டு இருந்தா. கொஞ்சம் எக்சாமின் பண்ணிட்டு வரேன்...' என்றபடி யாரையும் பொருட்படுத்தாமல், பின்னால் ஒலித்த கேலி கூச்சலை கண்டுக்கொள்ளாமல்  புன்னகையுடன்  அவள் அறை நோக்கி நடந்தான் விஷ்வா.

திகைத்து சிவந்து போனாள் இந்துஜா 'நிஜமாகவே இப்படி வந்தவுடன் அங்கே வந்து நிற்பான் என அவள் எதிர்ப்பார்க்கவில்லை.

அங்கே இருந்தவர்களிடம் 'கால் வலின்னு ரெண்டு நாளா சொல்லிட்டு இருக்கா நான் கொஞ்சம் எக்ஸாமின் பண்ணனும் என் வொய்ஃபை. எல்லாரும் கொஞ்சம் வெளியே இருக்கீங்களா???' என்றான் படு கூலாக

'ஹேய்...' என்ற உற்சாக கூச்சல் அங்கே.

'அய்யோ... இப்போது என்ன செய்வேன் நான்???' தவித்து போனாள் பெண். வெட்கத்தின் முழு அர்த்தம் அப்போதுதான் தெரிந்தது இந்துவுக்கு.

'அதெல்லாம் நாங்க வெளியே போக முடியாது. என்ன செக் பண்ணணுமோ அப்படியே பண்ணிக்கோங்க..' இது கூட்டத்தில் இருந்து ஒரு பெண்.

'அப்படியா சரி அப்புறம் உங்க இஷ்டம். இப்படி வாடா நிலாப்பொண்ணு..' அவன் வெகு இயல்பாக சொல்ல

முகத்தில் கெஞ்சலும், வெட்கமும், சிணுங்கலும் தவிப்பும் போட்டி போட 'அய்யோ... ப்ளீஸ்... இங்கிருந்து போயிடுங்களேன்..' என்பதை போல் அவள் அவனை பார்த்து கைகூப்ப மலர்ந்து சிரித்தான் விஷ்வா.

'இன்னும் மூணு நாலு மணி நேரம் கழிச்சுத்தான் எல்லாரும் உன்னை எனக்கு கண்ணிலே காட்டுவாங்க. அதுவரைக்கும் நீ வரியா வரியான்னு எங்க அண்ணன் மாதிரி எல்லாம் என்னாலே தவிக்க முடியாது. அதான் வந்தேன்..' அவளை பார்த்து கண் சிமிட்டினான் விஷ்வா.

அவள் இன்னுமாக சிவந்து போக ' இன்னும் நிறைய இருக்கு. வெட்கத்தை கொஞ்சம் மிச்சம் வெச்சுக்கோ ஸீ யூ சூன் நிலாப்பொண்ணு..' அவள் கன்னம் தட்டிவிட்டு வெளியேறினான் விஷ்வா.

கீழே மண்டபத்தில் எத்தனை தவிர்க்க பார்த்தும் அபர்ணாவையும் பரத்தையுமே தொடர்ந்துக்கொண்டிருந்தது அருணின் பார்வை. சில நிமிடங்கள் கழித்து தற்செயலாக இருவரும் அவன் எதிரில் வந்துவிட மலர்ந்து புன்னகைத்தனர் இருவரும்.

'எப்படி இருக்கீங்க ரெண்டு பேரும்..' இதமான குரலில் கேட்டான் அருண்.

'ரொம்ப நல்லா இருக்கோம். நீங்க எப்படி இருக்கீங்க...' அழகான புன்னகையுடன் தெளிவான குரலில் கேட்டாள் அபர்ணா.

'நல்லா இருக்கேன்..' என்றான் ஒரு ஆழ்ந்த சுவாசத்துடன்.

அவளது விழி அசைவை கூட பரத் புரிந்துக்கொள்வதும் அவன் முகபாவத்தை கூட அபர்ணா  படித்துக்கொள்வதும் இந்த புரிதலுக்கு பெயர்தான் அன்னியோன்னியமா??? எங்கே எதை தவறவிட்டோம் என இப்போது புரிகிறது அவனுக்கு

அவளது குழப்பமில்லாத புன்னகை பரத்துக்கு நிறையவே நிறைவை கொடுத்தது. அருண் விலகி செல்ல என்ன தோன்றியதோ பரத்துடன் கைகோர்த்துக்கொண்டு இன்னமும் அதிகமாக ஒட்டிக்கொண்டாள் அபர்ணா.

'என்ன கண்ணம்மா..'

'ம்ஹூம்..' என்று புன்னகையுடன் இடம் வலமாக தலை அசைத்தவள் ஒரு முறை சுற்றி பார்த்துவிட்டு அவன் கன்னத்தில் சட்டென இதழ் பதித்துவிட்டு ஓட எத்தனிக்க, அவளை இழுத்துக்கொண்டான் தன்னோடு

'ஹேய்.. இது அக்கிரமம்டி.. நீ நினைச்சப்போ எல்லாம் எனக்கு முத்தம் கொடுக்கிற.. என்னை மட்டும் கிட்டே நெருங்க விட மாட்டேங்கிற...'

'அது அப்படிதான். நீ சொன்னதுதானே. கண்ணா... நான் எஸ் சொல்றவரைக்கும் எதுவும் கிடையாதுன்னு... எனக்கு எப்போ தோணுதோ அப்போதான் எஸ் சொல்லுவேன்' சொல்லிவிட்டு அவனை தள்ளிவிட்டு ஓடி விட்டிருந்தாள் அபர்ணா.

குளிர் புன்னகை அவன் இதழ்களில். அவர்களது திருமண தினத்தன்று இரவும் அந்த பின் வந்த நிகழ்வுகளும் இப்போது அவனது மனத்திரையில் ஓடத்துவங்கின.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.