(Reading time: 44 - 88 minutes)

'ன்ன பதில் பேச மாட்டேங்குற??? உறுத்துதா மனசு??? துரோகம் பண்ணா அப்படிதான் இருக்கும்..' அவனுடைய கோபம் கட்டுக்குள் அடங்கவில்லை என அவளுக்கு புரிந்தது. 'நீ நிஜமாவே என்னை லவ் பண்ணி இருந்தேனா நாளைக்கு ஹாஸ்பிடல் வா. நான் நடந்தது எல்லாம் விவரமா சொல்றேன். அப்புறம் அவனோட வாழலாமா வேணாமான்னு நீயே முடிவு பண்ணு. இப்போ போன் வெச்சிடறேன்..' துண்டித்திருந்தான் அழைப்பை

'துரோகி!!!' இந்த வார்த்தை அவளை கிழித்துக்கொண்டிருந்தது.

எப்படி இருந்தாலும் நான்தான் உன்னுடைய ஃபர்ஸ்ட் லவ். நீ என்னை எவ்வளவு மறக்க முயற்சி பண்ணாலும் தினமும், என் ஞாபகம் உனக்கு வந்திட்டேதான் இருக்கும். ' அந்த வார்த்தைகளில் இதயம் பற்றி எரிந்துக்கொண்டிருந்தது.

மன்னிக்க முடியவில்லை. அவளால் அருணை மன்னிக்கவே முடியவில்லை.

'என் மனதை, உணர்வுகளை, சந்தோஷத்தை என எல்லாவற்றையும் உனக்காக அர்ப்பணித்தேனே. அதற்கு எனக்கு கிடைத்தது துரோகி எனும் பட்டமா??? பொங்கியது அவள் மனம்.

'கேட்க வேண்டும் அவனை நேருக்கு நேராக சந்தித்து இந்த கேள்வியை கேட்க வேண்டும்!!!'

கண்களை இறுக மூடிக்கொண்டு தனது மனதை நிலைப்படுத்திக்கொள்ள முயன்றுக்கொண்டே இருந்தாள் அபர்ணா. மறுபடி கண்ணீர் வந்துவிடுவேன் என்று மிரட்டுவதை எப்படித்தான் புரிந்துக்கொண்டானோ அவளவன்.

'கண்ணம்மா...' வருடியது அவன் குரல் 'மறுபடியும் அழறியா என்ன???'

'ம்ஹூம்...' திரும்பவில்லை அவள்.

இரண்டு மூன்று நொடிகள் மௌனமாக கரைய திடீரென அவளை சுற்றி படர்ந்தது அவன் கரம். திடுக்கிட்டு குலுங்கினாள் அவள்.

'ப்ளீஸ்... பரத்.. எனக்கு வேண்டாம் ... நான் கொஞ்சம்... மனசு சரியில்லை... இப்போ வேண்டாம்.. .. ப்ளீஸ் பரத்..' படபடத்தாள் பெண்.

'கண்ணம்மா.. இரு இரு இப்போ என்னாச்சு ஏன் இப்படி பதட்டம்??? அவளை திருப்பி அவள் கண்களுக்குள் பார்த்தான்' 'எத்தனை வருஷம் ஆனாலும் நீயா எஸ் சொல்ற வரைக்கும் எதுவும் கிடையாது சரியா? அவள் கன்னம் தொட்டிருந்த கண்ணீர் துடைத்தான். 'பட்.. நீ இனிமே தினமும் ராத்திரி தூங்கறது மட்டும் என் கைக்குள்ளேதான். அப்படியே என் நெஞ்சிலே தலை வெச்சிட்டு தூங்கு..'

'இல்ல அதுவும் வேண்டாம் ப்ளீஸ்..'

'இல்ல எனக்கு வேணும். இது மட்டும் எப்பவும் உண்டு..' என்றான் உறுதியாக 'உன்னை அப்படியே விட்டேன்னா தினமும் தலைகாணியிலே முகத்தை புதைச்சிட்டு அழுதுட்டு இருப்பே. இதெல்லாம் வேலைக்கு ஆகாது.. நோ மோர் டிஸ்கஷன்ஸ் ஆன் திஸ். கஷ்டமா இருந்தா பழகிக்கோ. என் கைக்குள்ளே எப்படி வசதியோ அப்படி படுத்திட்டு தூங்கு..' அவளை தன்னோடு சேர்த்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான் அவன்.

'இதற்கு மேல் என்ன பேச???' அவன் கைகளுக்குள் சுருண்டு கண்களை மூடிக்கொண்டாள். அதே நேரத்தில் நிஜமாகவே அவன் கைகளுக்குள் ஏதோ ஒரு அமைதி கிடைப்பதை அவள் உள்மனம் உணர தவறவில்லை. எப்போது எப்படி உறங்கினாளோ அவளுக்கே தெரியவில்லை. நேரம் காலை ஏழை தொட்டிருந்தது.

'குட் மார்னிங் கண்ணம்மா. நல்ல தூக்கமா???.' அவனுடைய புன்னகையுடனே விடிந்தது அவளது காலை.

இருவரும் வெகு இயல்பாக ஒன்றாக இறங்கி கீழே வர அவர்களை வரவேற்றது விஷ்வாவும் அஸ்வினியும் சேர்ந்து போட்ட உற்சாக கூச்சல்.

'இவன் காலையிலேயே இங்கே என்ன செய்கிறான்???' என்று யோசித்தபடியே வந்தாள் அபர்ணா.

'வாங்க வாங்க மாப்பிள்ளை சார். கீழே படுத்திருந்த எங்க அபர்ணாவை காணோம்னு நாங்க வலை வீசி தேடிட்டு இருக்கோம். ராத்திரி எல்லாரும் தூங்கின பிறகு அவளை கடத்திட்டு போனது நீங்கதானா??? விஷ்வா அழகாய் சிரித்தபடியே சொல்ல

இதழ்களில் ஓடிய சின்ன சிரிப்புடன் செல்லமாய் அவன் வயிற்றில் குத்தினான் பரத் 'எருமை மாடு. தூக்கம் வரலைன்னு சும்மா பேசிட்டு இருந்தோம்டா ...'

'ப்ரதர் நீ என்ன பண்ணேன்னு நான் கேட்கவே இல்லையேபா... நீயா ஏன் எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லைங்கறே..' என்று கண் சிமிட்டய படியே அவன் அபர்ணாவை பார்க்க  அவள் முகத்தில் எதையுமே வெளிக்காட்டாத இறுக்கமான ஒரு பாவம்.

'சரி சரி சீக்கிரம் ரெடியாகுங்க. ஒன்பது மணிக்கு நல்ல நேரமாம். அப்போ நம்ம வீட்டிலே இருக்கணும் நீங்க ரெண்டு பேரும்..' அவள் மனம் புரிந்துக்கொண்டவனாக சூழ்நிலையை இயல்புக்கு நகர்த்தியபடியே சொன்னான் விஷ்வா.

'இன்று கண்டிப்பாக அருணை சந்தித்துதான் ஆக வேண்டுமா???  ஏதேதோ எண்ண அலைகள் அடித்தன அபர்ணாவின் மனதில்.

'விட்டுவிடலாம் எல்லாவற்றையும் மறந்து விடலாம். சொன்னது ஒரு பக்கம். 'இப்படி எல்லாம் யாரையும் நேராக எதிர்த்து பேசி எல்லாம் பழக்கம் இல்லைதான் அவளுக்கு..' யோசனையுடன் தனது அறைக்குள் நுழைந்த அபர்ணாவை மறுபடியும் துரத்த துவங்கியது அருணின் அழைப்பு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.